இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கு அனடோலிய வேர்கள்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue


இன்று துருக்கியில் இருக்கும் அனடோலியா பிரதேசத்தில் இருக்கும் விவசாயிகளே முதன் முதலில் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என வழங்கும் மொழிகளின் மூல வார்த்தைகளை சுமார் 8000 வருடங்களுக்கு முன்னர் பேசியிருப்பார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்பவை கிரேக்கம், லத்தீன், இங்கிலீஷ், ஸமஸ்கிருதம் ஆகியவைகள். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவை. இவைகளின் தோற்றம் ஆராய்ச்சியாளர்களால் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஒரு தேற்றத்தின் கீழ், ஆஸியாவில் இருக்கும் ஸ்தெப்பி புல்வெளிகளில் இருந்த குர்கென் நாடோடி குதிரைக்காரர்கள் Kurgan horsemen இந்த இந்தோ ஐரோப்பிய மொழிகளை 6000 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவையும் ஆஸியாவையும் ஆக்கிரமித்தபோது பரப்பினார்கள் என கருதுகிறது.

ஆனால், பல ஆராய்ச்சியாளர்கள், இந்த மொழிக்குழு தற்போது துருக்கியில் இருக்கும் அனடோலியாவில் உருவானது என்றும், விவசாயிகளால் இந்த மொழி பரவியது என்றும் நம்புகிறார்கள்.

நியுஸிலாந்து நாட்டில் இருக்கும் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ரஸ்ஸல் கிரே மற்றும் க்வெண்ட்டின் அட்கிண்ஸன் ஆகியோர் தங்களது கட்டுரையில் (ஸயன்ஸ் நேச்சர் பத்திரிக்கையில் வெளியானது) தங்களது ஆய்வை பரிணாம உயிரியல் முறைகளின் படி அணுகி ‘அனடோலிய விவசாய முறைகளோடு ஒத்துப்போகிறது ‘ என்றூ தெரிவிக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியை திறனாய்வு செய்த டேவிட் சியெர்ல்ஸ் ஆகியோர் இந்த முடிவு அறிந்த வரலாற்று நிகழ்ச்சிகளின் கீழ் பொருந்தி வருகிறது என்று தெரிவிக்கிறார்கள்.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்த ஒரு நிகழ்வு குர்கன் குதிரைக்காரர்களால் பரப்பப்பட்டது என்பது சற்று பொருந்தாமல் இருக்கிறது: என்றும் டேவிட் சியர்ல்ஸ் குறிப்பிட்டார்.

————-

Series Navigation

செய்தி

செய்தி