உலகின் மிகப் பெரிய எதிரி யார்!

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

ஸ்ரீதா


பாகீஸ்தானா,இல்லை.

அமெரிக்காவா,இல்லை.

சீனாவா,இல்லை.

ரஷ்ஷியாவா,இல்லை.

ஜப்பானா,இல்லை.

கொரியாவா,இல்லை.

ஜெர்மனியா,இல்லை.

பிரிட்டனா, இல்லை.

இஸ்ரேலா,இல்லை.

ஈரானா இல்லை.

பின்லேடனா,இல்லை.

முன்லேடனா( அமெரிக்கா,பின்லேடனை வளர்த்தியதால்),இல்லை.

ஹிட்லரா,இல்லை.

புஷ்ஷா , இல்லை.

சதாமா, இல்லை.

சதாமின் தாத்தாவா( அமெரிக்கா,பொருளாதாரத் தடையால், லட்சக் கணக்கான ஈராக்கிய குழந்தைகளை,அவசியமான மருந்து கூட கிடைக்க வழியில்லாமல் கொன்றதால்), இல்லை.

கம்யூனிஸமா,இல்லை.

முதலாளித்துவமா, இல்லை.

ஆத்திகமா, இல்லை.

நாத்திகமா, இல்லை.

மேற்கூறியவைகளைப் பற்றி பலருக்கும் , பல கருத்துக்கள் இருக்கலாம்.

மேற்கூறியவைகளினால் உலகமே மந்திரித்து மயக்கப் பட்டவர்களைப் போல், மாக்களாகவும் செயல்பட்டிருக்கலாம்.

ஆனால் எல்லாவற்றையும் விட உலகின் மிகப் பெரிய எதிரி, வறுமையே ஆகும்.

உலகின் உண்மையான மிகப் பெரிய WEAPONS OF MASS DESTRUCTION வறுமையேயாகும்.

உலகின் எந்த சக்தியும் செய்யாததை விட,உலக மக்களைக் கொல்வது வறுமையேயாகும்.

அதாவது ஒவ்வொரு 3 செகண்டிற்கும், ஒரு குழந்தை இறந்து கொண்டிருக்கிறது,வறுமையினால்.

உலகில் 225 தனி நபர்களின் வருட வருமானம், உலகின் 47% ஏழை மக்களின் வருட வருமானத்திற்கு சமமாக இருக்கிறது.

நாமெல்லாம் வாயைத் திறந்து பார்க்கும் பணக்காரர்கள், வாயை மூடி இந்த உலகத்தை சராசரியாக 60 வருடங்களில் பிரியலாம்.ஆனால் ஆறாயிரம் வருடம் வாழ்வதற்கு பணம் அவர்களிடம் இருக்கலாம்.

ஆனால் எழைகளிடமோ ஆறு நாள்கள் வாழ்வதற்கு கூட பணம் இல்லாமல் இருக்கிறது.

அரசாங்கம் எல்லோருக்கும் தரும் பணத்தை அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் சாப்பிட்டு சொந்த மக்களுக்கு பட்டை நாமம் போடுவதைப் போல, ஆண்டவன் எல்லோருக்கும் படைத்த உலகத்தை சிலர் சாப்பிட்டு, பலருக்கு பட்டை நாமம் போடுகிறார்கள்.

பங்களாக்களில் சிலர் நித்திரை செய்யும் போது, பட்டினியால் பலர் யாத்திரை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பேங்குகளில் பணம் போட்டு, சிலர் தூக்கத்திலும் பணம் சம்பாதிக்கும் போது,பலர் பணத்திற்காக உறக்கமின்றி நாயாக அலைகிறார்கள்.

எல்லோரும் ஒரு உலகத்தாய் பெற்ற மக்களாக இருந்தாலும் இந்த கொடுமை தொடர்கிறது.

மனித நேயம்,சுதந்திரம், மனித உரிமை என்று பேசும் நாடுகள், இதற்காக என்ன தான் செய்கிறது.

கையை அசைக்கச் சொல்லவில்லை,விரலை அசைத்திருந்தாலே வறுமைக்கு வறுமை கொடுத்திருக்கலாம்.

பணம் என்றால் பிணத்தை கூட தின்ன தயாராய் இருக்கிறார்களே ஒழிய, மக்கள் கொல்லப் படுவதை தடுக்க தயாராய் இல்லை.

வறுமையை ஒழிக்க சரியான பொருளாதார பாதை,

மக்களைக் கொல்லும் இராணுவ செலவுகள் இல்லாத பாதை,

போர், சண்டை, சச்சரவுகள் இல்லாத சமாதன பாதை,

நாம் எல்லோரும் ஒரு உலகத்தாய் பெற்ற மக்கள் என்ற உறவு,உரிமை பாதை,

பிறக்கும் பாதையும், போகும் பாதையும் ஒன்று என்ற தெளிவான பாதை, தான் சரியான பாதை.

