இந்திய மார்க்சீயமும் அம்பேத்காியமும்

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

எச். பீர் முகம்மது


சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பிறகு உலக்முழுமையும் மார்க்சீயம் பற்றியதான புதிய புாிதல்கள் ஏற்பட துவங்கியுள்ளன. இந்த சூழலை இதனோடு தொடர்புறுத்தும்போது இந்திய மார்க்சீயத்திற்கான புாிதல் அவசியமாகிறது.

பல்வேறுபட்ட விளக்கங்கள்/ வடிவங்கள் வெளிப்பட்டாலும் இந்திய சமூகத்தின் அடி கட்டமைப்பைப் பற்றிய ஆழ்ந்த புாிதல் நமக்கு அவசியமாகிறது. அம்பேத்காின் நூற்றாண்டு கொண்டாட்டங்களைத் தொடர்ந்ததான எழுச்சி இன்று வலுப்பெற்று வருகிறது. மாறுதல்கள் எப்போதுமே இருபக்க நிலைகளில் வெளிப்பட வேண்டும். அது மட்டுமே சாியான மாறுதல் நிலையாக இருக்க முடியும். மனிதனின் புலனுணர்வு நடவடிக்கையிலிருந்து (உழைப்பு) தன் தத்துவ தாிசனத்தைத் தொடங்கிய மார்க்ஸ் அதனின் பலனை/ இலக்கை அடைவது குறித்து கனவு கண்டார். அக்கால கட்டத்தில் மேற்குலகில் அதிகம் செல்வாக்கு செலுத்தி வந்த பொருள் முதல் வாதத்தை தனக்கான வடிவமாக எடுத்துக்கொண்டு/ அதனை மனித வரலாற்று வாதமாக மாற்றி அமைத்தார். மனிதனின் வரலாறு அவனின் வாழ்க்கை சாதனங்களை உற்பத்தி செய்வதில் தொடங்குமானால் அதன் முடிவு அதனை மீண்டும் அடைவதில்தான் இருக்க முடியும் என்றார்.

விஞ்ஞூானமானாலும் தத்துவமானாலும் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சில தனி மனிதர்களின் கண்டுபிடிப்பாகவே நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. அவை சமூகத்தை பல சமயம் குறியீட்டு ாீதியாகவும்/ ஆழ்மன ாீதியாகவும் பாதிக்கின்றன. இந்த பாதிப்புகளுக்கு தத்துவ ாீதியான நியாயத்தை உண்டுபண்ணுவதும் அதனோடு நிலவுவதை மாற்றி அமைப்பதும் சோவியத் புரட்;சிக்கு முன்னர் பரவலாக உலகில் சாத்தியமில்லை என்ற கருத்தே நிலவி வந்தது. அதன் விளைவாக சமூக மாற்றமும் ஓர் அரசமைப்பும் உருவாவதுவரை வெறும் கருத்தியல் பிரச்சனையாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. மார்க்ஸ் இதனை மிக நன்றாகவே அறிந்திருந்தார். கருத்தியலை விளக்குவதோடு நின்று விடாமல் இருக்கும் அமைப்பை மாற்றி அமைப்பது அவசியம் என்றார். இம் மாதிாியான விளக்கீடுகளை கொஞ்சம் நீட்டித்துப் பார்த்தால்/ வேறு வார்த்தைகளில் சொன்னால்/ இந்திய சமூக அமைப்பை மாற்றி அமைப்பதன் அவசியம் குறித்து சிந்திப்பதன் கட்டாயத்திற்கு மாறி இருக்கிறோம் அல்லது தள்ளப்பட்டிருக்கிறோம்.

இந்திய மார்க்சீய இயக்கத்துக்கு தனிப்பட்ட வரலாறு உண்டு. அது உருவான காலகட்டம் காலனி ஆதிக்க காலகட்டமாகும்.

