இதுவும் உன் லீலை தானா ?

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

புஷ்பா கிறிஸ்ரி


விடிந்தது யார் பொழுது ?

அந்த இளமைக் காலத்து

இனிய பொழுதுகளில்

எங்கள் வாழ்வைத் தொலைத்து விட்டு

இன்று தேடுகிறோம் எங்கள் வாழ்வை

யார் செய்த பாவம் இது ?

மண்ணுக்கும் மனதுக்கும் பாலம் கட்டி

இன்று கண்ணீர் வடிக்கும் எங்கள் எண்ணங்கள்.

யார் தருவார் எங்கள் கனவை ?

எங்கள் கற்பனைகள், நினைவுகள்

நிகழ்வுகளை யார் தான் தருவாரோ ?

இல்லை யாரால் தான் தரமுடுயுமோ ?

எங்களைப் போன்றோரின்

காலாவதியாகிப் போன நிறைவேறாக்

கனவுகளின், துயரங்கள் நிறைகின்றனவே!

விதி என்ற ஒரு சொல்லில்

மானிடர் மதியை மறைத்திட்டு,

சதி செய்து, நின்றிருக்கும் இறைவா!

இதுவும் மாயவன் உன் லீலை தானோ ?

***
pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி