ஈஸுக்கா ரூமி

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

இளைய அப்துல்லாஹ்


லண்டனில் சுரங்க ரயில்கள் எனக்கு மிகவும்பிடிக்கும். அதில் பயணம் செய்யும் போது முழுநேரமும் படிக்கலாம். ஒரு நல்ல நாவலை ஒரு நல்ல சஞ்சிகையைப்படிப்பதற்கு என்பயணங்கள் அமைவதையிட்டு நான் மகிழ்ந்து போவேன். ஒரு முறை ை ?பார்க்கில் நடைபெற்ற ஜப்பானிய கலாச்சார விழாவுக்கு போனேன். ை ?பார்க் ஒரு நல்ல காற்றோட்டமான இடம் எனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் செல்வேன். அந்த ப+ங்காவின் பெஞ்சில் உட்கார்ந்து கவிதைகள் எழுதுவது எனக்கு மிகவும் விருப்பமானது. பலகவிதைகளை எழுதியிருக்கிறேன்.

ஜப்பானிய கலாச்சார விழா மிகவும் அற்புதமாக இருந்தது. பரந்து வெளியாய் இருந்த பார்க்கில் ஒவ்வொரு “ ?ட்” அடித்து மேடை செய்து ஒவ்வொரு ஜப்பானிய கிராமத்து லாவண்யங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

சில இடங்களில் மக்களையும் இணைத்து களிப்புகளில் சேர்த்துக் கொண்டார்கள். இளம் வெயில் மனதுக்கு மிகவும் நன்றாக இருந்தது. லண்டனில் “வெதரையும் வைபையும்” நம்பக்கூடாது என்றதொரு பழமொழியை வெள்ளைக்காரர் அடிக்கடி சொல்வார்கள்.

இந்தக்களேபரங்களுக்கு மத்தியில் பார்க்கில் உள்ள தெப்பக்குளமும் அதில் நீந்துகின்ற செம்பாட்டு நிற வாத்துகளும் எந்தச் சலனமுமில்லாமல் தம்பாட்டுக்கு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தன.

ஒரு வயதான மூதாட்டி தனது உதவியாளரோடு வீல் செயாரில் வந்து ஒரு றாத்தல் பாணை பிய்த்து பிய்த்து தண்ணீருக்குள் வாத்துகளுக்கு வீசிக் கொண்டிருந்தாள். வாத்துக்கள் இப்பொழுது குழுமிவிட்டன. வாத்துகளுக்கு உணவு, பாண்கிடைத்த சந்தோஷத்தில் திளைத்துவிட்டன.

மிகப்பெரிய மேளங்கள் முழங்கத் தொடங்கிவிட்டன பிரமாண்டமானவை அந்த மேளங்களை நான் ஆபிரிக்கரின் விழா ஒன்றில் கண்டிருக்கிறேன். அதற்கு முதல் இந்தியா போன போது மசூதி ஒன்றின் மினாராவில் கண்டிருக்கிறேன் இப்பொழுது தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள சில மசூதிகளில் பெரிய மேளங்கள் அடித்து தொழுகைக்காக அழைப்பது வழமையாக இருக்கிறது.

மேளங்களில் ஒரு அற்புதமான தாளக்கட்டு வாலாயப்படுகிறது. பியர் மயக்கத்தில் இருப்பவர்களுக்கு வயது வித்தியாசமின்றி மேளச் சத்தம் உருக்கொடுத்துக் கொண்டிருந்தது வாழ்வின் அனுபவங்களை அப்படியே உறுஞ்சிக் கொள்ள வேண்டும் என்பது ஐரோப்பியரின் சிந்தனை. அதற்காக கிழமையில் ஐந்து நாள் உழைப்பு இரண்டு நாள் ப+ரண ஓய்வு. சந்தோஷமாக குடும்பத்துடன் காதலியுடன் காதலனுடன் கழிக்க வேண்டும் என்பது நல்ல எண்ணம் தானே.

