இனம் இனத்தோடு…!
Published December 27, 2010 • By
சபீர்
சபீர்

பிறிதொரு
பின்னிரவில்
ஈர வெளிச்சமும்
தூர வெளிச்சமு மென
மின் கம்பங்களைக்
கடந்து நடக்கயில்
நீண்டும் குறுகியும்
பெருத்தும் மெலிந்தும்
என் பாதம்
தொட்டடுத்தே வந்து…
வெளிச்ச விளிம்புகளிலும்
வீட்டினுள்ளும்
கலங்கியும் தெளிந்தும்
மங்கியும் மடிந்தும்…
ஆயினும்,
தொடர்ந்தே வந்த
என் நிழல்…
மனைவி உறங்கும்
சயன அறை சென்று
விளக்கனைத்ததும்
உக்கிர இருளில்…
இனம் இனத்தோடு!
-sabeer
Sabeer.abushahruk@gmail.com