இருபதுகளில் சிங்காரவேலர்/ எம்.என்.ராய் போன்றோர்களால் வளர்த் தெடுக்கப்பட்டு 21ம் நூற்றாண்டின் துவக்கம் வரையிலான காலகட்டத்தை வந்தடைந்திருக்கிறது. சதுர்வர்ண முறையை அடிப்படையாக கொண்டமைந்த இந்திய சமூக அமைப்பு/ வேறு அர்த்தத்தில் சொன்னால் வைதீக இந்து சமூக அமைப்பு அதன் பாிணாமமே இதன் அடிப்படையாகும். அதன் விளைவாக சதுர்வர்ணத்திற்கு அப்பாற்பட்டவர்கள் விலக்கப்படுதலும்/ ஒடுக்கப்படுதலும் காலங்காலமாக நிகழ்ந்து வந்துள்ளன. ஒடுக்கப்பட்டோாின் அதன் இயக்கத்தின் தலைவராக/ ஆழ்ந்த பிரக்ைஞூ கொண்ட அறிவு ஜீவியாக இருந்த அம்பேத்காின் கருத்தியலோடு இந்திய மார்க்சீயத்தின் புாிதலை / இயக்கத்தை நகர்த்தி கொள்வதென்பது சாதகமான அம்சமாக இருக்கும்.

மராட்டிய மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அம்பேத்கர் வித்தியாசமான சூழலில் வளர்ந்தார். எல்லா அறிவு ஜீவிகளுக்குாிய இயல்பான விஷயமான எதிர்காலம் குறித்த கனவு இவாிடமும் இருந்தது. அவருடைய கருத்தியலின் சாரஅம்சம் ஞூசுதந்திர சமூக அமைப்பைஞூ பற்றியதாக இருந்தது. மனித சமூகம் அதிலும் குறிப்பாக இந்திய சமூகம் சுதந்திர நிலையை அடைவது குறித்த இலட்சிய பார்வையுடன் இருந்தார். அவாின் கருத்துப்படி இந்திய சமூக அமைப்பு என்பது ஞூவைதீக இந்து சமூக அமைப்பின் பிரதிபலிப்பேஞூ. மொத்த மனித சமூகத்தையுமே படிநிலைக்குள் உட்படுத்திய இந்து மேலாதிக்க சமூகம் குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் படி நிலையில் இருந்து வெளித்தள்ளியது. சதுர் வேதங்களின் மூலமும்/ இந்த வேதங்களின் சாரத்தைக் கொண்டு அரசமைப்பை ஏற்படுத்தி அதன் நெறிகளை வகுத்த ஸ்மிருதிகள் மூலமும் தன்னை அதிகாரபூர்வமாக்கியது. இதன் விளைவாக மனித இயல்புக்கு அப்பாற்பட்ட மாமனித (ளுரிநசஅயே) வழிபாடு உருவானது. குறிப்பிட்ட ஒரு சமூகம் மாமனித நிலைக்கு வடிவமைக்கப்பட்டது. அம்பேத்கர் இதிலிருந்தே தன் போராட்ட கருத்தியலை வடிவமைத்தார்.

சமூகம் இவ்வாறான நிலையில் இருந்து தீண்டத்தக்கவர் – தீண்டாதவர் என்பதாக பிளவுண்டது. தீண்டத்தக்கவர்கள் தங்களை தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொண்டார்கள். இதன் தொடர்ச்சியாக தீண்டாதவர் சமூகம் அந்நியப்படுத்தப்பட்டது. அம்பேத்கர் தொடக்கத்தில் நால்வருணத்தின் கடைசி வர்ணமான சூத்திரர்களின் சமவாழ்வு குறித்து சிந்தித்தார். தன்னுடைய இறுதிக் காலத்தில் தீண்டாதவர்களான தலித்துகளின் விடுதலையை நோக்கி தன் சிந்தனைக் களத்தை நகர்த்தினார். தொடக்கத்தில் சூத்திரர்களையும் தலித்துகளையும் சேர்த்து வெளிப்படுத்தியவர் சூத்திரர்களின் தலித் ஒடுக்குமுறை குறித்த பிரச்சனையில் தன் கருத்தை மாற்றிக் கொண்டார். பின்வரும் கருத்தைக் கொண்டிருந்தார்.

‘சூத்திரர்கள் தாங்கள் போராடி பிராமணர்களை வீழ்த்தும் போது தலித்துக்கள் தங்கள் நிலைக்கு வந்துவிடக் கூடாது என எண்ணுகின்றனர். இதன் காரணமாகவே அவர்கள் தீண்டாதவர்களை வெளி தள்ளுகின்றனர் ‘.