ஐப்பானிய களியாட்ட விழாவில் கோலாட்டம் அற்புதமாக இருந்தது. பாரம்பரிய உடையணிந்த இளம் அழகான பெண்கள் கலர் கலரான கம்புகளை தலைக்கு மேலால் சுழட்டி சுழட்டி தட்டினார்கள். அவர்கள் துள்ளும் பொழுது வலு சோக்காக இருக்கும். ஒரு ஆட்டம் முடிந்தவுடன் மறு ஆட்டம் அதில் பார்வையாளர்களையும் இணைத்துக்கொண்டார்கள். எனக்கு இரண்டு அழகான கம்புகளைத் தந்தார்கள். ஜோடி ஜோடியாக துள்ளித் துள்ளி ஆடவேண்டும். நன்றாகத்தான் இருக்கும் கோலாட்டம் நல்ல விளையாட்டு. கட்டிய கயிற்றினுள் ஒரு பெட்டி வடிவ மேடையில் இப்பொழுது ஒரு இருபது ஜோடிகள் சேர்ந்து விட்டார்கள்.

அவர்கள் கலையில் சுவாரஸ்யமானவர்கள் ஆண்களை பெண்களோடு இணைத்து விட்டார்கள். ரம்மியமான ஒரு துள்ளல் இசைக்கு ஏதுவாக தாளக்கட்டோடு தெய்யா… தெய்.. தெய்யா கோலாட்டம் நடக்கிறது.

ஜப்பானியப் பெண்கள் உருவத்தில் சின்னதாக இருப்பவர்கள் தான் அதிகம். சின்ன ஆண்களின் சினேகம் தான் அவர்களுக்கு அதிகம் விருப்பம். பெரிய சைஸ் ஆண்கள் விடயத்தில் அவர்களுக்கு பயம் இருப்பதாக எனது ஒரு நண்பனின் ஜப்பானியக் காதலி சொன்னது ஞாபகம்.

டக்… டக்… டக் என்று தாளத்திற்கேற்ப “கோல்” தட்டப்படுகிறது. ஜப்பானிய பாரம்பரிய உடையணிந்த பெண்மணி பிழையாக தட்டுபவர்களை நேர்படுத்திக் கொண்டிருந்தாள். கோலாட்டத்துக்கு அழைத்த போது வெள்ளைக்காரர்கள் ஒருவர் தான் வந்திருந்தார். ஆபிரிக்க கறுப்பர்கள் கோலாட்டம் பற்றி தெரிந்திருப்பர். கோலாட்டம் ஆபிரிக்க கலையோடு சேர்ந்த ஒன்று. அடுத்தது நானும் இன்னும் ஜப்பானியருமாக இருந்தோம். எனது சோடியாக ஒரு ஜப்பானியப் பெண் வாய்த்தாள். மூக்கு அவ்வளவு சப்பட்டையாக இல்லை. அழகாக இருந்தது. பெயரை விசாரித்தேன். “ஈஸ_க்காரூமி|| என்றாள் “நல்ல பெயர்” என்றேன.; கண்ணைச்சுருக்கி சிரித்தாள். சிரிக்கும் போது கன்னங்களில் லேசாக குழி விழுந்தது. பெண்கள் சிரிக்கும் போது குழி விழுவது அழகாகத்தானே இருக்கிறது. “எங்கே நீங்கள்” அவளுக்குத் தெரியும் நான் பிரிட்டிஷ் இல்லை. எழுத்தாளர் நா.கண்ணன் அடிக்கடி சொல்வார் நாங்கள் வெளுப்பான தோலையுடையவர்களாய் இருப்பது வெள்ளைக்காரருக்கு பெரிய விடயமல்ல. வெளுப்புத்தோல் வெள்ளைக்காரருக்கு எந்த மயக்கத்தையும் ஏற்படுத்தாது நாங்கள் அவர்களுக்கு கறுப்பர் தான்.

இப்பொழுது ஐரோப்பிய நாடுகளில் அனேகமான எங்கடை மற்றும் வெள்ளைக்காரப் பெண் பிள்ளைகள் கறுப்பர்களை “போய்பிரண்டு” களாக வைத்திருக்கின்றார்கள். அதனை இப்பொழுது மிக அதிகமாகவே காணலாம். கறுப்பர்கள் தான் “செக்ஸ்” விஷயத்தில் வலு உசாராக நின்று பிடிக்கிறார்கள் என்பது அவர்கள் வாதம். அதனால் மொட்டையடித்த வீரியமுள்ள கறுப்பு நிற ஆண்களுக்கு இளைஞர்களுக்கு வலுபோட்டி. யார் யாரை பிடிப்பது என்பது.

