இழுக்காதே எனக்குரியவனை !

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


ஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் !
கெஞ்சிக் கேட்கிறேன் உன்னை ! தயை புரிந்து
இழுக்காதே எனக்குரி யவனை !
ஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் !
எனக்குரி யவனை இழுக்காதே
உனக்கு முடிந்த போதிலும் !

உன் வனப்பினை ஒப்பிட முடியாது !
பொன்முடிக் கொத்தாய் மின்னும் உன் கூந்தல் !
தந்தமாய் மேனி ! பச்சை எமரால்டு உன் விழிகள் !

வசந்தக் காற்று போன்றதுன் புன்னகை !
வேனில் மழைபோல் மெல்லியது உன்குரல் !
போட்டியிட முடியாது உன்னுடன் ஜோலீன் !

உன்னை நினைத்துப் பேசுகிறான் உறக்கத்திலும் !
உன்பேர் சொல்லி அவன் அழும்போ தென்னால்
ஒன்றும் செய்ய முடிய வில்லை ஜோலீன் !

எவ்விதம் எளிதாய் என்னவனை இழுக்கிறாய்
என்றெனக்கு புரிகிறது இலகுவாய் !
அறிந்திட மாட்டாய் எனக்கவன் துணையென ஜோலீன் !

ஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் !
கெஞ்சிக் கேட்கிறேன் உன்னை ! தயது செய்து
இழுக்காதே எனக்குரி யவனை !
ஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் !
எனக்குரி யவனை இழுக்காதே !
உனக்கு முடியும் காரணத்தால் !

வேண்டிய அழகனை நீ தேர்ந்திட முடியும் !
நானோ நேசிக்க இயலா தினிமேல் !
எனக்கவன் ஒருத்தனே இருக்கிறான் ஜோலீன் !

உன்னுடன் நானிதைப் பேசிட வேண்டும்,
எனது மகிழ்ச்சி உன்னைச் சார்ந்தது,
எந்த முடிவை நீ தீர்மானித் தாலும் ஜோலீன் !

ஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் !
கெஞ்சிக் கேட்கிறேன் உன்னை !
இழுக்காதே எனக்குரி யவனை !
ஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் !
எனக்குரி யவனை இழுக்காதே !
உனக்கு முடிந்த போதிலும் !
ஜோலீன் ! ஜோலீன் !

*******

Jolene

By: Dolly Parton

Jolene, Jolene, Jolene, Jolene
I’m begging of you please don’t take my man
Jolene, Jolene, Jolene, Jolene
Please don’t take him just because you can

Your beauty is beyond compare
With flaming locks of auburn hair
With ivory skin and eyes of emerald green

Your smile is like a breath of spring
Your voice is soft like summer rain
And I cannot compete with you, Jolene

He talks about you in his sleep
There’s nothing I can do to keep
From crying when he calls your name, Jolene

And I can easily understand
How you could easily take my man
But you don’t know what he means to me, Jolene

Jolene, Jolene, Jolene, Jolene
I’m begging of you please don’t take my man
Jolene, Jolene, Jolene, Jolene
Please don’t take him just because you can

You could have your choice of men
But I could never love again
He’s the only one for me, Jolene

I had to have this talk with you
My happiness depends on you
And whatever you decide to do, Jolene

Jolene, Jolene, Jolene, Jolene
I’m begging of you please don’t take my man
Jolene, Jolene, Jolene, Jolene
Please don’t take him even though you can
Jolene, Jolene

*******

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 5, 2007]


Series Navigation