அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 18 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

மஞ்சுளா நவநீதன்


கேள்வி 40 : நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பெரும்பான்மையோரின் கருத்துகளை ஏற்றுக் கொள்வது தானே ஜனநாயகம் ?

இந்தக் கேள்விக்கு மார்க்ஸ் சொல்லும் பதிலில் பிரசினையில்லை. ‘சனநாயகம் என்றால் சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கட்டுப் படுவது மட்டுமல்ல; சிறுபான்மையோருக்குப் பாதுகாப்பளிப்பதும், தங்களது கருத்துகளை அவர்கள் சிரச்சாரம் செய்து பெரும்பான்மைக் கருத்தாக மாற்ற உரிமையளிப்பதும் சேர்த்துத் தான் சனநாயகம். ‘

ஜனநாயகம் என்பது பெரும்பான்மைவாதம் அல்ல என்று முன்னமே சொன்னோம். இதை மார்க்சும் ஒப்புக் கொள்கிறார். ஆனால் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை , முஸ்லிம் பெரும்பான்மையாய் இருக்கும் பகுதிகள் பாகிஸ்தானாய் உருவானது பற்றிய எதிர்ப்புணர்வு எதுவும் மார்க்ஸிடம் வெளிப்படக் காணோம். இதனால் இவருடைய சிறுபான்மையாளர்கள் மீதான அக்கறை போலித்தனம் ஆகிறது. சிறுபான்மையினர் மீதான அக்கறை அவர்கள் முஸ்லீம்களாக இருக்கும் போது மட்டும் தான் வெளிப்படவேண்டும் என்று எழுதா விதி ஒன்றை இவர் ஏற்படுத்திக் கொண்டிருப்பார் போலிருக்கிறது.

கேள்வி 41: பாபர் மசூதி தான் இடிக்கப் பட்டுவிட்டதே போனால போகட்டும் என இஸ்லாமியர் இதனை ஏற்றுக் கொண்டால் இனி பிரசினை இல்லை தானே ?

கேள்வி 42 : இஸ்லாமியரின் மனநிலை எப்படி இருக்கிறது ?

கேள்வி 43 : இஸ்லாமியத் தீவிரவாதத்தை நாம் கண்டிக்க வேண்டாமா ?

கேள்வி 44: நீங்கள் சொல்வதெல்லாம் சரியாகவும் நியாயமாகவும் தான் தோன்றுகின்றன. எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்கிறேன். இந்து வகுப்புவாதம் என்பது நம்மை உடனடியாக எதிர்கொண்டுள்ள ஆபத்தான சூழல் என்பது விளங்குகிறது. இந்நிலையில் நம்முடைய பங்கு என்ன ?

இப்படிப் பட்ட கேள்விகளை எழுப்பி பதில் சொல்லும் மார்க்ஸ் அடிப்படைப் பிரசினையைப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்து தீவிரவாதம் எதிர்க்கப் படவேண்டியது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் தான். பிரசினை இருக்கிறது. இந்து மதம் என்று ஒன்றுமே இல்லை, இந்துக்கள் எல்லாருமே அரக்கர்கள், இந்துமதம் என்பதே பிரிட்டிஷாரின் கண்டுபிடிப்பு, சாதியம் ஒன்று தான் இந்து மதத்தின் அடையாளம், பார்ப்பனியம் ஒன்று தான் இந்து மதத்தின் அடையாளம், இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம், இந்துமதத்தை விட்டு , இஸ்லாத்திற்கு மாறுவது தான் ஒரே தீர்வு என்றெல்லாம் அபத்தங்களையும், பொய்களையும், அவதூறுகளையும் பேசி மார்க்ஸ் போன்றவர்கள் இந்த நோக்கத்தைச் சாதிக்க முடியாது. இந்த வழிகள், இந்து தீவிரவாதத்தைத் தனிமைப் படுத்துவதற்குப் பதிலாக தம்முடைய இந்து அடையாளங்களைத் தக்க வைத்துக் கொண்டு மதச்சார்பின்மைக்கும் , மத நல்லிணக்கத்துக்கும் சார்பாக செயல்படமுடியாது என்ற ஒரு தவறான எண்ணத்தைத் தான் பெரும்பாலான இந்துக்கள் மனதில் தோற்றுவிக்கும் அப்படி ஒரு பிம்பம் உருவானால் அவர்கள் தேர்வு செய்வது தம்முடைய இந்து அடையாளங்களாகத்தான் இருக்கும். அந்த இந்து அடையாளங்கள் மார்க்ஸ் போன்ற இடதுசாரிகளால அவதூறு செய்யப் பட்டு இழிவு செய்யப் பட்டால் , இந்துக்கள் போய் அடைக்கலமாகும் இடம் இந்து தீவிரவாத இயக்கங்களாய்த்தான் இருக்கும் இந்த அடிப்படை புரியாமல் மார்க்ஸ் போன்றவர்கள் தொடர்ந்து உளறிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

இந்து மதத்தின் முற்போக்கு அம்சங்களை, பாரம்பரியங்களை முழுக்க மறுத்து விட்டு, இந்து மதத்தின் கூறுகள் மீது வெறுப்பை மட்டும் கக்குவது இந்துத் தீவிரவாதத்தை வலுப்படுத்துமே தவிர , அதை பலவீனப் படுத்தாது.