ஈஸாக்காரூமி என்னைப்பார்த்தாள் “நான் ஸ்ரீலங்கன்” என்று சொன்னேன். சிறிய கண்களை கொஞ்சம் விரித்து திறந்தாள். “உனக்குத் தெரியுமா” என்றேன் “ஆம் நான் உலகத்தில் விரும்பும் நாடு இலங்கை” என்றாள் எனக்கு மகிழ்ச்சி ஆனால் இலங்கை ஒரு மிகச் சிறந்த வளமான நாடு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த வளத்தை அரசியல் வாதிகளும் யுத்தப்பிரியர்களும் என்னமாதிரி நாசப்படுத்தி வைத்திருக்கிறார்கள். என்ன இல்லை எமது இலங்கையில் தெங்கு, பனை, தேயிலை, றப்பர், கொக்கோ, கராம்பு, சாதிக்காய், மீன், நெல், குளிர், சூடு, காற்றோட்டம், கடல்வளம், காடு, மலை, ஆறு இந்த இண்டாயிரத்து முன்னூற்று முப்பத்து இரண்டு சதுரமைல்களுக்குள் என்ன இல்லை. தேசத்தின் அழிவு தேசத்தின் கஷ்டம் என்னைக் கலவரப்படுத்தியது.

“உனக்குத்தெரியுமா தெ ?ிவலை பீச்சில் நான் ஒருநாள் முழுக்க குளித்திருக்கிறேன். நிலாவெளி கடற்கரையில் அந்த நிர்மலமான தண்ணீரில் நான் நீந்தியிருக்கிறேன்”. பாசிக்குடாவுக்கு சென்றிருக்கிறேன். ஈஸ_க்கா சொன்ன போது எனக்கு ஆச்சரியம் வந்தது அடக்கிக்கொண்டேன்.

இது வெளிநாடுகளில் சகஜம். லீவுகாலங்களில் மற்றைய நாட்களில் உழைக்கும் பணத்தை சேமித்து வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு நாட்டுக்கு ெ ?ாலிடே போவது. அவர்கள் வருஷ ஆரம்பத்திலேயே லீவு காலங்களுக்கு எங்கு போவது என்பதனை தீர்மானித்துவிடுவார்கள். இளைஞர்கள் தமது பிரண்டுகளோடு ெ ?ாலிடேயைக் கழிக்கப் போய் விடுவார்கள்.

“கஜுர்னா பீச்போகவில்லை” அடே… அவள் எவ்வளவு ஆழமாகத் தெரிந்து வைத்திருக்கிறாள். “ஏன் போகவில்லை” கேட்டேன் “யுத்தம் தான் எனக்குப் பிடிக்கவில்லை இவ்வளவு சின்ன நாட்டில் ஏன் யுத்தம் யாருக்காக இது ?” அவளின் கேள்விக்கு இருபது வருடக்கதை சொல்லவேண்டும்.

கம்புகளின் ஓசை வலு லாவகமாக வந்து கொண்டிருந்தது. அந்த இடம் இப்பொழுது பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. ஜப்பான் காரர்கள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஏதோ தங்கள் வீட்டுக்கலியாணம் போல் வந்து குவிந்திருந்தார்கள். பெரிய விழாக்களுக்கு ை ?பார்க் மைதானம் ஒரு வசதியான இடம்.

கடைசிச்சுற்று வேகமாக கம்புகள் அடிக்க வேண்டும். ஒழுங்கு படுத்தும் பெண்மணி சைக்கினை செய்கிறாள். அவளுக்கு ஜப்பானிய மொழிமட்டும் தான் தெரியும். மூக்கால் கத்தி சொல்ல வேகமாக இசை கூடி பின்னர் குறைகிறது. முடிந்துவிட்டது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். கம்பு விளையாடிய எல்லோருக்கும் பரிசு தருகிறார்கள். ஒரு ரீஷேட், ஒரு அழகான விசிறி, ஒரு பிறேம்போட்ட அழகிய ஓவியம். தலை குனித்து தருகிறார்கள். நன்றியோடு விடைபெற்றேன்.

பின்னால் ஈஸுக்கா வந்தாள். வா ஒரு ஜப்பானிய ரீ குடிப்போம் அங்கு ஜப்பானிய தரம்வாய்ந்த உணவுகளின் ரெஸ்ரூரண்டுகள் பல சுவையான மணமான உணவுகளை உடனுக்குடன் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தன. நாமும் போய் ஒரு ஓரத்தில் இருந்த ரெஸ்ரூரண்டில் போய் அமர்ந்தோம்.

