இலை போட்டாச்சு – 10 – நொறுக்குத் தீனி வகைகள்

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

பாரதி மகேந்திரன்


இலை போட்டாச்சு !

நொறுக்குத் தீனி வகைகள்

1. சத்தான வறு பயறு

தேவையானவை:

கொண்டைக் கடலை – 50 கிராம்
கறுப்பு உளுந்து (தோல் நீக்காதது) – 50 “
கடலைப் பருப்பு – 50
. பச்சைப் பயறு – 50 “
சோயா பீன்ஸ் – 50 “
. கொள்ளு – 50 “
. தட்டைப் பயறு – 50 “
. மைசூர்ப் பருப்பு – 50 “
. பச்சை வேர்க்கடலை – 100 “
. பொட்டுக் கடலை (உடைத்த கடலை) – 100 “
வறுத்துப் பொடித்த மிளகுத்தூள் 4 தே.க.. (அல்லது தேவைப்படி)
உப்புப் பொடி – தேவைப்படி
பெருங்காயப் பொடி – 3 தே.க. “

வேர்க்கடலையையும் பொட்டுக் கடலையையும் தனித் தனியாக வறுக்கவும். வேர்க்கடலையின் தோலை நீக்கிவிடவும்.

கொண்டைக்கடலை, கறுப்பு உளுந்து, கடலைப்பருப்பு, பச்சைப்பயறு, சோயா பீன்ஸ், கொள்ளு, தட்டைப்பயறு, மைசூர்ப்பருப்பு ஆகியவற்றைத் தனித் தனியாய்க் களைந்த பின் தண்ணீரில் ஊற வைக்கவும். நசுங்குகிற பதத்துக்கு இவை நன்றாக ஊறியதும். தனித் தனியாக வடியவைத்துத் தண்ணீர் முற்றாக வடிந்ததும் உப்புப்பொடியும் மிளகுத் தூளும் போட்டுப் பிசிறி, காயவைக்கவும். பிறகு இவற்றைத் தனித்தனியாய்க் கடாயில் (என்¦ணெய் இல்லாமல்) வறுத்து எடுக்கவும். ஈரம் முழுவதும் போன பிறகு வறுத்தால்தான் விரைவாக வறுபடும். இல்லாவிட்டால், பொறுமை இழந்து எடுக்க நேர்ந்து கரப்பாக இருப்பதற்குப் பதிலாக அவை மெதுவடை மாதிரி மெத்து மெத்தென்றாகிவிடும். கொஞ்சமாகக் கடாயில் போட்டு வறுத்துப் பார்த்த பின் மீதியை வறுக்கவும். மொத்தமாய் வறுக்க வேண்டாம்.

பின்னர், கடைகளில் விற்கும் கார்ன் ·ப்ளேக்ஸ் கொஞ்சத்தையும் சேர்த்தால் சுவை கூடும். மிளகுப் பொடியே செரிமானத்துக்கு உகந்தது. மிளகாய்ப் பொடி வேண்டாம். பிறகு எல்லாவற்றையும் நன்றாய்க் கலந்து பெருங்காயத் தூளையும் போட்டுப் பிசிறவும்.(கடைகளில் முளை கட்டிய பயறுகள் இப்போதெல்லாம் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி அப்படியே வறுத்தும் இதைச் செய்யலாம். அதிகச் சத்துள்ளது.)

mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்