*********

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 17 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

மஞ்சுளா நவநீதன்


அடுத்து கேள்விகள் புறக்கணிக்கப் படும் இஸ்லாமியர்கள் பற்றியது. இந்தியாவில் புறக்கணிக்கப் படுபவர்கள் என்று பார்த்தால் எல்லாக் குழுவினரும் அடங்குவார்கள். இருப்பினும் மார்க்ஸின் கேள்வி பதில்களைப் பார்க்கலாம்.

கேள்வி 27 : இசுலாமியரது நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படு வருவதாக முன்பு ஒரு முறை குறிப்பிட்டார்கள். விளக்க முடியுமா ? என்பது மார்க்ஸ் முன்வைக்கும் கேள்வி.

‘முடியும் ‘ என்று தொடங்கி முதன் முதல் மார்க்ஸ் முன்வைப்பதே காஷ்மீர்ப் பிரசினை பற்றியது தான். ‘காசுமீர் விஷயத்தில் ஐ நா அவைத் தீர்மானத்திற்கு எதிராகவும் கொடுத்த வாக்குறுதியை மீறியும் இந்திய அரசு நடந்து கொள்வதிலிருந்து தொடங்கலாம். ‘ என்று தொடர்கிறார் மார்க்ஸ். இந்தியா ஐ நா தீர்மானத்திலிருந்து மீறியது என்பது எப்படி இஸ்லாமியர்களின் சிறுபான்மையினரின் உரிமை மீறல் என்று தெரியவில்லை. அதில்லாமல், உருது மொழியைப் புறக்கணிப்பது என்ற செயலுக்கு அவர் உதாரணம் தருவது காங்கிரஸாரின் ஆட்சியில் நடைபெற்ற விஷயங்கள். அதற்கு ஏன் பா ஜ க மீது குற்றம் சாட்ட வேண்டும் என்றும் புரியவில்லை. ‘மொழிவாரி மானிலங்கள் என்பது அடிப்படையில் ஜனநாயகக் கோரிக்கை தான் என்றாலும் . அதுவும் அது கூட இசுலாமியருக்குப் பாதிப்பாகவே முடிந்தது என்று எழுதிச் செல்கிறார். இது வேறெப்படி இருக்க முடியும் என்று தெரியவில்லை. உதாரணமாக தமிழ்நாட்டில் தமிழ் தவிர மற்ற மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள் இஸ்லாமியர்கள் போலவே அவர்களும் ஓரளவு பாதிக்கப் பட்டவர்கள் தான். இது தவிர்க்கக் கூடிய ஒன்று என்று தோன்றவில்லை. எல்லா மானிலங்களிலும் மொழி வாரியாக, மதம் வாரியாக, சிறுபான்மையினர் இருக்கத் தான் செய்வார்கள். சாதியினை அடிப்படையாய் வைத்துப் பார்த்தால், பெரிதும் எல்லாச்சாதியினருமே சிறுபான்மையினர் தான். சிறுபான்மையினரின் கல்வி நிறுவன உரிமைகள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.

‘வடநாட்டில் பெரும்பாலான இசுலாமியரின் தாய்மொழி உருது. ஆனாலும் உருது மொழிக்கான மானிலம் ஏதுமில்லை ‘ என்பது மார்க்ஸின் அறியாமையைக் குறிக்கிறது. உருது மட்டுமல்ல, செளராஷ்டிரா, கொங்கணி, குடகு மொழி, துளு மொழி, படகர் மொழி போன்ற மலைவாசிகளில் மொழி உட்பட பல மொழிகளுக்குத் தமக்கென மானிலம் இல்லை. அதில்லாமல் இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்துக்களுக்கும் கூட உருது தாய் மொழியாய் இருந்தது. உருது விசேஷமான இந்திய மொழி. இந்த மொழியை பெர்சியன்., அரபு போன்ற வேற்று நாட்டு மொழி என்று பலரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். முகலாய அரசின் கீழ் ராணுவமுகாம்களில் உருவான இந்த மொழி ‘இந்துஸ்தானி ‘ என்ற பெயரில் இரு எழுத்துருக்களில் – பெர்சிய எழுத்துரு, தேவநாகரி எழுத்துருக்கள் – வழங்கலாயிற்று. பெர்சிய எழுத்துருவில் எழுதப் பட்டபோது இது உருது என்று வழங்கப் பட்டது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது, இந்துஸ்தானி மொழிகளின் வேறு வேறு வடிவங்கள் வடிகட்டப்படும், கலவை செய்யப்பட்டும் உருவான இந்துஸ்தானி வளரலாயிற்று. வடமொழிகளில் பலவும் தேவநாகரி எழுத்துரு என்பதால் தேவநாகரி எழுத்துரு சுலபமாகப் பரவலாயிற்று.

கேள்வி 28 : அரசியல் வகுப்புவாதமயமாகிறது என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் ?