இரண்டு “கிறீன் ரீ” ஓடர் பண்ணினாள். “ஏன் இரண்டு ஒன்று போதுமே இல்லை இரண்டு குடிப்போம் ஒன்று உடம்புக்கு நல்லது மூலிகையால் செய்யப்பட்டது இது. இரண்டாவது உன்னோடு கதைக்க வேணும்” வெள்ளை நிற பில்டர் போட்ட சிகரட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தாள். எனக்கும் ஒன்று தந்தாள். இரண்டு கேற்றில்களில் “கிறீன் ரீ” வந்தது. சப்பட்டை மூக்கும் கட்டையும் தடித்ததுமான உருவமுடையவரும் ஜப்பானிய பாரம்பரிய உடை உடுத்தியவருமான “வேற்றர்” வந்து “ரீ” பரிமாறினார். சிரித்தார் பின்னர் தலையைக் குனித்து விட்டுச் சென்று விட்டார்.

சிகரட்டை உன்னியிழுத்து மென்தல் புகையை வெளியில் விட்டவள் திடாரென்று கேட்டாள் “ஏன் உங்கள் நாட்டில் சிறுவர்கள் அதிகளவு செக்ஸில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்” எனக்கு தூக்கி வாரிப்போட்டது. ஒரு ஜப்பானியப் பெண் எவ்வளவு விபரமாக அறிந்து வைத்திருக்கிறாள். “உனக்கு எப்படித் தெரியும்”

நான் அடிக்கடி இலங்கைக்கு போகிறவள். நான் சிறுவர்கள் பற்றி படித்திருக்கிறேன். அதுமட்டுமல்ல கல்கிஸையில் ஒரு சிறுவர்களை பாலியல் தேவைகளுக்காக கொடுக்கும் ஒரு ஏஜன்டைச் சந்தித்தேன். என்னிடம் பையன்கள் வேண்டுமா என்று கூடக் கேட்டார்கள்.

இது இலங்கையில் இருக்கும் மிகப்பெரிய “செக்ஸ்” வியாபாரமாகும். இதனை எப்படியாவது நிறுத்த வேண்டும் என ஈஸுக்கா சொன்னாள்.

ஈஸுக்கா பற்றியும் அவளது அக்கறை பற்றியும் எனக்கு மரியாதை ஏற்பட இது காரணமாயிற்று. அவளோடு நிறையக்கதைக்க அன்று சந்தர்ப்பம் இருந்தது. அறிவாக உரையாடினாள். பல நாடுகளுக்கு பயணம் செய்த அனுபவம் அவளுடையது உங்களுரில் எத்தனை வீதம் முஸ்லிம்கள்.

“எட்டு வீதம்” எட்டு வருடங்களுக்கு முன்பு கேள்விப்பட்டதைச் சொன்னேன். ஆனால் இப்பொழுது பத்து வீதமிருக்கும் என்பதனையும் சொன்னேன். “காதல் பற்றி நீ என்ன நினைக்கிறாய்” என்று கேட்டாள். காதல் அற்புதமானது அது உணர்வு மேலீடானது. ஏன் அதிலென்ன சந்தேகம் உனக்கு ? “நான் ஒரு ஸ்ரீலங்கனைக் காதலித்தேன் ஈஸுக்கா சொன்ன போது நான் ஆர்வப்பட்டேன் “பிறகு” அவனை நான் ஒரு ே ?ாட்டலில் தான் முதன் முதலில் சந்தித்தேன். அவன் பெடிங்ரனினுள்ள அன்டர்கிறவுண்ட் ரெயில் நிலையத்துக்கு முன்பாகவுள்ள ஒரு நான்கு நட்சத்திர ே ?ாட்டலில் வேலை செய்தான். எனது விதி, அடிக்கடி லண்டன் வரும் பொழுது அந்த ே ?ாட்டலில் ரூம் எடுத்துத் தங்குவேன் அங்கு ரூம் கொஞ்சம் மலிவு.

பிரிட்டிஷ் ரெலிகொம் வேலையாக ஜப்பானிலிருந்து ஒரு நாள் இரவு வந்தேன். அவனை அன்று தான் அந்த ே ?ாடடலில் ரிஸப்ஸனில் காணுகிறேன். ஏற்கனவே புக் செய்திருந்தேன் ரூமை. “ ?லோ” சொன்னான் இரவு பன்னிரண்டு மணி எனக்குத்தூக்க மயக்கம். “ ?லோ” சொன்னேன்.

