இலையுதிர்காலம்….

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம்


இலையுதிர்காலம் மீண்டும்
துளிர்பிற்கான ஆரம்பம்!..
மனித வாழ்க்கையின் வட்டத்தை
இங்கு மரங்கள் கற்பிக்கின்றன!
குறுகியது வாழ்க்கை என்று
உணர்ந்து வருந்தாமல்!….
வசந்தத்தில் துளிராகி பூவாகி
காயோடு, கனியாகி என் கடன்
பணி செய்து கிடப்பதேயென்று
மரம் சொல்லும் பாடம்
அறி மனிதா!…
பட்டுப்போய் நிற்கின்றோம் என்று
அவை வெட்கப்பட்டுநிற்பதில்லை!
பழுத்து விழும் இலை கூட
அதே மரத்திற்கு உரம்
இலைசுமந்த கிளைகள் இனி
பனி சுமக்கும்! எந்த
சுமையும் நிலையில்லை என்பதை
உன் கண்முன்னே அவை
நிலைநிறுத்தும்!
பாரம் தாங்காமல் கிளை
வளையும்! தழுவி நின்ற இலை
நழுவும்! ஆனாலும் நம்பிக்கை
எனும் மூல வேரை இழப்பதில்லை
மரம்!..ஆகவே! ‘இலையுதிர்காலம்
மீண்டும் துளிர்பிற்கான ஆரம்பம்…

vijiselvaratnam@yahoo.ca
உங்கள்,
விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம்

Series Navigation