முதலாலளித்துவ, கம்யூனிஸ, சோசலிஸ பாதைகள், சரியான பொருளாதாரப் பாதைகள் என்று சொல்லலாம்.

வெவ்வேறு பாதைகள் சொன்னாலும், சேரும் இடம் ஒன்று தான் என்பதில் இவர்களுக்கு கருத்து வேறு பாடு இல்லை.

அதாவது மக்கள் அனைவரும் அடிப் படைத் தேவைகளுடன், சுதந்திரமாக,சந்தோஷமாக, கஷ்டமில்லாமல் வாழ வேண்டும் என்பது தான்.

ஆனாலும் சேரும் இடம் இன்னும் தொலைவிலேயே இருக்கிறது,ஏன் ?

முதலில் பாதையில் நடப்பவர்களுக்கே பாதை பற்றிய தெளிவு இல்லாமை.

ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த உணவு உண்ண, சுதந்திரம் உள்ளது போல்( லட்டு தின்றால் என்ன, மைசூர் பாக்கு தின்றால் என்ன),அவரவர் விரும்பும் பாதையில் நடக்க சுதந்திரம் உள்ளது என்ற தெளிவு இல்லாமை.

மந்திரித்து திரித்து விட்டவர்களைப் போல், மற்ற பாதைகளில் நடப்பவர்களைக் கொல்வதிலேயே பணமும்,சக்தியும் செலவிடுவது.

எந்த பாதையில் சென்றாலும், செல்பவர்கள் சக மனிதர்கள் என்று பல சமயங்களில் மறக்கிறார்கள்,மறைக்கிறர்கள்.

முடிவில் யார் தான் நிம்மதியாய் இருக்கிறார்கள் ? யாரும் இல்லை என்பதே உண்மை.

பணக்காரர்களுக்கு பணத்தை சம்பாதிக்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் போராட்டம், நிம்மதியில்லை. எப்போது கொள்ளை போகுமோ,துப்பாக்கி , குண்டு கவலை.

ஏழைகளுக்கு உயிர் வாழ்வதே போராட்டம், நிம்மதியில்லை.

போராட்டம் வாழ்க்கையின் பகுதியாக இருந்தால் பரவாயில்லை, போராட்டமே வாழ்க்கையானால்,யாருக்குத் தான் நிம்மதி!

நிலவு வானில் இருந்தாலும், அதை, இயற்கையை பார்பதற்கு, ரசிப்பதற்கு, பணக்காரர்களுக்கும், ஏழைக்கும் முடிவதில்லை.

மனிதன் இயற்கையை விட்டு வெகு தொலவு வாழ்ந்து, வாழ்க்கையை தொலைக்கிறான்.

கண்ணிருந்தும் குருடனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

முதலாளித்துவத்தில், சொத்தும், வியாபாரமும் தனி மனிதர்கள் கைகளில்,FREE AND FAIR TRADE.

கம்யூனிஸத்தில் சொத்தும், வியாபாரமும் அனைத்து மக்களின் கைகளில்,CLASSLESS STATELESS SOCIETY.

சுதந்திரமான,நியாமான வர்த்தகம் இன்று வெறும் பொருள்கள் ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு செல்வது தான் என்று எண்ணி, செயல் படுத்தப் படுகிறது.

அதில் குண்டூசி விற்றாலும் சரி, குண்டு விற்றாலும் சரி.

பொன் விற்றாலும் சரி, பெண் விற்றாலும் சரி.

கல்யாணம் நடந்தாலும் சரி, கருமாதி நடந்தாலும் சரி.

இது முதலாளித்துவம் அல்ல.வெறும் பொருள்கள் மாத்திரம் அல்ல இடம் பெயர்வது. நியாயமும்,சுதந்திரமும் இடம் பெயர வேண்டும்.இது தான் முதலாளித்துவம்.

ஆனால் MONOPOLY, இரக்கமற்று சாப்பிட்க் கூட பாதுகாப்பு தராமல், வேலையை விட்டு நீக்குவது, உடலை விற்பதுவும், சுதந்திரம் என்று சொல்லி, விபச்சாரத்தையும் வியாபாரமாக்குவது, மற்ற நாடுகளின் வளத்தையும், உழைப்பை கொள்ளை அடிப்பது, சொந்த நாட்டு மக்களின் இரத்தத்தை,வியர்வையைக் கூட குடிப்பது முதலாளித்துவம் ஆகாது.

முதலாளித்துவ நாடு என்று சொல்லப் படுகிற அமெரிக்காவில், MAKE BELEIVE CAPITALISM தான் இருக்கிறது.உண்மையான முதலாளித்துவம் இல்லை.