தங்கள் விடுதலையைக் காட்டிலும் தலித் விடுதலை என்பது குறைந்த பட்ச முக்கியத்துவமாக இருப்பதால் படிநிலை அமைப்பிற்குள் இருந்து கொண்டு தலித்துகளை ஒடுக்குகிறார்கள். வரலாற்றில் பிராமணர்கள் சூத்திரங்களுக்கு பிரதிபூர்வமாகவும்/ நடைமுறை ாீதியாகவும் அளித்த கொடுமைகளைப் பட்டியலிட்ட அதே சமயத்தில் தலித்துகளுக்கு எதிராக மற்ற மூவர்ணங்களும் கூட்டணி அமைத்து ஒடுக்கிய நிகழ்வுகளையும் ஆராய்கிறார்.

இதன் காரணமாகவே தலித்துகளின் விடுதலையை இந்திய சமூக விடுதலை என்ற நிலைபாட்டிற்கு அவரால் வர முடிந்தது. வைதீக இந்து சமூக அமைப்பு தன்னை மதமாக வடிவமைத்துக் கொண்ட போது அதில் தலித்துகளை தனித்து அடையாளப்படுத்திய அவர் தலித்துகள் இந்துக்கள் அல்ல என்பதில் மிக அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தார். அதற்கு ஸ்மிருதிகளிலிருந்தே உதாரணம் காட்டிய அவர் தனித்துவமாக அடையாளப்படுத்தும்போதுதான் அவர்களின் சமூக – கலாச்சார விடுதலையை அடைய முடியும் என்றார். மேலும் ஙசுதந்திரம்ங அதன் பரவலான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். சுதந்திரம் மனித சமூகத்தின் அதிகாரத்தின் மீதான சுதந்திரமாக மாற்றப்பட வேண்டும் என்றார். உாிமைகள் என்பவை குடிமக்கள் சமூகத்தின் அதிகாரத்தின் மீதான வரம்புகளே அன்றி அரசு அதிகாரத்தின் மீதானவை அல்ல. இன்னும் விாிவாக சொன்னால்/ எதிர்மறை சிறப்புாிமைகளின் இடைச்சாதனங்கள் என்ற நிலையிலிருந்து நேர்மறை சிறப்புாிமைகளின் இடைச் சாதனங்கள் என்ற நிலைக்கு மாற்றம் செய்கிறார். அதாவது அரசின் திட்ட வட்டமான நடவடிக்கைகளை கோருபவை/ அதன் காரணமாக ஒடுக்கப்பட்டோர் தங்கள் சிறப்புாிமைகளை அனுபவித்துக்கொள்ள முடியும்.

இத்தகைய உாிமை போராட்டத்தை ஒடுக்கப்பட்டோர் முன்னெடுக்கும்போது ஏற்படும் அடையாளங்களின் நெருக்கடி குறித்து தெளிவான முடிவோடு இருந்தார். குறிப்பாக சாதி/ வர்க்கம் ஆகிய அடையாளங்களுக்கு இடையே உள்ள உறவு குறித்து ஆராய்ந்தார். சாதியும் வர்க்கமும் ஒன்றுதான். இவ்விரண்டிற்கும் வித்தியாசம் எதுவுமில்லை என்று சிலர் கூறுகின்றனர். சாதிகள் பற்றிய இந்த கருத்தின் இந்த அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது. சாதி முறையானது வர்க்க கோட்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்டது. எதிரானது என்ற போதிலும் வர்க்கம் என்பதிலிருந்து வேறுபட்டிருக்கும் சாதி அமைப்பு படித்தர தன்மைக்கு மாறுபட்ட வர்க்க அமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இந்துக்கள் பலதரப்பட்ட சாதியினராக பிாிக்கப்பட்டு இருப்பது போலவே சாதிகளும் சாதியின் பலவகைப்பட்ட வர்க்கங்களாக பிாிக்கப்பட்டுள்ளன.

