இயந்திரப் பயணங்கள்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

ராபின்


ஊனமாக்கப்பட்ட சாலையோர மரந்தரும் நிழல்கள்
கைவிடப்பட்ட சருகுகள் மிதிபடும் நடைபாதை
வெட்டப்பட்டுக் குதறப்பட்ட புற்களின் பசுமை
கத்திரிக்கப்பட்ட செடிகளின் மொட்டவிழ்ந்த மலர்கள்
விரிந்த ஆற்றின் மணற்பரப்பாய் மேகங்கள்
மவுனத்தின் சாட்சியாய் தொலைவில் சூரியன்
தேனடைகளாய் உயர்ந்திருக்கும் அடுக்கு வீடுகள்
முன்னிரவு மழையின் ஈரமில்லா சாலைகளின்
கரிய சரளைகளில் சாரைகளாய் ஊர்திகள்
கடக்கும் கண்களில் உறைந்திருக்கும் வெறுமை
சூழ்ந்திருக்கும் ஒழுங்குகளின் ஆதிக்கம்
ஒழுங்கற்ற மனதில் ஏற்படுத்தும் பீதி
நவீனத்தின் நுட்பங்கள் நிரம்பிய நாகரிகத்தில்
தொலைந்து போன என் மனநுட்பங்கள்
சென்று கொண்டிருக்கிறேன்
மாய இயந்திரத்தின் ஆத்துமம் தேடி

***
amvrobin@yahoo.com

Series Navigation

ராபின்

ராபின்