எனது ரூம் நம்பரைச் சொன்னேன். அது ஏற்கனவே “புக்” ஆகிவிட்டது என்றான். இந்த இரவில் எங்கு போவது என்று தடுமாறினேன் ஆனால் அவன் சிரித்தான். பின்னர் ஜோக் என்று சொன்னான் எனது ரூம் வரை வந்து எனக்கு உதவி செய்தான் விடை பெறும் போது எனது இரண்டு கைகளையும் பற்றினான். கன்னத்தில் முத்தமிட்டான். நான் கோபிக்கவில்லை. அது உணர்ச்சி ப+ர்வமாக இருந்தது. பெயர் கேட்டேன் “நெளஷாட்” என்றான். மீண்டும் சொன்னான் மொ ?மட்நெளஷாட் “ஓ முஸ்லிமா” என்றேன் “ஓம்” என்றான் அன்று தான் ஒரு முஸ்லிம் என்னை முத்தமிட்டிருக்கிறான் கன்னத்தில்…

நான் குளித்துவிட்டு ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தேன். லண்டனில் அது குளிர்காலம் “வைன்” எடுத்து வர மறந்துவிட்டேன். கொஞ்சம் வைன் இருந்தால் நல்லாயிருக்கும் என்று யோசித்தேன் கொஞ்ச நேரத்தில் எனது சிகரட் முடியும் நேரத்தில் எனது “ரூம்” கதவைத்தட்டினார்கள் யாரோ – சத்தம் கேட்டது போய்த்திறந்தேன் கையில் ஒரு போத்தல் சில்லிட்ட குளிர் வைற் வைனோடு நெளஷாட் அவனை உள்ளே விருப்பத்தோடு கூப்பிட்டேன்.

*

எனக்கு இரத்தம் வந்தது அன்று தான்நான் முதல் முதலில் செக்ஸ் செய்தேன் அவனோடு தான் எனது முதல் அனுபவம் நன்றாகவே இருந்தது. நல்ல ஒரு மொடல் பையன் போல இருப்பான் நெளஷாத். அவன் என்னைக் காதலிப்பதாக சொன்னான். நானும் அவனைக் காதலித்தேன். இதற்கு முதல் நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படித் தோன்றவுமில்லை. நான் யாருடனும் படுக்கவில்லை. எனது இரண்டு நாள் உத்தியோகம் நிமித்தம் வந்தது சுகவீன லீவு என்று பொய் சொல்லி எனது ஜப்பான் கம்பனியில் உத்தரவு வாங்கி ஒரு கிழமை லண்டனில் நின்றேன். அவனுக்காக

ஒவ்வொரு நாளும் வலிகள் கடந்து மகிழ்ந்திருப்போம். அந்த மகிழ்ச்சி மிகவும் இன்பமானதாக இருந்தது. ஒரு சந்திப்பு, ஒரு இரவு, ஒரு செக்ஸ் இப்படி இணைக்கும் என நான் எண்ணியிருக்கவில்லை

அவன் டிய+ட்டி நேரத்தில் எனது ரூமுக்குள் இருந்தான் “வைன்” போதை கிளர்ச்சி என்று நேரம் போனதே தெரியவில்லை. மனேஜர் தேடியிருக்கிறார் அவனோடு கூட ரிஸப்ஸனில் நின்ற இன்னுமொரு ஸ்ரீலங்கன் “எனது ரூமுக்கு போயிருக்கிறான் நெளஷாட்” என்று சொல்லியிருக்கிறான் மனேஜருக்கு. அதிகாலையில் எழும்பி எனது ரூமை நெளஷாட் திறந்தான் போவதற்கு. வாசலில் மனேஜர். உடனேயே வேலையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டான் அவன். நான் காதலித்த முதல் நாளே அவன் வேலையில் இருந்து நிற்பாட்டப்பட்டது எனக்கு மிகவும் வேதனையாய் இருந்தது. உண்மையாய் நான் அன்று அழுதேன். பின்னர் அவனும் நானும் சேர்ந்து அவன் தங்கியிருந்த வீட்டுக்குப்போனோம்.