இந்து எனப்படுவோர் சாதி உணர்வுள்ளவராகவே இருக்கின்றார். அதோடு வர்க்க உணர்வும் அவருக்கு உண்டு. அவர் சாதி உணர்வுள்ளவரா அல்லது வர்க்க உணர்வுள்ளவரா என்பது அவரை எதிர்க்கின்ற சாதியைப் பொறுத்து அமைகிறது. அவரது எதிர்ப்புக்குப் பாத்திரமாகும் சாதி அவர் சார்ந்திருக்கும் வர்க்கத்தைச் சார்ந்த சாதியாக இருந்தால் அவர் சாதி உணர்வுள்ளவராக இருக்கிறார். அதே நேரத்தில் அந்த சாதி அவரது வர்க்கத்தை சாராததாக இருந்தால்/ அவர் வர்க்க உணர்வு உள்ளவராக இருக்கிறார். வர்க்கம் பற்றிய மேற்கண்ட நிலையைத் தெளிவாக மேற்கொண்ட அவர் கட்டுமானம் குறித்தும் தன் பார்வையை செலுத்தினார். மானுட சமூக அமைப்பை அடிகட்டுமானம்/ மேற்கட்டுமானம் என இருவேறு நிலைகளாக பிளவுபடுத்துவதிலிருந்து மாறுபட்டே நின்றார்.

இந்திய மார்க்சீய இயக்கங்கள் தோன்றி வளர்ச்சி பெற்ற காலத்திலே தனித்து/ தொடர்புறும் சிந்தனையாளராக இருந்த அம்பேத்கர் தன் இறுதி காலத்தில் மதமாற்றமே தீர்வு என கருதி பெளத்தத்தைத் தழுவினார்.

இந்திய மார்க்சீய இயக்கங்களின் போராளிகளின் எண்ணிக்கை அல்லது புரட்சியாளர்களின் கூட்டுத்தொகை இந்தியாவில் தலித்துகளின் மொத்த எண்ணிக்கையை விட குறைவானதாகும். இதனோடு சேர்த்தே அதன் வர்க்க போராட்ட வரலாற்றைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. இதுவரை நடந்து வந்திருக்கிற இந்திய வர்க்க போராட்டம் தலித்துகளின் ஒடுக்கு முறையை விட அந்நியப்பட்டு இருக்கிறது. பீகாாின் உதாரணங்களையும் வெண்மணியின் நிகழ்வுகளையும் நினைவு கூறலாம். ஞூவர்க்கம் பற்றிய வறட்டுப் பார்வை இந்திய மார்க்சீயத்தில் பலமாகவே பதிந்திருந்தது. மார்க்ஸ் இந்தியா பற்றி கூறியவற்றை எல்லாம் வழிபாட்டாளாின் தன்மையிலிருந்தே மார்க்சீயர்கள் புாிந்துகொண்டு அர்த்தப்படுத்தியது விந்தையாக இருக்கிறது. இந்தியா உள்பட்ட கிழக்கிந்திய நாடுகளுக்கு உாித்தான ‘ஆசிய உற்பத்தி முறைமை ‘ குறித்து மார்க்ஸ் உறுதியான கருத்தை நிலைப்பாகக் கொண்டிருக்கவில்லை. தன் இறுதிக் காலத்தில் நியூயார்க் டெய்லி டிாிபியூன் பத்திாிகையில் இந்தியா குறித்து கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்த மார்க்ஸ் ஆகிய உற்பத்தி முறைமையின் தன்மைகள் குறித்து ஒரே பார்வையைக் கொண்டிருக்கவில்லை. 1867 க்குப் பிறகு அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளை நோக்கும்போது இது புலப்படுகிறது. மேலும் மார்க்சின் தத்துவார்த்த தாிசனத்தின் பொருத்த பாடுகள் எல்லாம் மேற்குலகை நோக்கிய ஒன்றாகவே இருந்தது. (அவருடைய நூல்களில் அவர் காட்டும் உதாரணங்களைக் குறிப்பிடலாம்.) எல்லா அறிவு ஜீவிகளுக்குமுாிய விடுபடல் அவாிடமும் இருந்தது.