வகுப்புவாதம் என்றால் இந்து மதவாதம் என்பது தான் மார்க்ஸின் புரிவு என்பதால், மற்ற மதவாதம் இதில் பேசப்படவில்லை. வகுப்புவாதம் ஒன்றையொன்று வளர்க்கும் சூழல் இது. இந்து மதவாதத்திற்கு இஸ்லாமிய மதவாதம் தீர்வாகாது. பா ஜ க வின் மதவாத அரசியல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் , பிராந்தியக் கட்சிகள் இவற்றின் ஒற்றுமையால் வெற்றி கொள்ளப் படவேண்டும். பா ஜ க எதிர்ப்பை இந்துமத எதிர்ப்பாய் மாற்றுவதன் மூல இதைச் செய்ய முடியாது.

கேள்வி 29 : அரசுப் பணிகளில் இசுலாமியர்க்கு உரிய பங்களிக்கப் படவில்லை என்று சொல்கிறீர்களா ?

கேள்வி 30 : இராணுவம், காவல்துறை ஆகியவற்றில் இசுலாமியருக்கு உரிய பங்களிக்கப் பட்டுள்ளதா ?

இந்த் இரு கேள்விகளுக்கும் புள்ளி விபரங்களுடன் இஸ்லாமியருக்கு எப்படி விகிதாசார முறையில் உரிய இடம் கிடைக்க வில்லை என்று மார்க்ஸ் பட்டியலிடுகிறார். விப்ரோவின் இஸ்லாமியத் தொழிலதிபர் அசிம் ப்ரேம்ஜி இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என்றாலும் இஸ்லாமிய மக்களுக்கு அவர்களுக்கு உரிய விகிதாசார முறையில் வேலை வாய்ப்புகளோ அல்லது உயர் கல்வி வாய்ப்புகளோ அளிக்கப் படவில்லை என்பது உண்மை தான்.

கேள்வி 31: மதக் கலவரங்களில் கொல்லப் பட்ட இசுலாமியர் பற்றி ஏதேனும் புள்ளி விவரங்கள் உண்டா ?

கேள்வி 32 : சமீபத்திய மதக் கலவரங்களின் பொதுப்படையான பண்புகள் என ஏதாவ்து சொல்ல முடியுமா ?

மதக் கலவரங்களில் இசுலாமியர் மீதான பாதிப்புகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை.

கேள்வி : 33 : இந்தியப் பொருளாதாரத்தில் இசுலாமியர் ஆதிக்கம் பற்றி ஏதும் சொல்ல முடியுமா ?

கேள்வி 34 : அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகள் வங்கிக் கடன்கள் முதலியவை எந்த அளவு இசுலாமியரைச் சென்றடைகின்றன ?

கேள்வி 35 : கல்வி நிலையில் இசுலாமியர் எப்படி உள்ளனர் ?

கேள்வி 36 : ஆனால் இசுலாமியருக்கு வெளிநாடுகளிலிருந்து ஏராளமாய்ப் பணம் வருகிரதே ?

கேள்வி 37 : இசுலாமியருக்கு எதிராக தொடர்புச் சாதனங்கள் எப்படி செயல் படுகின்றன ?

இந்தக் கேள்விகள் எல்லாமே திட்டமிட்டு இசுலாமியருக்கு எதிராக எல்லோரும் அணி திரள்கிறார்கள் என்ற கருத்தை உருவாக்க எழுப்பபட்டவை. இசுலாமியர் மீதான பொய்ப்பிரசாரம் ஒரு சில ஊடகங்களில் மேற்கொள்ளப் பட்டால், ‘இந்து ‘ போன்ற ஏடுகளில் அப்பட்டமகவே இந்துக்களுக்கு எதிர்ப்பாகக் கருத்துகள் கட்டப் பட்டு வருகின்றன. இந்தியாவின் ஊடகங்கள் அணி சேரா நிலையில் இல்லை. சுதந்திரமான கருத்துகள் வெளியிடப்படுகிற சூழல் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட செயல் திட்டத்திற்கு ஆதரவான முறையில் தான் செயல்படுகின்றன. இசுலாமியருக்குப் பணம் வருகிறது போன்ற பொய்ப்பிரசாரங்கள் போலவே, இந்து அமைப்புகளுக்கு வரும் பணம் வன்முறைக்குப் பயன்படுகிறது என்ற பிரசாரம் நடைபெறுகிறது. ஊடகங்களில் உண்மை என்ற அமைப்பு இப்படிச் சாய்வு கொண்ட செய்திகளையும், குறிப்புகளையும் அவ்வப்போது வெளியிட்டு பத்திரிகைகளைக் கண்டனம் செய்கின்றன. பொதுவாகவே இந்தியாவின் பெரும் ஊடகங்கள் தொழிலதிபர்களின் கட்சி சார்பிற்குப் பாடுபடுகிறவை என்பதால் இந்தச் சாய்வுகள் ஏற்படுகின்றன.

கேள்வி 38 : தொலைக் காட்சியில் திப்பு சுல்தான் கதையைக் கூடத்தான் தொடராக காட்டினார்கள் ?

