இதுஎன்ன?

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

சின்னப்பயல்



ஓரிடம்இல்லாமல்
மனம்அலைபாய்வதை
எண்ணிக்கலங்கவைக்கும்.

மனதுக்குள்
ஒத்திகைபார்த்தவை
நிகழ்வில்பிறழ்வதை
எண்ணிமயங்கவைக்கும்.

அடக்கமுயற்சித்தும்
தனக்குள்ளேயேபீரிட்டுக்கிளம்பும்
நேரில்சொல்லஇயலாததை
மனதுக்குள்பேசிப்பார்த்துக்
கொள்ளத்தோன்றும்.

உறுதியாகத்தெரிந்தபின்னும்
தயக்கம்வந்துதடுக்கும்.
பேசப்போகும்முதல்வார்த்தை
என்னவாயிருக்கவேண்டுமென்று
தீர்மானித்ததுவெறும்
உளறலாகவேமுடியும்

கற்றறிந்தமொழியும்
உன்னைக்கைவிடும்
வார்த்தைகளேஇல்லாமல்
வெறும்கண்களாலேயே
புரியவைத்தால்என்ன
எனதனக்குள்ளேயே
கோபமும்கொள்ளவைக்கும்.

தூரத்தில்இருந்து
பார்ப்பதில்உள்ளமகிழ்ச்சி
அருகில்வந்தால்
உள்ளூரபயமாய்
உருவெடுக்கும்.

அருகாமைச்சூழலில்
கிளர்வுறும்மனது
அடுத்துஇருந்தால்
அதிர்வுறும்

ஒத்திப்போடுவதிலும்
தள்ளிப்போடுவதிலும்
தற்காலிகமகிழ்ச்சி
கொள்ளவைக்கும்.
அவ்வாறு
தள்ளிப்போடுவதையும்
ஒத்திப்போடுவதையும்
எண்ணிமறுகணமே
வருந்தவும்வைக்கும்.

தன்னைக்கவனிப்பது
தெரிந்தால்
வழமைக்குமாறாகத்
தன்இயல்பிலின்றி
சிலசெயல்களைச்
செய்யவைக்கும்.

பிறர்கூடியிருக்கும்
வேளையில்
தன்னைத்தனித்துக்கண்டு
கொள்ளச்செய்வதற்கு
உரத்தசிரிப்பை
உறுதுணையாக்கிக்கொள்ளும்.

Series Navigation