1880இன் தொடக்கத்தில் மார்க்ஸ்/ இரயில் பாதைகள் பற்றி எழுதுகையில் அவை இந்தியாவின் தொழிற்புரட்சிக்கான கிாியா ஊக்கியாக செயல்படும் என குறிப்பிட்டிருந்தார். அவரே பின்னர் எழுதினார் ஞூபொதுவாக சொன்னால் ரயில்பாதைகள் வெளிநாட்டு வர்த்தகத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் தூண்டுதலைக் கொடுத்தன என்பது உண்மைதான். ஆனால்/ மூலப்பொருட்களை முக்கியமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் வாணிகம் மக்கள் திரளின் துன்பத்தை அதிகாித்தது. இரயில்பாதை உண்மையான உற்பத்தியாளருக்கு கேடாக மாறிற்று. இங்கிலாந்து/ இந்திய பொருளாதாரம் ஒன்றை ஒன்று நிறைவு செய்து கொள்ளும் உறவை இரயில்வே பலப்படுத்தியதுஞூ என மார்க்ஸ் கூறினார்.

இன விடுதலை குறித்தும் மாறுபாடான கருத்தையே மார்க்ஸ் கொண்டிருந்தார். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தால் அயர்லாந்தின் அடிமை நிலைக்கு முடிவு கட்டப்படும் என்பது மார்க்ஸிடம் நெடுங்காலமாக இருந்து வந்த முடிவாகும். ஆனால்/ பின்னர் தன் கருத்தை மாற்றிக்கொண்டார். ஆழமான ஆய்வுகளுக்குப்பின் இதற்கு நேர்மாறாகத்தான் நடக்கும் என்பதைப் புாிந்துகொண்டேன். அயர்லாந்தை கைவிட்டாலன்றி இங்கிலாந்து நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தால் எதையும் சாதிக்க முடியாது என்றும்/ ஞூஅயர்லாந்தில்தான் நெம்புகோல் பயன்படுத்தப்பட வேண்டும்ஞூ என்றும் கூறினார். அயர்லாந்தின் உள்நாட்டு வளர்ச்சி மட்டுமல்ல/ இங்கிலாந்தின் பாட்டாளி வர்க்க புரட்சியுமே அயர்லாந்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சார்ந்து உள்ளது என்ற கருத்துக்கும் மார்க்ஸ் வந்து சேர்ந்தார்.

இந்திய மார்க்சீய இயக்கங்கள் வெறும் தொழிற்சங்க வாதமாக தன்னைக் குறுக்கிக்கொண்டன. அடிக்கட்டுமான நிலையே தன் இந்திய நிலைபாடு என்பதை மேற்கொண்டு அது சார்ந்தே தன் காய்களை நகர்த்தின. இது சோவியத் பாணி மார்க்சீயமாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது சோவியத் ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. இதன் காரணமாகவே பி.டி.ரணதிவே (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்) தெலுங்கானா போராட்டத்தை விமர்சித்தார். அவர்களை வர்க்க விரோதிகள்/ சமரசவாதிகள் என்றார்.

தெலுங்கானா விவசாயிகளின் இப் போராட்டத்தைப் பற்றி அவருடைய கருத்துகள் மிகுந்த சலசலப்பை உண்டுபண்ணின. மேலும் மாவோவை சீர்திருத்தவாதி/ வர்க்க விரோதி/ மார்க்சீய விரோதி என்று வர்ணித்தார். அவர் அவ்வாறு சொன்ன சில வருடங்களில்தான் சீனப்புரட்சி நடைபெற்று முடிந்தது. இம்மாதிாியான நிலைபாடுகள் இயக்கத்திற்குள் மேலும் சலனத்தை அதிகாித்தன. மார்க்சீயத்திற்கு புதிய வரவாக மாவோவால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய சனநாயகம் என்ற கோட்பாட்டையும் ரணதிவே விமர்சித்தார். டிட்டோ/ பிரெளதர் பாணியில் மாவோவின் கோட்பாடுகளை அவர் கண்டித்தார்.

