ஆதங்கம்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

புதுவை ஞானம்


அவனவனிடம்
ஏமாந்த ஆதங்கத்தில்
புதைந்து கொண்டிருந்தேன்
ஆதங்கத்தில்
வந்தமர்ந்த
வண்ணத்துப் பூச்சி
வாரிச் சென்றது
ஆதங்கத்தை ‘

****

Series Navigation

ஆதங்கம்!

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

ஜோதிர்லதா கிரிஜா


ஆ! தங்கம் விலை குறைந்த தென்று
ஆனந்தம் சிலருக்கு – ஆனால்,
ஆதங்கம் சோறு விலை குறையலையே என்று
அன்றாடங்காய்ச்சிகள் எங்களுக்கு.

செல்லுலர் தொலைபேசி இனிச்
செல்லாத சிற்றூரே இருந்திடாதாம்!
நெல்லுவிலை குறையாதிருக்கும் வரை
‘செல்லு ‘ பற்றி எமக்கென்ன குறை ?
………

jothigirija@vsnl.net

Series Navigation

ஆதங்கம்..

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

ஆனந்தன்


ஆங்கிலேயனுக்கு
அடிமைப் பட்டு
ஆண்டுகள் சில உருண்டன
அடிமைத்தனத்தில்…

காகங்களும்,
கிளிகளும் கூட
கிளைகளில் கூடுகட்ட
கடினப்பட்ட நாட்களது.

உயிரைக் கூட
உன்னதமாக எண்ணாது
உழைத்து வாங்கித் தந்த
உன்னத சுதந்திரம் இது.

பஞ்சப் பட்டினியை மட்டும்
பற்றாக் குறையின்றி
பக்குவமாய் சேர்த்து வைத்த
நாடிது.

மக்கள் தொகை
மகத்தாய் பெருக,
நிற்கக் கூட
நிழலில்லாமல் போனது…

நிழலுக்கு வேண்டுமானால்
குடை விாிக்கலாம்
மழைக்கு என்ன
மாயமா செய்ய முடியும் ?

ஆயிற்று
ஆண்டுகள் நூறு
பூமியில் பிறந்தேன்
என்று பேரு…

என்னையும் வெட்ட
என்றேனும் ஒரு நாள்,
தேதி குறிக்கப் படலாம்
என் மரண நாளாய்…

செடிகளை விதைத்து
மரங்களை பயிாிடுங்கள்,
மக்களே…
மழைக்காக இல்லாவிட்டாலும்
பறவைகள் வீடுகட்ட!

***
ஆனந்தன்
k_anandan@yahoo.com

Series Navigation

author

ஆனந்தன்

ஆனந்தன்

Similar Posts