இனிய காட்சி

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

நாக.இளங்கோவன்


—-
மடமை என்பதும் மயக்கம் என்பதும்
கடமை என்னும் கயவர் கூட்டம்;
பெருமை அறியாப் புல்லர் கூட்டம்
அருமை தெரியா அற்பர் கூட்டம்;
கண்ணகி சிலையை கடத்திய போதில்
விண்ணது அழுதே வெட்கிப் போனது;
அன்னவர் சொன்னார் அரசி செய்ததில்
விண்ணது மகிழ்ந்து விடுக்குது மழையை;
சொன்னார் சேர்ந்து சொல்லார் யாவரும்
இந்நாள் தவிப்பது இடுக்கண் ஆகிலும்
சொன்னார் வெயிலில் சிந்தை கலங்கி
சென்னை நகரில் சிதறி அலைதல்
என்ஓர் கண்ணில் இனிய காட்சியாம்!
பின்ஓர் கண்ணில் பெரிய வறட்சியே!

அன்புடன்
நாக.இளங்கோவன்

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்