இடம் : தமிழ்நாடு நாடு இந்தியா பின்னணி: மதக்கலவரம்

This entry is part [part not set] of 7 in the series 20000611_Issue

இவன் மனிதனா… ?


திடுக்கிற்று நின்றது காற்று.

கருகித் தீய்ந்தது சூரியன்.

வதங்கி உதிர்ந்தன தளிர், இலை, பூக்கள்.

மனிதனல்ல மிருகம்.

இமையாது உருளும் கண்களாய்

காது மடலோரம் பதுங்கிற்று-சட்டம்.

காவலோ-

புறந்தலையைக் குறிவைத்து

அரவமற்றுப் பின் தொடரும்.

நீதான் மிருகம் X இல்லை நீதான்

சொல்லியும்

சொல்லாது நழுவியும்

வியாபார விதிபேணி

உண்மையை

அளந்தே உரைத்தன

பத்திரிக்கை… மீடியாக்கள்.

மனிதன் இறந்துவிட்டான்

புராதன வீட்டில்

நிழல்களாய் உலாவும்

மூதாதையர் முணுமுணுப்பை

மொழிபெயர்த்தது சரித்திரம்.

சந்துமுனையிலோ… சாலையோரமோ…

‘பேரருள் ‘ இரந்தபடி

அப்போதும் கேட்கும்

பள்ளிவாசல் பாங்கொலியும்

கோயில்மணி ஓசையும்.

கால-இட-வெளி தாண்டிய

சூன்யத்தில்

ஓரொலியாய் எதிரொலிக்கும்

அதன் உள்ஒலி.

அதனின்றும் பிரிந்த

கதிர்இழையொன்று

கீழே-தரையில் ‘சாபமாய்க் ‘ கிடக்கும்

மனிதனின் மனவாசல்

மெல்லத் தொடும்-

மனிதம் வேண்டி.

-முடவன் குட்டி

  Thinnai 2000 June 11

திண்ணை

Series Navigation