இதற்கு மார்க்ஸின் பதில் இது : ஆனால் ஒன்றைக் கவனியுங்கள் ஒவ்வொரு வாரமும் ‘திப்பு சுல்தான் தொடருக்கு முன்பாக ‘இது கற்பனைக் கதையின் அடிப்படையிலானது ‘ என்று அறிவிப்புச் செய்தார்கள். ‘ என்பது மார்க்ஸின் குற்றச்சாட்டு ‘ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாய்ச் சொல்லப்படும் சாணக்கியன் கதைக்கும், இராமாயண , மகாபாரதங்களுக்கு இந்த அறிவிப்புக் கிடையாது ‘ என்பது மார்க்ஸின் புகார். பொதுவாக ஊடக மரபு என்னவென்றால் , சமீபத்திய ஆட்களின் கதையினை வெளியிடும்போது ‘இது கற்பனைக் கதையின் அடிப்படையிலானது ‘ என்று கூறுவது, கதைவடிவத்திற்காக எடுத்துக் கொள்ளும் சில சுதந்திரங்களை யாரும் சரித்திர ரீதியாய்ப் பொய் என்று சொல்லிவிடலாகாது என்பதால் தான். ராமாயணம் , மகாபாரதம் போன்ற புராணிகங்களுக்கு இது தேவையில்லை.

‘திரைப்படங்களில் கூட இசுலாமியர் பற்றி ஒரே விதமான பிம்பங்கள் தான் முன்னிறுத்தப் படுகின்றன. ‘நல்ல ‘ இசுலாமியர் என்றால் இந்துக்களோடு அனுசரித்துப் போகிறவர், உதவி செய்கிறவர். உரிமைகளுக்காகப் போராடினால் அவர் நல்ல இசுலாமியரல்ல. ‘ என்பது மார்க்ஸின் தொடர்ந்த பதில். மார்க்ஸ் மனநிலையைக் கவனிக்க வேண்டும். இந்துக்களோடு அனுசரித்துப் போகாதவர் தான் நல்ல முஸ்லீம்.அவர் உதவி செய்யக் கூடாது. உரிமைகளுக்காகப் போராடினால் அவர் இந்துக்களுடன் அனுசரித்துப் போகக் கூடாது.

‘ ‘ரோஜா ‘ ‘ஜாதிமல்லி ‘ போன்ற சமீபத்திய திரைப்படங்களில் இசுலாமியர் வன்முறையாளர்களாகச் சித்தரிக்கப் பட்டது நினைவிருக்கலாம். ‘ என்று மார்க்ஸ் தொடர்கிறார். ‘ரோஜா ‘வில் கதை காஷ்மீரின் பயங்கரவாதிகளைப் பற்றியது. இதில் இசுலாமியரை வன்முறையாளர்களாய்ச் சித்தரிக்காமல் வேறு எப்படிச் சித்தரிக்க முடியும் ? அதில்லாமல் இது போன்ற படங்களில் இசுலாமிய வன்முறையாளர்களையும்,. சாதாரண இஸ்லாமியரையும் வேறுபடுத்திப் பார்ப்பதைக் காணலாம். சமீபத்தில் ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யரில் ‘ இந்துக்கள் வன்முறையாளர்களாய்ச் சித்தரிக்கப் பட்டதால் அபர்ணா சென் இஸ்லாமிய வெறியர் என்று சொல்லமுடியுமா ?

கேள்வி 39 : ‘ரோஜா ‘ திரைப்படம் பற்றிச் சொன்னீர்கள். சரி ‘ஜாதி மல்லி ‘யில் பொதுவாக மதக் கலவரம் கண்டிக்கப் படுகிறதே தவிர எந்த ஒரு மதத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் விதண்டாவாதம் செய்வது போலத் தோன்றுகிறதே.

‘பாலச்சந்தர் போன்ற பார்ப்பனர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தால் நம் காதுகளில் ஜாதிமல்லையைச் சுற்றிவிட்டுப் போய் விடுவார்கள், ‘ என்று பூச்சாண்டி காட்டுகிறார். பார்ப்பனர்களைத் தாக்காமல் இரண்டுபக்கம் எழுதமுடியாது இவரால். ‘ஹைதராபாத்தில் கலவரம் நடப்பதாய்ச் சித்தரிப்பதால் அது மறைமுகமாக இஸ்லாமியர்களின் மீதான தாக்குதல் என்பது மார்க்ஸின் கூற்று.

தென் இந்தியாவில்,தொடர்ந்து மதக் கலவரங்கள் ஹைதராபாத்தில் நடந்து வருகின்றன. அதன் காரணம் முஸ்லிம் தலைவர்கள் என்ற குற்ற உணர்ச்சியில் மார்க்ஸ் இதைச் சொல்கிறார் என்று கொள்ள வேண்டும்.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 16 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

மஞ்சுளா நவநீதன்


கேள்வி 23 : நீங்கள் சொல்வதெல்லாம் சரி போலத் தான் தோன்றுகிறது, என்றாலும் இசுலாமியர் மத்தியில் மற்றவர்களைக் காட்டிலும் மத அடிப்ப்டையிலான ஒற்றுமை கூடுதலாக இருக்கிறதே ? அவர்களின் நாட்டுப் பற்றை நாம் நம்ப முடியுமா ?

