இலை போட்டாச்சு -34 ரவா பொங்கல்

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

பாரதி மகேந்திரன்


தேவை

மும்பை ரவை – 200 கிராம்
பாசிப் பருப்பு – 100 கிராம்
மிளகு – 1 தே. க.
சீரகம் – 1 தே. க.
முந்திரிப் பருப்பு – 50 கிராம்
உப்பு – ஒன்றரைத் தே. க.
இஞ்சி – தோல் சீவிய துருவல் ஒன்றரைத்3 தே.க.
கறிவேப்பிலை – 2 / 3 ஆர்க்கு இலைகள்
பெருங்கயக் கரைசல் / பொடி அரைத் தே.க.
நெய் – 100 கிராம்
மஞ்சள் தூள் – அரைத் தேக்கரண்டி

நன்றாய்க் களைந்த பின் பாசிப்பருப்பை 300 மி.லி. (சுமாரான அளவிஒன்றரைக் கிண்ணங்கள் / தம்ளர்கள்) தண்ணீரில் வேகவைக்கவும். இதைச் சமைப்பானிலேயே வேகவைக்கலாம். அல்லது தனிப் பாத்திரத்திலும் வேக வைக்கலாம். சமைப்பானை மூடுவதற்கும் முன்னதாகவே, நெய்யில் பாதியில் முதலில் மிளகைப் போட்டு அடுப்பில் ஏற்றி வெடிக்கவிடவும். மிளகு வெடிக்கத் தொடங்கும் போதே அதில் முந்திரிப் பருப்பைப் போட்டுப் பொன் வறுவலாக வறுக்கவும். முந்திரிப் பருப்பு வறுபட இன்னும் சில நொடிகளே இருக்கும் நிலையில் சீரகத்தையும் அதில் போட்டுவிடவும். சீரகம் சிவக்க வேண்டியதில்லை. உடனேயே வாணலியைக் கீழே இறக்கி இஞ்சித் துருவல். கறிவேப்பிலை உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டுக் கலாக்கவும். இந்தக் கலவையைப் பாசிப் பருப்புடனேயே கலந்து வேக வைக்கலாம்.

பாசிப் பருப்பு வெந்து கொண்டிருக்கும் போதே, மீதமுள்ள நெய்யை வாணலியில் ஊற்றிக் காயவைத்து அதில் ரவையைக் கொட்டிப் பொன் வறுவலாக வறுக்கவும்.
பிறகு இறக்கவும். பாசிப்பருப்பு விரைவில் வெந்து விடும். இரண்டு கூவல்களில் இறக்கிவிடலாம். பின்னர் வெந்துள்ள பாசிப்பருப்பை வறுபட்ட ரவையுடன் கலந்து வாணலியை அடுப்பில் ஏற்றி மிதமான சூட்டில் வேகவைக்கலாம்.

ரவை நன்றாக வெந்ததும் இறக்கிவிடலாம். இந்தப் பொங்கலுக்குத் தேங்காய்ச் சட்டினியும் ‘கொத்சு’ வும் நன்றாக இருக்கும்.

சிலர் நெய்க்குப் பதிலாக டால்டா / வனஸ்பதி உபயோகிப்பார்கள். இது உடலுக்குக் கேடு செய்யும். நெய்தான் அதைவிட ஏற்றது. குறைவான தீங்கு செய்வது. குண்டாக இருப்பவர்கள் நெய் சேர்த்த பொங்கலைச் சாப்பிடாமல் இருத்தல் நலம். ஆசையை அடக்க முடியாதவர்கள் கொ¡ஞ்சமாக நெய் ஊற்றி மீதத்துக்குச் சூரிய காந்தி எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். (அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட கடலை எண்ணெயும் பயன் படுத்தலாம்.)

mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்