‘மார்க்ஸ்/ ஏங்கல்ஸ்/ லெனின்/ ஸ்டாலின் ஆகியோர்தான் மாாக்ஸீசீயத்தின் அதிகாரபூர்வ மூலவர்கள். இவர்களை தாண்டி மார்க்சீயத்திற்கு புதிய மூலவர்களை கண்டுபிடிக்க முடியாது ‘ என்று அவர் அறிவித்தாா.; ஒருவிதமான வர்க்க வழிபாட்டின் அணுகுமுறையே அது. முழுக்கவே சோவியத் பாணியிலான நிலைப்பாட்டை மேற்கொண்டதன் விளைவாக கட்சியின் முடிவுகள் கூட சோவியத் ரஷ்யாவிலிருந்து எடுக்கப்பட்டன. 1951ம் ஆண்டில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் வைக்கப்பட்ட கட்சியின் செயல்திட்டம் ஸ்டாலின்/ மாலன் சோவ்/ மெலடோவ்/ சுஸ்லோவ் ஆகியோரை கொண்ட சோவியத் மத்திய கமிட்டியின் கூட்டத்தில் தான் வரையப்பட்டது. இந்தியாவில் முன்னெடுக்கவேண்டிய அரசியல் பணிகளுக்கான வழிகாட்டுதல்கள் சோவியத் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டன. வரலாறு முழுவதும் பேய்கள்/ திருடர்கள்/ வீரர்கள் நிரம்பியிருப்பதைப் பற்றி மார்க்ஸ் வேடிக்கையாகக் குறிப்பிடுவார். அது மாதிாியே இந்திய மார்க்சீய வரலாறு முழுவதும் சோவியத் கிரேடுகளால் நிரம்பியிருக்கிறது. சோவியத்ரஷ்யா/ இந்தியா/ மேற்கு ஐரோப்பா இந்த மூன்றிற்கிடையேயான வேறுபாட்டை புாிந்து கொள்ள முயல வேண்டும்.

முதலாளியம் X உலக பாட்டாளி வர்க்கம் இரண்டின் நலன்களும் ஒன்றல்ல. உலகம் என்பதே ஙநான்ங சார்ந்த உலகத்தோடு தொடங்கிப் பார்க்க வேண்டும். உலக முதலாளி வர்க்கம்/ உலகப்பாட்டாளி வர்க்கம் இரண்டும் ஒரே சீரானதல்ல. பரவலான நிலைகளில் மேற்கிற்கும் கிழக்கிற்கும் வேறுபாடு பெருந்தொடராகவே இருந்து வந்துள்ளது. இது மாதிாியே ஆப்பிாிக்காவும் மத்திய கிழக்கும்/ ஆஸ்திரேலியா அண்டார்டிகாவும் இருக்கின்றன. புரட்சிகளின் சாத்தியப்பாடு குறித்து முழு முதல் கருத்தை நாம் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க முடியாது. எல்லா நிலைகளிலும் குறுக்கல்வாதம் (சுநனரஉவைடியேடளைஅ) நீக்கப்பட வேண்டுமாம். மார்க்ஸ் கூட குறுக்கல் வாதம் பற்றி அவ நம்பிக்கையே கொண்டிருந்தார். ஜெர்மனியின் ரைன் இசையைப் பற்றிக் குறிப்பிடும் போதும் ஷேக்ஸ்பியாின் நாடகங்களைப் பற்றி விமர்சிக்கும் போதும் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டார். அவாின் அவ நம்பிக்கைப் படியே இந்திய மார்க்சீயம் பொருளாதார குறுக்கல் வாதமாக மாறி விட்டது. வர்க்க புரட்சி நடைபெற்று முடிந்தால் எஞ்சியிருப்பவை எல்லாம் உதிர்ந்து கருகி விடும் என நம்புகிறது. கெட்டியாக இறுகி பற்றிக் கொண்ட எஞ்சியிருப்பவை எல்லாம் உதிரா நிலையில் புரட்சி என்பது காய்ந்து போன சருகுகளையே உற்பத்தி செய்யும். இந்தியா பற்றிய மார்க்ஸின் அணுகுமுறை எக்காலத்திலும் நிலையாக இருக்கவில்லை. அவாின் இந்தியா பற்றிய கருத்துகள் சாியாக அறியப்படாததே காரணம்.

