இப்படித்தான் அமைந்துவிட்டது வாழ்க்கை

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

ரமேஷ்


இப்படித்தான் அமைந்துவிட்டது வாழ்க்கை
பித்தர்களுக்கும் குடிகாரர்களுக்கும் இடையில் …
பைத்தியங்கள் குடிகாரர்களைப் பற்றியும்
குடிகாரர்கள் பைத்தியங்களைப் பற்றியும்
பேசக் கேட்கும் இம்சையும் இங்கேதான்!
பைத்தியங்களின் ‘குடிகாரர்களுக்கும் ‘
குடிகாரர்களின் ‘ பைத்தியங்களுக்கும் ‘
இடையில் உண்மை இருப்பதாய் நம்பத் துவங்கிய போது
தொடங்கியது இந்த ஊசல் இருப்புக்கும்-இறப்புக்குமாக

பைத்தியமாகி இருப்பதை தொலைப்பதா ?
குடிகாரனாகி தொலைந்ததில் இருப்பதா ?

* * * *

subramesh@hotmail

Series Navigation

ரமேஷ்

ரமேஷ்