இளங்குருத்தினைக் காக்க உதவுங்கள்…

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

பெண்ணேஸ்வரன்


| |
சிறுவன் என்.வெங்கடேஷ் டெல்லி இராமகிருஷ்ணபுரத்தின் லால் பஹதூர் சீனியர் செகண்டரி பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவன்.

இவனுடைய தந்தையார் இராமகிருஷ்ணபுரத்தில் உள்ள பாலாஜி மந்திர் என்னும் ஸ்ரீவெங்கடேஸ்வரர் சன்னிதியின் மடப்பள்ளியில் உதவியாளராகப் பணிபுரிகிறார்.

பதின்மூன்று வயதான வெங்கடேஷ் சில மாதங்களுக்கு முன்னர் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தான். காமாலை நோயின் தீவிரத்தால் கல்லீரல் பெரிதும் பாதிக்கப்பட்டு தற்போது முழுதும் பழுதடைந்து உள்ளது. இந்தச் சிறுவன் உயிர் பிழைக்க கல்லீரல் மாற்றுச் சிகிச்சை அவசியம் என்று மருத்துவ முடிவுகள் சொல்கின்றன.

முன்னர் டெல்லியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த வெங்கடேஷ் தற்போது சென்னை மேடவாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறான். இன்று (8 மார்ச் 2010) அன்று சென்னையில் அறுவை சிகிச்சை நடப்பதாக இருந்தது. இச்சிறுவனின் தாயார் பிரசன்ன லக்ஷ்மியின் கல்லீரலில் ஒரு பகுதியை அவனுக்கு வழங்குகிறார். சில காரணங்களால் இந்த அறுவை சிகிச்சை இன்னும் மூன்று நாட்களுக்குத் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.

Series Navigation

பெண்ணேஸ்வரன்

பெண்ணேஸ்வரன்