இறைவன் அருள் வேண்டும்

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

அபி சுப்ரமணியம்


மன்னித்து மறக்க ஒரு மனம் வேண்டும்
மறந்து அணைக்க இரு கரம் வேண்டும்

செய்த பாவம் ஏற்கும் மன உரம் வேண்டும்
இனி செய்யாதிருக்க நின் அருள் வேண்டும்

கருணை கொண்டு நோக்கும் பார்வை வேண்டும்
வறுமை கண்டு துடிக்கும் மென்மை வேண்டும்

நன்றி என்றும் நினைக்கும் நெஞ்சம் வேண்டும்
வாய்மை ஒன்றே பேசும் அதரம் வேண்டும்

வெற்றி கண்டும் நிமிராத சிரம் வேண்டும்
தோல்வி கண்டும் தளராத தோள் வேண்டும்

அடுத்து கெடுப்போர் சேர்க்கை விலக வேண்டும்
கொடுத்து உயர்வோர் நட்பு நிலைக்க வேண்டும்

தொடுத்து கொடுத்த என் ஆசை நிறை பெற வேண்டும்
எடுத்த ஜென்மம் என்றும் பயன் பெற வேண்டும்

இன்று விழுந்து நின் தாள் பணிந்து கேட்கின்றேன்
என்றும் எழுந்து நிற்க நீ துணை இருப்பாய்

abisubra@yahoo.com

Series Navigation

அபி சுப்ரமணியம்

அபி சுப்ரமணியம்