இந்தக் கேள்வியை எழுப்பி மார்க்ஸ் சொல்வது இந்தப் பதில் : ‘சிறுபான்மையினரின் உளவியலை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இசுலாமியரின் பல உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப் பட்டுள்ளன. அவர்கள் மீதான பெருமதவெறியும் வன்முறையும் அமைப்பு ரீதியாக அதிகரித்துள்ளன. அரசு, ராணுவம் , பத்திரிகைகள் எல்லாம் வெளிப்படையாகவே இசுலாமியர்க்கு எதிராக உள்ளன. இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் இசுலாமியர் மதத்தின் பெயரால் இணைந்து நிற்பதையும் , தங்களின் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள முனைவதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் மத உணர்வு தற்காப்பு நோக்கிலானது; தாக்குதல் நோக்கியதல்ல. ‘

சிறுபான்மையினரின் உளவியல் என்பது இவ்வளவு சுருக்கமாய் விளங்கிக் கொள்ளக் கூடியதல்ல. சிறுபான்மையினர் எல்லா நாடுகளிலும் உண்டு. சொல்லப் போனால் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இருக்கும் உரிமைகளும், தனித்த சலுகைகளும் வேறெந்த நாட்டிலும் இல்லை. இசுலாமியர்க்கு எதிராக ஆர் எஸ் எஸ் போன்ற மதவெறி இயக்கங்கள் செயல்பட்டாலும், எல்லாக் கட்சிகளும் இசுலாமியர்க்கு எல்லா விதத்திலும் ஆதரவாய் இருந்திருக்கிறார்கள். என்ன உரிமைகள் இது வரையில் பறிக்கப் பட்டிருக்கின்றன என்று மார்க்ஸ் கூறவில்லை. ஏனென்றால் அப்படி எந்த உரிமைகளும் பறிக்கப் படவில்லை. பொது சிவில் சட்டம் என்ற ஒன்று தான் ‘உரிமைப் பறிப்பு ‘ என்று பலரால் சுட்டிக் காட்டப் படுகிறது. ஆனால் அம்பேத்கர் , மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் உள்ளிட்ட சட்ட அமைப்பு வரைவிலேயே, பொது சிவில் சட்டம் நோக்கிய செயல்பாடு இருக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்ப்பட்டுள்ளது. பத்திரிகைகள் இந்து மதவெறிக்கு எதிராக மிக தீவிரமான எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. சொல்லப் போனால் இந்து மத வெறியினால் நடக்காத குற்றங்களைக் கூட , சிறுபான்மையினரின் மீது தாக்குதல் நடந்த ஒரே காரணத்திற்காக, இந்து அமைப்புகளைக் குற்றம் சாட்டி எழுதும் போக்கும் பத்திரிகைகளில் அதிகரித்துள்ளது. இது இசுலாமியர்க்கு உதவி செய்து இந்து மதவெறியைக் குறைக்கும் என்று இவர்கள் காரணம் கற்பிக்கிறார்கள்.

பெருமதவெறி என்பது பெரும்பான்மைவாதம் என்ற அடையாளத்திலிருந்து எழுவது. இந்துப் பெருமதவெறி இந்தியாவிலும், இசுலாமிய நாடுகளில் இஸ்லாமியப் பெருமதவெறியும் எழுகிறது என்றால், பாகிஸ்தானில் , பங்களாதேஷில் இந்துக்கள் என்ற சிறுபான்மையினர், இசுலாமியர் இந்தியாவில் இருக்கும் அளவிற்கு உரத்த குரல் கொடுப்பவர்களாக ஏன் இல்லை ? இது ஒரு முக்கியமான கேள்வி. இந்துக்களுக்கும் மற்ற சிறுபான்மையினருக்கும் மிகுந்த அழுத்தமும், சகிப்பின்மையும் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் செய்யப் பட்டு வருகின்றன என்று பதிவு செய்யப் பட்டுள்ளது. விடுதலைக்குப் பின்னர், இந்தியாவில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை வளர்ந்து வந்திருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளில் கிட்டத்த்தட்ட இந்துக்களே இல்லை என்ற அளவிற்கு ஆகிவிட்டிருக்கிறது. இருந்தும் மார்கஸ் போன்றவர்கள் இந்திய அரசைக் குற்றம் சாட்டுவார்கள். இஸ்லாமிய நாடுகளில் எழும் இந்து எதிர்ப்பு வெறிக்கு எதிரொலியாக இங்கு இந்து பெரும்பான்மை வாதம் எழுகிறது. இது தவறு தான் என்றாலும், உலகமே ஒரு கிராமம் போலக் குறுகிவிட்ட ஒரு சூழலில் ஒரு மூலையில் நடக்கும் நிகழ்ச்சிகள் வேறொரு சமூகத்தில் எழும் இயக்கங்களை சரியாகவோ தவறாகவோ பாதிக்கின்றன. ஆனால் இசுலாமியரின் ‘எதிரொலி ‘ சரி என்று வாதிடும், மார்க்ஸ். இந்து அடிப்படைவாதம் எழுந்ததற்கு இதே போல் காரணம் சுட்டப் படுவதை கவனமாய்த் தவிர்த்து விடுகிறார். காஷ்மீரில் சிறுபான்மை இந்துக்கள் இதே வாதத்தை உபயோகித்து இசுலாமியர்கள் மீது தாக்குதல் நடத்தினால், இதே மாதிரி ‘தற்காப்பு நோக்கிலானது ‘ என்று மார்க்ஸ் வாதிடுவாரா என்று தெரியவில்லை.

