This entry is in the series 20040603_Issue

பிச்சினிக்காடு இளங்கோ ( சிங்கப்பூர்)


நதியின் மூலம்
இன்னும் இன்னும்
பொம்மையின் மூலமாய்…

நதிக்கயிறால்
கட்டப்பட்டு
நாடகமாடுகிறது பொம்மை

மூலநதியில் ஊர்ந்து வந்தவை
இன்னும்
ஊர்ந்துகொண்டும்
ஊறிக்கொண்டும்
பொம்மலாட்டங்களின்
மூல மின்சாரம்…

அனலுக்கும் புனலுக்கும்
அப்பாற்பட்டது
அதன் மின்சாரம்…
சாரங்களைச் சுமந்துகொண்டு
சந்ததி சந்ததியாய் ஓடுகிறது

தொன்மைக்கூடம்
புதுமைக்கோலம்
எல்லாச்சிறப்புக்கும்
அதுவே…
—-
ilango@stamford.com.sg

Series Navigation