இந்திய மார்க்சீயத்தின் ஐம்பது ஆண்டுகால வரலாறு துயரங்களும்/ விநோதங்களும் நிறைந்தது. சுதந்திரத்திற்குப் பின் 1950 லிருந்து 1960 வரை சோவியத் சார்பும் 1960 லிருந்து 1970 வரை சோவியத் நிலையை மேற் கொள்வதிலிருந்து வேறுபட்ட பிாிவினர் அல்லது அதனால் சலிப்பு ஏற்பட்டவர்கள் சீன சார்பு நிலையை எடுத்தார்கள். விளைவு இயக்கம் பிளவுபட்டது. 1970 லிருந்து 1980 வரை இந்திரா சார்பும் – சார்பற்றதும் எமர்ஜென்சி ஆதரவும் – எதிர்ப்பும் 1980 லிருந்து 1990 வரை சீனசார்பும்/ சோவியத் சார்பும் என்ற இரட்டை நிலை. 1990 லிருந்து 2000 வரை ஞூபுதிய பொருளாதார கொள்கை/ மத சார்பன்மை என்ற நீட்சியோடு பிந்தைய முதலாளித்துவத்தின் (Late capitalism ) புதிய அவதார வடிவங்களான ஞூதாராளமயமாக்கல்/ தனியார் மயமாக்கல்/ உலக மயமாக்கல்ஞூ என்பதான மந்திரங்களோடு நகர்தலை செலுத்தி வருகிறது. விதிவிலக்காக நிலச் சீர்திருத்த போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் வெண்மனியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும். இயக்கத்திற்கே உாிய கருத்தான அந்த வர்க்கப் புரட்சியில் தலித்துகள் குறி வைத்துக் கொல்லப்பட்டதை அதனால் விளக்க முடியவில்லை.

எப்பொழுதுமே உள்ளடங்குபவை எல்லாம் வெளியடங்குபவையாக இருக்கின்றன. வர்க்க வழிபாடு/ புரட்சி வழிபாடு/ கட்டுமான வழிபாடு இவைகளின் ஒட்டுமொத்தமே செயல்பாட்டின் சாராம்சமாக இருக்கிறது. மார்க்ஸ் கூட தன்னுடைய கட்டுமான கோட்பாட்டை மேற்குலகை அடிப்படையாக வைத்தே அமைத்தார். மார்க்சின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்த அல்தூசர் புதிய முறையியலை அறிமுகப்படுத்தினார். அதாவது சமூக உறவு அல்லது உற்பத்தி முறைமையை தளப்பார்வைக்கு உட்படுத்தினார். இருபெரும் பிாிவாக பிாிக்கப்பட்ட மார்க்சின் நிலைப்பாட்டை/ அவர் அமைப்பியல் முறைக்கு உட்படுத்தினார். அல்தூசாின் இந்த நிலைபாடு இந்திய சூழலுக்கு அம்பேத்கார் முன்னெடுத்த போராட்ட கருத்தியலுக்கு ஒத்துப் போவதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

சமூக மனிதன் தன் காலத்தைத் தாண்டிச் செல்வது சாத்தியமான விஷயமாக இருப்பதில்லை. மார்க்ஸ் கூட தன் காலத்திய கருத்துருவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் பிரச்சினைகளை அணுகி வந்தார். ஜெர்மன் நில உாிமைகளின் வரலாறு குறித்து ஜெர்மனிய சட்ட வரலாற்றாளரான வான் மார்ராின் எழுத்துகளின் மீது 1868 இல் ஏங்கல்சுடன் நடந்து வந்த கருத்து பாிமாற்றத்தின் போது 1868 மார்ச் 25 அன்று மார்க்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