பார்க்கப் போனால் பெரும்பான்மை, சிறுபான்மை என்பதே ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை குழுவின் அடையாளமாக மாற்றும் ஒரு அரசியல் செய்கை. அந்த அடையாளத்தை வரையறை செய்வதில் ஒரு சீரான தன்மையை மக்கள் மீது சுமத்துவது சில குறிப்பிட்ட தலைமைக்கும் அதன் சுயநலத்திற்கும் பயன்படும் வகையிலானது. இது பற்றிய விமர்சனங்கள் தனியாய்ச் செய்யப்பட வேண்டியவை.

கேள்வி : 24 :இசுலாம் அடிப்படையில் வன்முறையைப் போதிக்கும் மதந்தானே ? ஒரு கையில் குரானையும் ஒரு கையில் வாளையும் வைத்துக் கொண்டு மதத்தைப் பரப்புவதும், சிலை வணக்கம் செய்பவர்கள் மீது ‘ஜிகாத் ‘(புனிதப் போர்) நடத்துவதும் தானே இசுலாமியரின் மதக் கொள்கை ? என்று மார்க்ஸ் கேள்வி எழுப்புகிறார்.

இதற்குப் பதிலாக குரானில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டுகிறார். ‘கருணை மிகுந்த அல்லாஹ் யார்மீதும் தேவையற்ற வன்முறையைப் போதிக்கச் சொல்லவில்லை ‘ என்பது மார்க்ஸின் ஒரு வாசகம். குரானில் மதப் பரப்புதலில் வன்முறைக்கும் வற்புறுத்தலுக்கும் இடமில்லை என்ற வாசகங்கள், ‘எல்லா வழிபாட்டு இல்லங்களிலும் ஒலிப்பது அல்லாஹ்வின் திருப் பெயர் தான். ‘ என்பதாக குரானில் வரும் வாசகங்களையும் மேற்கோள் காட்டுகிறார்.

இது ஒரு பயனற்ற செயல். குரான், விவிலியம், வேதம், பகவத் கீதை போன்ற புனித நூல்களில் ஒரு கருத்துக்குச் சார்பாக இருக்கும் வாசகங்கள் போன்றே, அந்தக் கருத்துக்கு எதிர்ப்பாகவும் இருக்கும் வாசகங்கள் உண்டு. இந்த நூல்கள் எழுதப் பட்டது ஒரே நேரத்தில் அல்ல, என்பதால் அந்தந்தக் காலத்தின் எதிரொலிகள் இதில் பதிவு பெற்றிருக்கும். இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமுமே வன்முறையைப் போதிப்பது இல்லை. இந்து மதத்திலும் ஒரு புறம் ‘வசுதைவ குடும்பகம் ‘ என்றும் இன்னொரு புறம் சாதியமும் உண்டு. அதே போல் வேறு புனித நூல்களிலும் ஒன்றுக்கொன்று முரணான வாசகங்கள் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் ஒரு பொதுக் கருத்தாக எது மேலாண்மை பெற்றிருக்கிறது, எது வழிநடத்துகிறது என்று பார்க்க வேண்டும். இன்று இசுலாமிய நாடுகளாய் அறியப் படுபவை எல்லாமே வேறு வேறு கலாசாரங்களின் பெருமை மிக்க அடித்தளங்களை அழித்து உருவானவை. இன்று அந்த அடையாளங்கள் முழுமையாய் அழிக்கப் பட்டதற்கு இசுலாமின் மதப்பரப்புதல் வழிகள் காரணம் என்று வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இந்த அழிவிற்கு குரானின் வாசகங்கள் காரணம் அல்ல என்று இன்று மார்க்ஸ் சொல்வது உண்மையாய் இருந்தாலும் சாராம்சத்தில் இசுலாமியக் கலாசாரம் மற்றும் மதப் பரப்புதலில் இருந்த இருக்கும் வன்முறையின் இடத்தை மறுப்பதற்கில்லை.

இதன் பொருள் நிச்சயம் சாதாரண இசுலாமியர்கள் மீது குற்றம் சுமத்துவதல்ல. மதத் தலைமைகள், அரசியல் தலைமைகள் முஸ்லீம்களின் அடிப்படையான போக்கை நிர்ணயிப்பதில் எப்படிச் சுயவிமர்சனமற்று. புதிய தடங்களைத் தவிர்க்கிறார்கள் என்று காட்டுவது தான். இந்தப் போக்கிற்கு இசுலாம் அல்லாதவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியருமே பலியாகிறார்கள் என்று காட்டுவது தான் என் நோக்கம். அந்தச் சுய விமர்சனம் நோக்கிய திசையில் அவர்களைச் செல்ல விடாமல் தடுப்பதில் மார்க்ஸ் போன்ற முற்போக்காளர்களும் பெரும் பங்கு வகிக்கிறார்கள். இசுலாமியத் தலைமையில் இப்போது இருப்பது எல்லாமே சரி , எல்லாத் தவறும் இந்து மதவெறித் தலைமையினுடையது தான் என்பதான இந்தப் போக்கு நல்லதல்ல.

