இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

இலக்கியச் சிந்தனை


இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா

நாள்: சித்திரை மாதம் இரண்டாம் நாள், வெள்ளிக்கிழமை, 15.04.2011
நேரம்: மாலை 6 மணி
இடம்: ஏ வி எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை-4

2010ஆம் ஆண்டின் சிறந்த நூலெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னீலன் எழுதிய “மறுபக்கம்” நாவலுக்கு ரூ.5000 பரிசு.
2010ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையெனெ மு இராமனாதன் தேர்ந்தெடுத்த, ஆனந்த் ராகவ் எழுதிய, அமுதசுரபி ஜனவரி 2010 இதழில் வெளியான “சதுரங்கம்” என்ற சிறுகதைக்கு ரூ.1000 பரிசு
தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தவர்களுக்குரிய பம்பாய் ஆதிலெட்சுமணன் நினைவுப் பரிசாக ரூ.15000 பெறுபவர் கவிஞர் வாலி
முனைவர் கா செல்லப்பன் எழுதிய “இலக்கியச் சித்தர் அ. சீநிவாசராகவன்” என்ற அ.சீ.ரா.வின் வாழவும் பணியும் பற்றிய நூல் வெளியிடப்படும்
2010 ஆண்டின் சிறந்த பன்னிரண்டு சிறுகதைகளை உள்ளடக்கிய “சதுரங்கம்” சிறுகதைத் தொகுதியும் வெளியிடப்படும்.

விழாவில் பங்கேற்போர்:

கவிஞர் வாலி (“நான் கற்றுக் கொண்ட பாடங்கள்” எனும் தலைப்பில் பேசுவார்)
முனைவர் கா செல்லப்பன்
பொன்னீலன்
மு இராமனாதன்( ஹாங்காங்)
ஆனந்த் ராகவ்
தொடர்புக்கு: இலக்கியச் சிந்தனை, 39, சவுத் பேங்க் சாலை, சென்னை-600 028

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்