This entry is in the series 20040429_Issue

அவதானி கஜன்


விடாமல் வளர்கின்றேன்
தென்றலுக்கும் புயலுக்கும் முகம் கொடுத்து
இன்ப துன்பமென்ற இருவகையைச் சந்தித்து
இன்னலையும் இனியதாய் கொள்ளும் பக்குவம் அற்றவனாய்
விடாமல் வளர்கின்றேன்

இன்றெனக்குப் பிறந்ததினம் என்றுரைத்தான்
என்வட்டத்தில் நான் பெரியவன்
அதை எட்டிப்பாராமல் ஏங்கி விடும் பெருமூச்சு
பெருமூச்சுகள் அதிகமாகி
விலை செல்லாத நிலையில்
விடாமல் வளர்கின்றேன்

தொடரும் மனித வேட்டைகள்
சொற்களிலும் அளவெடுக்க முடியாமல்
சொடுக்கியவனும் சகிக்க முடியாமல்
இவற்றின் நடுவே வளரும் காதலர்களின் கவிதைகளாய்
விடாமல் வளர்கின்றேன்

படுத்திருந்தவனும் பார்த்திருந்தவனும்
படிமத்தில் பஞ்சம் கொண்டிருந்தும்
அஞ்சல் விலாசம் போல் ஏதோ எழுதிவிட்டு
கவிதையென்றுரைக்க அவற்றின் நடுவே
விடாமல் வளர்கின்றேன்.
—-
avathanikajan@yahoo.ca

Series Navigation