மனிதகுல வரலாறு என்பது புதைபடிவ ஆய்வு போன்றது. ஒருசில நீதிமன்ற குருட்டுத்தனத்தின் காரணமாக சிறந்த அறிவாளிகளே கூட தன் கண் முன்னால் இருக்கும் விஷயங்களை பார்க்க தவறி விடுகிறார்கள். பின்னால் ஒரு இயக்கம் முன் வரும்போது நாம் காண தவறிய அனைத்து இடங்களிலும் ஆதாரங்கள் கிடைப்பது பார்த்து நாம் வியப்படைகிறோம். நான் வசிக்கும் இடத்திற்கு மிக அண்மையிலுள்ள ஹன்ஸ்ரெக்கன் என்னும் பிரதேசத்தில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை கூட பழைய ஜெர்மனிய நில உாிமை முறை நிலவி வந்தது. ஒரு வழக்குரைஞூாின் கண்ணோட்டத்தில் என் தந்தை என்னிடம் அது குறித்து பேசியதை நான் இப்போது நினைவு கூறுகிறேன். எவ்வளவுதூரம் இந்த நீதிமன்ற குருட்டுத்தனத்தில் நாம் ஆழ்ந்து இருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது. இந்திய வரலாறு குறித்து மார்க்ஸ் தயாாித்திருந்த குறிப்புகளில் இந்திய வரலாறு ஙவரலாறு இல்லாத வரலாறுங என்ற சராசாி கருத்தை அவ்வரலாறுகள் கொண்டிருந்தன என குறிப்பிடுவது அவசியம்.

மரபு வழிபட்ட கருத்துகள் கெட்டியாக ஙமதம்ங என்ற நிலையை அடைவது பற்றி மார்க்ஸ் குறிப்பிட்டார். அது மாதிாியே இந்திய மார்க்சீயம் ஒருவிதமான வழிபாட்டு மார்க்சீயம் என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தலித் இயக்கங்கள் எழுச்சி பெற்று வரும் இன்றைய சூழலில் சிறுபான்மையினரை அன்னியப்படுத்தும் அல்லது மற்றதாக கருதும் பார்ப்பனீயத்தை அடிப்படையாக கொண்ட இந்துத்துவம் மற்றொரு புறத்தில் எழுச்சி பெற்று வருகிறது ( குஜராத் நிகழ்வுகளை உதாரணமாக குறிப்பிடலாம்) அடிப்படை வாதம்/ பயங்கரவாதம்/ வகுப்பு வாதம் இம்மூன்றும் மிதந்து செல்கின்ற நிலையில் தலித்துகளை அம்பேத்காின் நிலைக்கு மாறாக ‘இந்து ‘ என்னும் பேரடையாளத்திற்குள் திணிக்கும் போக்கும் லாவகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தலித்துகள் மீதான ஒடுக்குமுறைக்குள் இந்திய மார்க்சீயத்தின் பயணம் அவசியமானதாக இருக்கிறது. இந்நிலையில் இந்திய சமத்துவம் எதிர்நிலைகளுக்கிடையேயான சமத்துவமாக நிறுவப்பட வேண்டும். இந்து சமூக அமைப்பின் சமத்துவம் பற்றி அம்பேத்கர் பின் வரும் கருத்தை கொண்டிருந்தார்.

‘இந்து சமூகம் சமத்துவம் அற்றதாக இருந்தால்/ இது என்றைக்கோ தூக்கி எறியப்பட்டிருக்கும். ஆனால்/ பழநிலையான சமத்துவத்தை கொண்டிருப்பதால் தான் இன்றுவரை தூக்கி எறியப்படாமல் இருக்கிறது ‘. இந்து சமூக அமைப்பானது பார்ப்பனீயத்தை தலைமையாக கொண்டு தூக்கி எறியப்படாமல் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இந்த சமயத்தில் புரட்சி பார்ப்பனீயம் அல்லது முற்போக்கு பார்ப்பனீயம் இதிலிருந்து விலகி நின்று நீாில் செல்லும் படகில் தன் பயணத்தை தொடர்கிறது. இந்திய மார்க்சீயமானது முதலில் இந்திய மயப்பட்ட மார்க்சீயமாக மாறவேண்டும். ( இந்துமயம் அல்ல).

இந்திய பெரு முதலாளிய/ பார்ப்பனீய நலன்களுக்கு எதிராக அதன் நலன்களை பறிமுதல் செய்யாவிட்டால் இறுகிபோன நிலையாகவே தொடர்ந்து இருக்கும். இது மட்டுமே இந்திய மார்க்சீயத்திற்கு அவசியமானதாகவும் தற்காலிகமானதாகவும் இருக்கிறது.

***

peer13@asean-mail.com

Series Navigation