இதயத்தை நிறைத்த இரு இலக்கிய நிகழ்வுகள்

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

ரஞ்சனிசமீபத்தில் காலம் சஞ்சிகையின் ஆதரவில் நடத்தப்பட்ட இரண்டு இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நன்றாக நடந்த நிகழ்வுகளைப் பாரட்ட வேண்டும்இ என் மனதுக்கு மகிழ்வு தந்த விடயம் பற்றி ஒரு குறிப்பு எழுத வேண்டும் என்ற என் மன உந்துதலில் இந்த குறிப்பொன்றை எழுதுகிறேன்.

எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்களின் இலக்கியப் பணியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவின் பதிவும் அவரின் உண்மை கலந்த நாட்குறிப்புக்கள் என்ற புத்தக வெளியீடும் மே மாதம் 23ம் திகதி ருniஎநசளவைல ழக வுழசழவெழ ல் நிகழ்ந்தது. ஸ்ரீஸ்கந்தன் அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து திருவாளர்கள் கனகசபாபதிஇ மகாலிங்கம்இ (உதயன்) லோகேந்தி;ரலிங்கமஇ; வெங்கட் ரமணன்இ ஜெயகரன் ஆகியோர் திரு முத்துலிங்கதின் கதைகள் சம்பந்தமான தமது கருத்துக்களையும் அவரின் ஒழுங்குமுறைஇ நேரம் தவறாமை போன்ற பண்புகளை பற்றியும் பகிர்ந்து கொண்டனர். ஜோர்மனியிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் கருணாகரமூர்த்தி தன் பார்வையில் எழுத்தாளர் முத்துலிங்கத்தின் கதைகளை விமர்சனம் செய்தார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர்; நூர்மான் கலந்து கொண்டார்.

“எல்லோரையும் திருப்திப் படுத்துவது என்பது முடியாத காரியம.; அத்துடன் என் மன உணர்வுகளையே நான் எழுதுகிறேன். வாசகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக எழுதவில்லை என்ற கருத்தை எழுத்தாளர் முத்துலிங்கம் தன் பதிலுரையில் குறிப்பிட்டதுடன் இப்படியான விழாக்களில் ஒன்றில் பாராட்டுவார்கள் அல்லது குறை சொல்வார்கள்; அதனால் தனக்கு இப்படியான நிகழ்வுகள் பிடிக்காது என்பதையும் விளங்கப்படுத்தினார். காலம் செல்வம் தனது நன்றியுரையில் முத்துலிங்கம் அவர்கள் யார் என்று தெரியாத பொழுதுகளில்இ அவர் கனடாவில் இல்லாத காலங்களில் கூட அவர் புத்தகங்கள் பற்றிய கலந்துரையாடல்களை தான் வைத்ததை குறிப்பிட்ட போது அங்கிருந்த அத்தனை பேருக்கும் செல்வம் அவர்கள் செய்யும் இலக்கிய சேவையின் மகிமை புரிந்திருக்கும.;

யுன் மாதம் 6ம் திகதி ளுஉயசடிழசழரபா ஊiஎiஉ ஊநவெசந ல் மகாகவியின் ஆறு காவியங்கள் எனும் நூலின் வெளியீடு திரு கனகசபாபதி அவர்களின் தலைமையில் நடந்தது. மகாகவியின் கவிதைகளை தொடந்து வாழ வைத்துக் கொண்டிருக்கும்;; பேராசிரியர் நூர்மானின் நல்ல நட்புஇ மகாகவிக்கு கிடைத்த ஒரு பேறு எனக் குறிப்பிட்டார் கனகசபாபதி அவர்கள். தொடர்ந்து பேசிய குறமகள் மகாகவியின் நாடகங்களுடன் தனக்குள்ள தொடர்பைச் சொல்லி மகாகவியின் வாரிசாக அவரின் மகன் கவிஞர் சேரன் இருக்கிறார் என்றார்;. பேராசிரியர் சித்திரலேகா அவர்கள் புத்தகத்தைப் பதித்த பேராசிரியர் நூர்மான் அவர்கள் மகாகவியின் படைப்புக்கள் உருவான பொழுதுகளையும் குறிப்பிட்டதன் சிறப்பை எடுத்துக் கூறினார். மகாகவிக்கும் தனக்கும் உள்ள உறவை சுவாரஸ்யமாக விவரித்த பேராசிரியர் மௌனகுரு அவர்களஇ; மகாகவியின் சிறப்பான சில கவிதைகளில் தன் பங்கையும் பெருமையுடன் தெரிவித்தார். பின்னர் திவ்விய ராஜன் அவர்கள் மகாகவியின் சில கவிதை வரிகளுக்கு தன் கணீரென்ற குரலில் உயிர் கொடுத்த போது அது அனைவரினதும் உடலைச் சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து முதற்பிரதியை வாங்கிய மகாகவியின் நண்பர் திரு தர்மலிங்கம் அவர்களும் மகாகவிக்கும் தனக்கும் இடையே இருந்த நட்பை பற்றிப் பேசினார.;

நிறைவாக சாதிப்பிரச்சனைஇ நாட்டுப்பிரச்சனை என்பன பற்றி மகாகவி எழுதிய சில கவிதைகளை வாசித்த பேராசிரியர் நூர்மான் அவர்கள் அவை இந்தக் காலத்துக்கும் பொருத்தமாக இருப்பதை அழகாகச் சுட்டிக் காட்டினார். அவரின் தெளிவான தமிழ் உச்சரிப்பிலும்இ அழகு தமிழிலுமஇ; நல்ல குரலிலும் சபை நிச்சயமாக நெகிழ்ந்திருக்கும.; சொன்னபடி நேரத்துக்கே நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருந்தால் பேராசிரியர் நூர்மான் அவர்கள் இன்னும் கொஞ்ச நேரம் பேச அவகாசம் இருந்திருக்குமே என்ற ஆதங்கம் மனதில் வந்தது.

அத்துடன் இரண்டு நாட்களும் காலம் வாழும் புத்தகங்களின் கண்காட்சியும் நடத்தப்பட்டது. மொத்தத்தில் இரு நாட்களும் மனதை நிறைத்த நல்லதொரு இலக்கிய நிகழ்வுகளாய் அமைந்தன என்றால் மிகையாகாது. ஆனால் மண்டபங்கள் இப்படியான சில நிகழ்வுகளில் நிறைவது தனிப்பட்டவர்களின் அழைப்புக்களால் தான் மற்றும் படி இலக்கியத்திற்காக அல்ல என்ற யதார்த்தத்தை வந்துள்ளோரின் எண்ணிக்கை மீண்டும் நிருபித்ததில் மனதுக்கு கவலையாக இருந்தது.

‘சுடர் ஏந்திய தொடர் ஓட்டம்;’ என்ற பெயருக்கேற்ற வகையில் மீண்டும் மீண்டும் சுடர் ஏற்றும் காலம் சஞ்சிகையின் இந்தத் தொடர் ஓட்டம் மேலும் பல இலக்கிய சுடர்களை ஏற்ற இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் முடிந்த பங்கை அளிக்க மனமார முன் வர வேண்டும்!


sri.vije@gmail.com

Series Navigation

ரஞ்சனி

ரஞ்சனி