ஆசியாவில் வளர்ச்சி வறுமையைக் குறைத்தது என்கிறார் சுர்ஜித் எஸ் பல்லா.

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

சந்தீபன் தேவ்


சுர்ஜித் எஸ் பல்லா சுதந்திரச் சிந்தனை கொண்ட ஒரு பொருளாதார நிபுணர். புனிதமான கருத்துகள் என்று சொல்லப் படுகிறவற்றை தகர்ப்பவர். அவருடைய புதிய் நூல் : ‘ தேசமே இல்லை என்று கற்பனை செய்யுங்கள் ‘ . இந்த நூலில் உலக வங்கியின் கணிப்புகளையும், இந்திய அரசின் கணிப்புகளையும் இவர் சாடுகிறார். உலக வளர்ச்சிக் கொள்கைகளை இவர் கருத்துகள் மாற்றியமைக்கக் கூடும். சுர்ஜித் எஸ் பல்லா இந்தப் பேட்டியில் சந்தீபன் தேவுடன் தன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

உங்களை இந்தப் புத்தகம் எழுதத்தூண்டியது எது ?

மூன்று வருடங்களுக்கு முன்பு தேசீய உதாரணங்கள் சர்வே (National Sample Survey) வெளியிடப்பட்டதைப் படித்தேன். இது 1998-ம் வருடத்திற்கானது. இதில் இந்தியர்களில் 42 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே என்று சொல்லப் பட்டது. 1987-ல் இந்த எண்ணிக்கை 37-38 சதவீதமாய் இருந்தது. இந்த 11 வருடங்களில் தனிநபர் வருமான வளர்ச்சி 47 சதவீதம் என்று புள்ளிவிவரம் சொல்கிரது. இதில் எங்கோ தவறு இருக்கிறது என்று எண்ணினேன்.

என்ன தவறு ?

உலக வங்கியும், இந்திய அரசும் ஆய்வுக்குப் பயன்படுத்திய வழிமுறைகளில் தான் தவறுஇ இருக்கிறது. வறுமையைப் பற்றீய புள்ளிவிவரங்களைச் சேகரிக்க ‘தேசிய சர்வே ‘ குடும்பங்களை நாடி புள்ளிவிவரம் சேகரித்தது. அதேபோல் ‘தேசியக் கணக்காயமும் ‘ சேகரித்தது. இது தான் இந்தியாவும் மற்ற நாடுகளும் கொண்டிருந்த வழமுறை. திடாரென்று உலக வங்கி சர்வேயை மட்டும் நம்பிய ஒரு வழிமுறையைக் கொண்டு வந்தது. இந்திய அரசும் உலக வங்கியுடன் ஒத்துப் போய் அந்த வழிமுறையைக் கையாண்டது. என் ஆய்வுப் படி இந்த முறை சரியல்ல. பல தவறான சித்திரத்தை அளிக்கிறது. விசித்திரமான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது. 1993-ன் உலக வங்கி சர்வே படி இந்தியா எதியோப்பியாவை விடவும், குவானாவை விடவும் 30 சதவீதம் ஏழ்மை அதிகமாய் உள்ள நாடாகவும், சீனாவை விட மும்மடங்கு செல்வச் செழிப்புள்ள நாடாகவும் உலக வங்கியின் சர்வே தெரிவிக்கிறது. 1950-ல் உஅலக வங்கியின் புள்ளிவிவரங்களை எடுத்துக் கொண்டு பின்னோக்கிக் கணக்கிட்டால் சராசரி நுகர்வு அளவுகள் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகக் குறைவாய்க் காண்கிறது. அதாவது, உலக வங்கியின் புள்ளி விவரம் அசரியென்றால், 1960ல்- இந்தியர்கள் எல்லோரும் அநேகமாய் இறந்து போயிருக்க வேண்டும்.

இந்த அணுகுமுறையை ஏன் மாற்றினார்கள் ?

திருப்திகரமான பதில் இதற்கு என்னிடம் இல்லை. அரசியல் பொருளாதாரக் காரணங்கள் இருக்கலாம். இந்துய அரசு மானிலங்களுக்கு வறுமைக் கணிப்புகளைச் சார்ந்து மானியங்கள் அளிக்கிறது. உலக வங்கியும் அவ்வாறே செய்கிறது. வறுமை அதிகம் என்று புள்ளிவிவரம் காண்பித்தால் மேலும் மேலும் உதவி பெறலாம் என்பது ஒரு காரணமாய் இருக்கலாம். இது நிர்வாக ஒழுக்கம் சம்பந்தப் பட்ட பிரசினை.