கேள்வி : 25 : அப்படியானால் வேறெந்த மதத்தைக் காட்டிலும் இசுலாத்தை ஏன் இந்துக்கள் வெறுக்கிறார்கள் ? என்பது மார்க்ஸின் கேள்வி.

சுமையேற்றப் பட்ட கேள்வி இது. இந்தக் கேள்வியின் உட்கருத்தை உடனே மார்க்ஸ் மறுக்கும் விதத்தில் பதில் சொன்னாலும், விஷத்தை ஏற்றியாகிவிட்டது. ‘சாதாரண மக்கள் வெறுப்பில்லாமல் சகோதரர்களாய்த் தான் வாழ்கின்றார்கள் ‘ என்று பதில் சொல்வதற்கு இந்தக் கேள்வியைப் பயன் படுத்த வேண்டுமா ?

கேள்வி 26 : மன்னியுங்கள் ஆர் எஸ் எஸ், விசுவ இந்து பரிஷத், பரதீய ஜனதா போன்ற இந்து மதவெறி அமைப்புகள் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாம் மதத்தைக் குறிவைப்பதேன் ?

மார்க்ஸின் பதிலிலிருந்து உதிரும் முத்து இது : ‘ இந்து மதத்தின் அடிப்படைகளான வருணாசிரமம், சாதிக் கொடுமை , தீண்டாமை ஆகியற்றுக்கு ஒரு சரியான சவாலாக விளங்குவது இசுலாம் தான். ‘ ‘இசுலாம் மட்டுமே சாதியை வென்றது. ‘ பச்சைப் பொய். முன்னமே நான் குறிப்பிட்ட படி எந்த மதத்திற்கும் சமத்துவம் என்பது ஒரு முன் கோரிக்கையோ , நிபந்தனையோ அல்ல. மதம் என்பது சில நம்பிக்கைகளின் தொகுப்பு. ஒரு இறைக் கொள்கையின் விளக்கம். ஒரு சில நெறிகளை முன்வைப்பது. சமத்துவம் என்பது அல்ல மதங்களின் குறிக்கோள். கம்யூனிசம் மாதிரி ஒரு சமூகத்தை ஸ்தாபிப்பது இசுலாமின் நோக்கம் என்று பாமரத்தனமான புரிதல் மார்க்ஸிற்கு. (இதனால் தான் இசுலாமியரிடையே கம்யூனிசம் என்பது சைத்தான்களின் தத்துவம் என்று பரப்பப்படுவது பற்றியோ, இசுலாமிய நாடுகளில் மற்ற மதங்கள் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் இயக்கமும் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமே என்பது பற்றி வாயைத் திறக்க மார்க்ஸ் தயாரில்லை. )

இறைவனின் முன் எல்லோரும் சமம் என்று எல்லா மதங்களும் வாய்ப்பேச்சளவில் சொன்னாலும் நடைமுறையில் இது சாத்தியம் அல்ல. பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஏன் தமிழ்நாட்டிலும் கூட இசுலாமியர்களிடையே சாதியம் மறைந்து விடவில்லை. வரலாற்று ரீதியாக சாதியத்திற்கு எதிரான போராட்டங்களும் சமூக இயக்கங்களும் கூட பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின்பு தான் வலுப்பெற்றது. ஆங்கில வாசிப்பும், ஜனநாயக மரபுகள் பற்றிய அறிதலும் சோஷலிசச் சிந்தனைகளின் வளர்ச்சியும், இந்துக்களின் மத்தியில் தோன்றிய சுயவிமர்சனப் போக்கும் எல்லாமே இசுலாமின் பாதிப்புக்கு அப்பற்பட்டு எழுந்தவை. சாதியத்தின் முனையைக் கூட இசுலாமிய அரசுகள் முறிக்கத் தயாராய் இல்லை.

ஆனால் மார்க்ஸின் உளவியலை அறிய இந்தப் பதில் ஒரு சரியான குறியீடு. சாதியத்திற்கு இசுலாம் சவால். அதனால் அதன் மீது குறிவைக்கப் படுகிறது என்று சொல்லும் மார்க்ஸ் , இசுலாமியர்கள் ஒரு தேசம் என்று குறிப்பிடப்பட்டு நாடு பிளவுண்டு லட்சக்கணக்கான மக்கள் பலியிடப்பட்டதும் ஒரு காரணம் என்று குறிப்பாகக் கூடச் சொல்லத் தயாரில்லை.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 15 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

மஞ்சுளா நவநீதன்


15,16,17 கேள்விகள் ஆர் எஸ் எஸ் ஆட்கள் முஸ்லீம்கள் பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுப் பற்றியது. அடுத்த 18-ம் கேள்வி இது : பலதாரமணம் புரிந்து கொள்வது குர் ஆனிலேயே அனுமதீக்கப் பட்டுள்ளதே. ?

