இவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

வே.சபாநாயகம்.


1.எனக்கு எழுத்தாளர் ஆகணும்கிற கனவோ, மோகமோ, வெறியோ
இல்லாம, நான் எழுத்தாளர் ஆனேன். என்னுடைய எழுத்தை எந்த
நோக்கத்தில் எழுதறேன்னு கேட்டா நான் சார்ந்திருக்கிற இந்த சமுதா
யத்தை ரொம்ப நேசிக்கிறேன். என்னைப் பாதிக்கிற விஷயங்களை….
நான் ஆக்கபூர்வமாக பகிர்ந்துக்க என் எழுத்தை ஒரு கருவியாகப்
பயன்படுத்தறேன்.

2. என்னைப் பாதித்த பல விஷயங்களை அதே – பாதிப்பை வாசகரிடம்
உண்டு பண்ண…. அந்தப் பாதிப்பு கோபமாக இருக்கலாம், நல்லதாக
இருக்கலாம்…. ஒரு பாதிப்பு எனக்குள்ளே உண்டாகிற போது, தீர்வுக்கு
ஏதோ ஒரு வழி கிடைக்கிற மாதிரி எனக்குத் தோணுது. அதே மதிப்பை
என்னுடைய வாசகர்கள்கிட்டே எழுத்த வச்சு, நான் செய்ய முடிஞ்சு
துன்னா, அவங்க, அவங்க, அந்தந்த கோணத்ததுலே சிந்திச்சு, தீர்வு
வேணும்னா எடுத்துக்கலாம். பாதிப்பு உண்டாக்குவதுதான் என் நோக்கம்,
தீர்வு சொல்வதல்ல.

3. என்னுடைய கண்ணோட்டம், எழுத்து எல்லாம் புத்திசாலிகளை விட
சாதாரண ஜனங்களுக்குத்தான். ஏன்னா எனக்கு தெரிஞ்ச விஷயங்கள்
எல்லாம் சாதாரண விஷயங்கள்தாம். வாழ்க்கையில் நல்லது, கெட்டதைப்
புரிந்து கொண்டு அடுத்தவர்கள் வேதனையை புரிந்து கொண்டு, ஒரு
நல்ல மனிதப் பிறவியாக, வாழ்க்கையில் கூடுமானவரை முரண்டல்கள்
இல்லாமே சமரசம்னு சொல்ல வரல்லே…. சூழ்நிலை மாற்றத்தை
உணர்ந்து கொண்டு அதை என் எழுத்திலே சாதாரண மக்களுக்கு
கொண்டு போனா போதும்னு நினைக்கிறேன்.

4. நான் மனுஷியாகப் பிறந்தேன். எழுத்தாளர் என்பது நடுவிலே வந்த
விஷயம். இது எத்தனை வருஷம் இருக்கும்னு நினைக்கிறீங்க…..
எழுத்தாளர் சிவசங்கரி’ என்னிக்கும் மனுஷி சிவசங்கரிக்கு அடங்கின
வளாகத்தான் இருக்கணும். அதனால உங்க படைப்புத்திறன் அடிபடா
தான்னு நீங்க கேக்கலாம். அதனாலே என்னவோ, நான் நீங்க சொல்ற
அந்த class writters லெவல்ல எழுத முடியலையோ என்னவோ. எனக்கு
எது வேணுங்கறதப் பத்தி நான் தெளிவாக இருக்கேன். மனித மதிப்புகள
இழக்காம வாழத்தான் ஆசைப்படுகிறேன்.

5. எழுத்தோட மிகப் பெரிய வேலை என்னன்னா….இவர்களுக்காகத்தான்
எழுதறேன், அவர்களுக்காகத்தான் எழுதறேன்னு சொல்லக்கூடாது.
இவர்களுக்கும் எழுதணும், அவர்களையும் லேசா சிந்திக்க வைக்க
முடியும்னா அதைச் செய்யத் தவறக்கூடாதுன்னு நினைக்கிறேன். நீங்க
நூறு பேர் படிக்கிறதை, லட்சம்பேர் படிக்கிறார்களா என்றுதான்
கேட்கிறேன். அந்த வீச்சு கிடைக்கும்னா, வீர்யம் குறையாம, அந்த
வீச்சை அடைய முடியும்னா, அந்த எழுத்தை நான் பாராட்டறேன். 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்