அசாதாரணமான உலகமயமாதம் நிகழும் காலகட்டத்தில் வறுமை குறைந்திருக்கிறது என்றால், எப்படி ?

உலக வங்கி சொல்வது என்னவென்றால், பொருளாதார வளர்ச்சி வறுமைக் குறைப்பிற்கு இ இட்டுச் செல்லவில்லை என்பதே. இதனால் வேறு ஒரு முறையில் முயல வேண்டும் என்கிறார்கள். நான் சொல்வது : பொருளாதார வளர்ச்சியே போதும் என்பதே. லத்தீன் அமெரிக்கா, சஹாராவிற்குக் கீழ் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த இருபது வருடங்களில் பொருளாதார வளர்ச்சி இல்லை. வறுமையும் குறையவில்லை. ஆனால் ஆசியாவில் பொருளாதார வளர்ச்சியும் சரி, வறுமைக் குறைப்பும் சரி, முன்னெப்போதும் காணாதபடி நிகழ்ந்துள்ளது. இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு ஏன் இந்த வழிமுறைகளை ஆப்பிரிக்காவில் முயற்சி செய்யக் கூடாது ? வளர்ச்சியே கண்கூடாய்க் காணும் மாற்றத்திற்குக் காரணம் என்றால்,வளர்ச்சிக்கு என்ன காரணம் என்றல்லவா பார்க்க வேண்டும் ?

எனில், உலகமயமாதலுக்கு ஏன் எதிர்ப்பு ?

முதலில் எனக்கும் அதே கேள்வி தான். ஏழை நாடுகளுக்கு உலக மயமாதல் நல்லது என்றே தெரிகிறது, இருந்தும் ஏழை நாடுகளிலேயே இந்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், ஏழை நாடுகள் 3.1 சதவீதம் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் வளர்ந்த நாடுகள் 1.55 சதவீதம் வளர்ச்சி தான் பெற்றன. வறியவர்கள் நிஜமாகவே பெருமளவு பாதிக்கப் பட்டால் சீனா, பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகள் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். ஒரு சில எதிர்ப்புகள் ஆங்காங்கே உள்ளன, ஆனால் அது உளவியல் சம்பந்தப் பட்டது, பொருளாதாரம் சம்பந்தப் பட்டதல்ல. வளர்ந்த நாடுகளின் மத்திய தர வர்க்கமே உலக மயமாதலால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இழப்புக்காளான மக்கள்குழுவாகும். 70-கள் வரையில் அமெரிக்காவில் மத்திய தரவர்கக்த்தின் வருமானம் 24 வருடங்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகிக் கொண்டிருந்தது. இன்று, 58 வருடத்துக்கு ஒரு முறைதான் இரட்டிப்பாகும் என்ர நிலை. இந்த எதிர்ப்புகள் ஏழைகளுக்கானவை அல்ல.

வேறு என்ன வழி ?

50-கள் தொடங்கி கல்வி ஆசியாவில் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஒரு மூடிய பொருளாதாரமாய் இருந்தால் அந்தக் கல்வியால் பயனில்லை. பெரும் வளர்ச்சிக்குக் காரணம் வெளியேயிருந்து ஏற்பட்ட தேவையே. உலகமயமாக்கலுடன் இணைந்த கல்வியே வளர்ச்சிக்கு மிக வலுவான வழி. சீனாவில் உயர்கல்வி பெற்றவர்கள் பெருமளவில் இருந்தனர் ஆனால், சீனாவின் பொருளாதாரம் திறக்கப் படுமுன் வளர்ச்சி ஏற்படவில்லை. கல்வியும், திறந்த சமூகமுமே வளர்ச்சியின் மிக முக்கியமான தேவைகள். திறப்பு என்பது உலகமயமாதலே.

சில முக்கிய தகவல்கள் :

*** 1980 முதல் 2000 வரையில் உலக வறுமை 44 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாய்க் குறைந்தது.

*** வளரும் நாடுகளின் வளர்ச்சி 3.1 சதவீதம் . வளர்ந்த நாடுகளின் வளர்ச்சியோ 1.3 சதவீதமே.

*** ஏழைகளாய் அல்லாதவர்களின் வருமான 10 சதவீதம் உயர்ந்தால், ஏழைகளின் வருமானம் 18 சதவீதம் உயர்கிரது.

*** தனி நபர் வருமான வேறுபாடு (இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்) 2000-ல் தான் மிகக் குறைவு.

Series Navigation

சந்தீபன் தேவ்

சந்தீபன் தேவ்