இன்றாவது வந்து விடு.

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue

சதீஷ்


இன்றாவது வந்து விடு.
பருவம் மாறி பசுமை தொலைந்திருக்கிறது.
நான் மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையில்
இலைகளை இழந்தும் கிளைகளை
இழக்காமல் காத்திருக்கிறேன்.

இன்றாவது வந்து விடு.
கண்கள் தொலைந்துப் போய் – எங்கும்
இருள் கவிழ்ந்து கிடக்கிறது.
நான் கவலை இல்லாமல் கண் மூடி
கனவுகளில் அமிழ்ந்து இன்னமும்
உயிப்போடு தான் காத்திருக்கிறேன்.

இன்றாவது வந்து விடு.
காலம் என்னை கடந்து கொண்டிருக்கிறது.
நான் காலத்தை கடக்க முயன்று கொண்டிருக்கிறேன்.
இதில் ஒருவர் வெற்றி பெற காத்திருக்கிறேன்.

இன்றாவது வந்து விடு.
நட்சத்திரங்களில் இருப்பதாலேயா
நீ வரத் தாமதமாகிறது ?

Series Navigation

சதீஷ்

சதீஷ்