ஏனைன்றால் இராணுவச் செலவுகளுக்காக, உலகிலேயே அதிகமாக செலவிடும் நாடு, தனது 35 மில்லியன் அமெரிக்க மக்கள் வறுமைக் கோட்டிற்கு வாழுவதையும், வியட் நாம் போர், வளை குடா போர் போன்றவற்றில் வீரமாக போரிட்டு, பல வற்றை இழந்து, இன்று நோய் கூட கவனிப்பதற்கு, சொந்த அமெரிக்க அரசாங்கத்தாலேயே கைவிடப் பட்டது நடந்திருக்குமா!

வர்க்கமற்ற, அரசற்ற சமுதாயம் என்று சொல்வது, நல்ல பழைய அனுபவங்களை சிதைப்பது, மனிதனின் சொந்த விஷயமான கடவுள் விஷயத்தில் தேவையில்லமல் இருந்தாலும் தலையிடுவது, கோயில்களை இடிப்பது, ருமேனியா அதிபர் போன்று பாத் ரூம் கூட தங்கத்தில் கட்டுவது எல்லாம் கம்யூனிஸம் ஆகாது.

முதலாளித்துவம் பேசினாலும், கம்யுனிஸம் பேசினாலும், மக்களுக்கு அடிப் படை வசதிகள் திட்ட மிட்டு, காலவரையரையுடன் நிறைவேற்றி, குற்றங்கள் குறைக்க வழி செய்து, மனித உரிமைகளுக்கு உறுதி கொடுத்து, சுதந்திரமாக மக்களை வாழ செய்வதே முதலாளித்துவமும், கம்யூனிஸமும் ஆகும்.

வேறு என்ன செய்தாலும், அது MAKE BELEIVE CAPITALISM AND COMMUNISAM ஆகும்.

உலகிலேயே அதிக நாடுகளுடன் போர் புரிந்த நாடும், அதிக இராணுவச் செலவு செய்யும் ஒரே நாடு அமெரிக்கா தான்.

1890-1999 வரை 128 முறை மற்ற நாடுகளுடன் போர் புரிந்துள்ளது. இப்போதய ஈராக் போரையும் சேர்த்தால், உலகிலேயே அதிக முறை

போர் புரிந்ததற்காக அவார்ட் கொடுக்கலாம்.

G-7 நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவு செய்யும் இராணுவச் செலவை விட அமெரிக்கா செய்யும் செலவு அதிகம்.

அமெரிக்காவின் 2003 வருட இராணுவ பட்ஜெட் 396.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

அமெரிக்காவின் இராணுவ பட்ஜெட் ரஷ்யாவை விட, 6 மடங்கு அதிகம் ஆகும்.

அமெரிக்காவின் இராணுவ பட்ஜெட் , ROUGHE STATES என்று சொல்லப் படுகிற, க்யூபா, ஈரான்,ஈராக், லிபியா, வட கொரியா,சூடான்,சிரியா என்ற 7 நாடுகளை விட, 26 மடங்கு அதிகமாகும்.

அமெரிக்கா, NATO,ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான், இவர்களின் மொத்த இராணுவ பட்ஜெட், உலக மொத்த இராணுவ பட்ஜெட் தொகையில் மூன்றில் இரண்டு பங்காகும்.

அமெரிக்காவின் இராணுவ பட்ஜெட்டின் 70% தான் , 7 ரவுடி நாடுகள் என்று அமெரிக்காவால் சொல்லப் படுகிற நாடுகளுடன், ரஷ்ஷியா,சீனா ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்தாலும் உள்ள இராணுவ பட்ஜெட்.

இன்னும் புள்ளி விபரங்கள் கொடுத்துக் கொண்டே போகலாம், வருத்தமான விசயமல்லவா,சலிப்பு ஏற்படுகிறது.

இராணுவச் செலவு, என்ன பேசினாலும், முடிவில் மக்கள் கொலையில் தானே முடியும்.

பிறப்பதற்கு முன் எங்கே இருந்தோம்! இந்தியரா, அமெரிக்கரா, இந்துவா, முஸ்லீமா, யாரும் பார்த்ததில்லை!

இறந்ததிற்கு பின் எங்கே செல்வொம்! ஈராக்கா, சீனாவா, ஆப்ரிக்காவா, பாகீஸ்தானா, யாரும் பார்த்ததில்லை!

வாழும் போது, நாம் அனைவரும் மனிதர்கள் என்பது நிஜம். பின் எதற்காக இந்த பிளவு, வெறி, இராணுவச் செலவு!

மனிதர்கள் இயற்கையை உணர்ந்து, போர் இல்லாமல், இராணுவச் செலவை ஒழித்து, உலகின் மிகப் பெரிய எதிரியான வறுமையை ஒழிக்க ஒன்று பட்டு செயல் பட்டால், நாளை நமதே!

sridhasridha@yahoo.com

Series Navigation