உணவு அருந்தும் நாகரிகம்

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue


அமெரிக்காவில் இருக்கும் நாம் பல விதங்களில் படும் அவஸ்தையில் முக்கியமானது பெரிய உணவு விடுதியில் நடக்கும் விருந்தில் எந்த கரண்டியை எந்த முள்கரண்டியை எடுத்து எதனைச் சாப்பிடுவது, எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் படும் அவஸ்தைதான்.

இதோ சில எளிய வழிமுறைகள்

* தட்டு இருக்கிறது. அதன் இருபுறமும் கரண்டிகளும் முள் கரண்டிகளும் வைத்திருக்கிறார்கள். எந்த உணவுக்கு எதனை பயன்படுத்துவது ?

இருக்கும் கரண்டிகளை வெளியிலிருந்து உள்ளாக உபயோகப்படுத்துங்கள். அதாவது முதலில் வரும் சாப்பாட்டுக்கு வெளியே இருக்கும் கரண்டிகளை பயன்படுத்துங்கள். அடுத்து வரும் உணவுக்கு அதற்கடுத்து உள்ளே இருக்கும் கரண்டியை உபயோகப்படுத்துங்கள்.

* ஒரு கரண்டியையோ முள்கரண்டியையோ உபயோகப்படுத்திவிட்டால் அதனை மீண்டும் மேஜை மீது வைக்காதீர்கள். மேஜைத்துணி கறையாகிவிடும். தட்டின் மீதே வையுங்கள். முடிந்த தட்டென்றால், தட்டின் வலது ஓரம் சாய்த்து வைக்க வேண்டும்.

* சூப் சாப்பிடும்போது சூப் கரண்டி கொண்டு சூப்பை உங்களுக்கு எதிர்திசையில் கரண்டியை எடுக்க வேண்டும். சூப் கரண்டியின் பக்கவாட்டிலேயே சூப்பை சாப்பிடவேண்டும். முடிந்ததும், சூப் கிண்ணத்திலிருந்து சூப்பை எடுத்து சூப் கிண்ணத்தின் கீழிருக்கும் சாஸரில் வைக்க வேண்டும்.

***

Series Navigation

செய்தி

செய்தி