இலை போட்டாச்சு ! -13 – இனிப்பு உருண்டைகள்

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

பாரதி மகேந்திரன்இனிப்பு உருண்டைகள்:

1. நவமணி உருண்டை

தேவையான பொருள்கள்

1 பொட்டுக் கடலை (உடைத்தகடலை) 2 கரண்டி
2 மும்பை ரவை 1 ”
3 சம்பா கோதுமை 1 ”
4 கொள்ளு 1 ”
5 வெள்ளை எள் 1 ”
6 பாசிப் பருப்பு 2 ”
7 புழுங்கல் அரிசி 1 ”
8 மக்காச் சோளம் (அல்லது ரவை) 1 ”
9 கேழ்வரகு 1 ”
10. முந்திரிப்பருப்பு தேவைப்படி
11 நெய் 3 அல்லது 4”
12 ஏலப்பொடி தேவைப்படி
13 பச்சைக் கற்பூரப் பொடி கால் தே.க.
11 நன்கு பொடித்த சர்க்கரை 11 கரண்டி

**********
முதல் ஒன்பது பொருள்களையும் தனித்தனியாக வாசனை வரும் வரை வெறும் கடாயில் வறுத்துக் கொண்டு எல்லாவற்றையும் நன்கு கலந்து மின் அம்மியில் மிகச் சன்னமாய்ப் பொடித்துக்கொள்ளவும்.

பிறகு, முந்திரிப் பருப்புக¨ளைப் பிளந்து நெய்யில் வறுத்தபின் அவற்றை விருப்பமான அளவுக்கு உடைத்துக் கொள்ளவும்.

பின்னர், நெய்யில் மாவுக்கலைவைப் போட்டு நன்கு கிளறவும் பிறகு சர்க்கரைப் பொடி, ஏலப் பொடி, பச்சைக்கற்பூரப் பொடி எல்லவற்றையும் மாவுடன் கலந்து சூடு ஆறுவதற்கு முன் உருண்டைகளாகப் பிடிக்கவும்.

கொள் (இளைக்கச் செய்வது), எள் (பருக்கச் செய்வது) ஆகிய இரண்டுமே சேர்வதால் மெலிந்தவர்கள், குண்டானவர்கள் ஆகிய இருவருமே சாப்பிடலாம்! (அதாவது சதையும் போடாது, இளைக்கவும் செய்யாது. உடம்பு அப்படியே இருக்கும். எனினும் பருமனாக விரும்புகிறவர்கள் கொள்ளைத் தவிர்க்கலாம், இளைக்க விரும்புகிறவர்கள் எள்ளைத் தவிர்க்கலாம்.) மொத்தத்தில், நல்ல சத்துள்ளது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. அவரவர் விருப்பம் போல், சர்க்கரை, நெய் ஆகியவற்றின் அளவில் மாற்றம் செய்துகொள்ளலாம்.


mahendranbhaarathi@yahoo. Com

பாரதி மகேந்திரன்

Series Navigation