இந்த நாடு விற்பனைக்கு.

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

ராஜ்குமார்


இந்தியாவுக்கு சுதந்திரம்
மாறியது நாட்டின் தலையெழுத்து
மாற்றியதோ ஒர் முதியவரின் கையெழுத்து

ஆட்சி கைமாறியது
வியாபரிகளிடமிருந்து கள்வர்களுக்கு
அங்கே சில கோடி கனவுகள் கொள்ளைபோயின

அன்று நாட்டின் விலையென
பல உயிர்கள் சிலையாயின
பணம் படைத்தவர்களுக்கும் பன்மொழி மக்களுக்கும்
பாரபட்சமின்றி அனைவருக்கும் ஒர் அழைப்பிதழ்
‘இன்று நாடு விற்பனைக்கு ‘

தானம் சிறந்ததென நினைத்திருந்தோம்
அதற்கென பல கோடி உயிர்களை தானமென கொடுத்திருந்தோம்
அதனால் கிடைத்ததோர் வரம்
எங்கள் நாடு
நேற்று ஒருவரிடம்
இன்று இவரிடம்
நாளை யாரிடமோ ?
என்றறியா ஒர் நிலை

எழவேண்டும் ஒர் சூரியன்
துளிரவேண்டும் சில இலைகள்
மலர வேண்டும் ஒரு பூ

அனைத்தும் ஒர் இடத்திலே ஒரு பொழுதிலே
கனவுகள் தொடரட்டும்…
*
rk1244@yahoo.com

Series Navigation

ராஜ்குமார்

ராஜ்குமார்