உசிலி உப்புமா.

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue


அரிசி : 3/4 ஆழாக்கு

பயற்றம் பருப்பு : 1/4 ஆழாக்கு

கடுகு : 1/4 ஸ்பூன்

தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்

துவரம் பருப்பு : 1/2 ஸ்பூன்

உப்பு : 3/4 ஸ்பூன்

பெருங்காயம் : சிறிதளவு

உளுத்தம் பருப்பு : 1/2 ஸ்பூன்

வற்றல் மிளகாய் : 3

முதலில் அரிசி , பயற்றம் பருப்பு இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வெண்கலப் பானையில் அரைக் கரண்டி எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம் இவற்றைப் போட்டு, ஒன்றரை ஆழாக்கு நீர் ஊற்றி, தேங்காய் துருவலையும் போட வேண்டும் தண்ணீர் நன்றாகக் கொதிக்கும் போது உப்பு சேர்த்து பின் வறுத்த, அரிசி, பயற்றம் பருப்பை சிறிது சிறிதாக போட்டு கிளறி கருவேப்பிலை சேர்க்கவும். ஒரு குழிவான பாத்திரத்தில் நீர் விட்டு அதனால் வெண்கலப்பானையை மூடி வைத்தால் அடி பிடித்துக் கொள்ளாமல் இருக்கும், பக்கங்களில் ஒட்டாமல் வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.

Series Navigation