உலகத்தின் மாற்றம்
சத்தி சக்திதாசன்

திறவாய் திறவாய் உன் மனக்கதவை நீ
திறவாய்
மறவாய் மறவாய் ஏழையின் கண்ணிரை
மறவாய்
தருவாய் தருவாய் உன்கருணைக் கரங்களால்
தருவாய்
பெறுவாய் பெறுவாய் ஏழைத் தோழனின் மானசீக வாழ்த்துக்களை
பெறுவாய்
காண்பாய் காண்பாய் ஏழையின் சிரிப்பில் நீ இறைவனைக்
கண்பாய்
தோற்றுவாய் தோற்றுவாய் பிரிவற்ற ஓர் சமுதாயத்தை
தோற்றுவாய்
போற்றுவாய் போற்றுவாய் உண்மை தொண்டனின் சேவையை
போற்றுவாய்
காட்டுவாய் காட்டுவாய் உண்மை மனித நேயத்தை நீ
காட்டுவாய்
நீக்குவாய் நீக்குவாய் நிச்சயமாய் வர்க்க பேதங்களை நீ
நீக்குவாய்
நோக்குவாய் நோக்குவாய் தூர நோக்கோடு எதிர்காலத்தை
நோக்குவாய்
மாற்றுவாய் மாறுவாய் தோழனே இவ்வுலகை ஓர் நாள்
மாற்றுவாய்
ஏற்றுவாய் ஏற்றுவாய் என்மனதில் மனிதனில் நம்பிக்கை எனும் ஒளிவிளக்கை
ஏற்றுவாய்
சத்தி சக்திதாசன்
sathnel.sakthithasan@bt.com