உயிரின் சொற்கள்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

தமிழ்மணவாளன்


என்ன வார்த்தைகள்

எழுதப்படுமென்பது

தெரியாது.

உணர்வின் வீழ்ச்சியாய்

கொட்டப்போகுமதையெப்படி

முன்கூட்டியே அறிதல் சாத்தியம்.

வஈய்ப்புண்டு பிறிதொரு தருணம்

அதற்கு

போகுமதன் போக்கில்

விடவும் மனசில்லாமல்

தவிக்குமிதை ஆராதிக்கச் சொல்லுமிதை

என்ன சொல்வது

ஏதேனும் இருக்கட்டும்

வாழ்வின் சுழற்சியின்

ஒரு சுழிப்பின் குமிழ்

இருக்கட்டும் அது போதும்

உயிர்க்குமென்னாளும்.

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

author

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்

Similar Posts