இவைகள் !

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

கவிதா ரவீந்தரன்



ஒரு பறவையின் நீலச் சிறகு …
இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும்
உன் பார்வை …
அன்னியமாக உருக்காட்டி
மறையும் என்னுருவம் …
தொலைந்த பயணத்தின்
தொடக்க நாட்கள் …
கொஞ்சமும்
இங்கிதமற்ற முறையில்
சலனப்படும் மணம்..
நமக்கு நாமே
எழுதிக்கொண்ட ஓர் இரவு …..
பூட்டிய வீட்டின் முன்
விட்டெறிந்த கடிதம் …
மற்றும்
என் வருகைக்காக
காத்து பதுங்கி
முகம் புதைத்திருக்கும்
கருப்பு நிற நாய்…
இவைகள் .,
இவைகள் மட்டும்தான்
இன்று எனக்கு சொந்தமானவை ….!

-கவிதா ரவீந்தரன்

Series Navigation