அவன் ஒரு வசதியில்லாத வீட்டில் ஒரு ரூமில் வாடகைக்கு இருந்தான். அதனை விட வேறு வசதியான வீட்டில் அவனுக்கு இருப்பதற்கு பணம் கொடுத்தேன் பின்னர் அடிக்கடி அவனுக்காக லண்டன் வந்தேன். அவனைப் பார்க்க வரும் நேரமெல்லாம் கொம்பிய+ட்டர் ரேடியோ, போன், கிற்றார் என்று எலக்ரோனிக் சாமான்கள் வாங்கி வருவேன். அவனுக்கான தேவைகளை நான் விரும்பிச் செய்தேன் அவன் என்னைக் காதலித்தான்.

லண்டன் வரும்போதெல்லாம் என்னோடு “செக்ஸ்” செய்வான் அடுத்த முறை லண்டன் வரத்தூண்டும் அவனது அது.

எனக்கு லண்டனுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு தடவை அலுவலக வேலையாய் ஜப்பானில் இருந்து வருவது நின்று ஆறுமாதத்திற்கு ஒரு தடவை என்றாகிவிட்டது. ஆனால் அவனையே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். தினமும் ளுஆளு செய்வேன் தினமும் நு-அயடை அனுப்புவேன். அவனும் அப்படித்தான் திடாரென்று ந-அயடை நின்று போனது ஒரு நாள் ஒருவாரம் இரண்டு வாரமாகியது இரண்டு வாரம் நான்கு வாரமாகியது எனக்குப் பயமேற்பட்டது. எங்கே அவன். அவனைத்தேடி அவர்களது நண்பர்களுக்கெல்லாம் போன் போட்டேன். அனேகமானவர்கள் நம்பர்களை மாற்றியிருந்தார்கள். கடைசியில் ச ?ாப்தீன் என்றொரு நண்பர் கிடைத்தார் போனில், நெளஷாட் ஜெயிலுக்குள் இருக்கிறான் என்று கேள்விப்பட்டதில் இருந்து எனக்கு அழுகை என்னால் தாங்க முடியாமல் இருந்தது.

நெளஷாட்டுக்கு ஒரு நண்பன். அவன் ஒரு ஸ்ரீலங்கன். அவன் ஒரு இலங்கைப் பெண்ணைக் காதலித்தான். அவளை இன்னொரு மலேசியனும் காதலித்திருக்கிறான். அவள் ஸ்ரீலங்கனைத் தான் விரும்பியிருக்கிறாள்.

ஒருநாள் நெளஷாட் வீட்டில் ஸ்ரீலங்கன் நண்பனும் காதலியான அந்தப் பெண்ணும் இருக்கும் போது மலேசியனும் வந்திருக்கிறான் இருவருக்கும் வாய்த்தர்க்கம் வந்து விட்டது பார்த்துக்கொண்டிருந்த நெளஷாட் கத்தியை எடுத்து மலேசியனைக் குத்திவிட்டான். மலேசியன் செத்துவிட்டான்.

கொலை செய்து விட்டான். இப்பொழுது லண்டன் ஜெயிலில் இருக்கிறான். ஏன் இப்பிடி மோட்டுத்தனமாக நடந்து கொண்டானோ தெரியாது. அவனைப் பார்க்க வந்தனான். ஆனால் போகவில்லை. மனசு சரியில்லை. ஜெயிலுக்குப் போக விருப்பமில்லை. அது தான் ை ?பாக்கிற்கு வந்தேன்.

பொதுவாக லண்டனில் ஸ்ரீலங்கன்ஸ் என்றால் கொலை, கிறடிட்காட் மோசடி, களவு இப்படித்தானே ரீவிகளிலும் பேப்பர்களிலும் காட்டுகிறார்கள்.

அண்மையில் ஒரு டொக்கிய+மன்டரி பார்த்தேன் டா.டா.ஊ இல் சாமுராய் வாள்கள், துப்பாக்கிகள், கிறடிட்காட்டுகள் செய்யும் மெசின்கள், கொலைக்கருவிகள் அய்யோ… நான் பயந்தே போய்விட்டேன். நீயும் ஸ்ரீலங்கன் தானே உனக்கும் கொலை செய்யும் உணர்வு இருக்கிறதா ?

இன்னொரு மென்தல் சிகரட்டை நீட்டினாள் நான் தலையாட்டினேன். வேண்டாமென்பதாய்….

anasnawas@yahoo.com

Series Navigation