இந்தக் கேள்விக்கு மார்க்ஸின் பதில் இது : ‘போர்களில் ஏராளமான ஆண்கள் கொல்லப் பட்டதை அடுத்துச் சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகியது… இந்தச் சூழலில்தான் சமூகச் சமநிலையைக் காப்பாற்றவும், விதவைகளுக்கு வழ்க்கை தரவும் பலதார மணத்தை இசுலாம் அனுமதித்தது.. ‘

இதை நாம் ஒப்புக் கொள்ளலாம். இதில் இரண்டு பிரசினைகள் உள்ளன. ஒன்று : இஸ்லாமிய மதத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் குர் ஆன் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்காக சொல்லப் பட்ட ஒன்றாகக் கருதுவதில்லை. கடவுளால் அருளப் பட்ட குர் ஆன் எக்காலத்துக்கும் பொருந்தும் புனித நூல் என்று கருதுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு எதிர்வினை குர் ஆன் என்பது இஸ்லாமியக் கருத்துலகை மறுப்பதாகும்

இரண்டு : ஒரு குறிப்பிட்ட காலத்திற்கானது என்றால், 1400 வருடங்களுக்கு அப்பால் ஏன் இது திருத்தப் படக்கூடாது ? ஆண் பெண் விகிதாசாரம் சமநிலைப் பட்டவுடன் இந்தக் கருத்தை ஷரியாத் தின் அடிப்படைகளில் இருந்து விலக்கி வைத்து விடலாமே. இதைச் செய்வதற்கு ஏன் எவரும் தயாரில்லை ? இது ஒரு கேள்வியாக மார்க்ஸால் முன்வைக்கப் பட மாட்டாது.

மார்க்ஸ் தொடர்ந்து சொல்வது இது : ‘ குர் ஆன் இப்படி அனுமதித்துள்ளதால் இசுலாமியர் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று பொருளில்லை. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இசுலாமியரைக் காட்டிலும் இந்துக்கள் தான் அதிக அளவில் பலதார மணம் புரிபவர்களாக உள்ளனர். ‘ அதாவது புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முஸ்லீம்கள் பலதார மணம் புரிவது குறைவு என்பது வேறு. ஆனால் இந்துக்கள் பலதாரமணம் புரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்பதும் , முஸ்லீம்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க முடியாது என்பது தான்அடிப்படைப் பிரசினை. இது ஒரு நாட்டு மக்களிடையே இரு வேறு குழுக்களை உருவாக்குகிறது. புள்ளிவிவரப்படி பலதார மணம் நிகழ்வது முஸ்லீம்களிடையே குறைவு அதனால் அது பற்றிக் கவலைப் படவேண்டியதில்லை என்பது போன்ற ஒரு மோசமான வாதம் இருக்க முடியாது. அப்படிப் பார்க்கப் போனால், சதியும் கூடத் தான் லட்சத்தில் ஒருவர் செய்கிறார் . இதைச் சட்ட பூர்வமாய் அங்கீகாரம் செய்ய முடியுமா ? மதத்தின் போர்வையில் மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்கள் எந்த மதத்தில் நடைபெற்றாலும் இது எதிர்க்கத் தக்கதே என்பது தான் சரியான பார்வையாய் இருக்க முடியும். இந்தப் பார்வை தான் மார்க்ஸ் போன்றோரிடம் கிடையாதே.

கேள்வி : 19 : இசுலாமியர் குடும்பக்கட்டுப் பாடு செய்து கொள்வதில்லை. எனவே அவர்கள் மத்தியில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே அவர்கள் மத்தியில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் அவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவார்களே ?

இந்தக் கேள்வி ஆர் எஸ் எஸ் போன்ற இயக்கங்கள் இந்துக்களை பயமுறுத்தும் பொய்யின் அடிப்படையில் ஆனது. இசுலாமியர் பெரும்பான்மை ஆகிவிடுவார்கள் என்ற பயம் தேவையற்ற அரசியல் பிரசாரம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் தடை செய்யப் பட்ட ‘சிமி ‘ போன்ற இயக்கங்கள் கருத்தடை செய்து கொள்வது இஸ்லாம் மதத்திற்கு துரோகம் செய்வது என்று முஸ்லீம்களிடையே பிரசாரம் செய்தபோது , இதை எதிர்த்து இஸ்லாமின் மதத் தலைவர்கள் எவரும் எதுவும் பேசவில்லை என்பது இங்கு பதிவு செய்யப் படவேண்டிய ஒன்று.

கேள்வி : 20 : இசுலாமியருக்கு மத உணர்வு அதிகமில்லையா ? தேர்தல்களில் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தானே அவர்கள் வாக்களிக்கிறார்கள். என்பது அடுத்த கேள்வி.

‘கூட்டணி இல்லாமல் எங்குமே முஸ்லீம் லீக் வெற்றி பெற இயலாது என்பது தான் உண்மை நிலை. ‘ என்பது மார்க்ஸின் சரியான பதில் இந்தப் பதில் மதவாதக் கட்சிகளான பா ஜ க, முஸ்லீம் லீக் மட்டுமல்லாமல் சாதிக் கட்சிகளுக்கும் பொருந்தும். இங்குள்ள பல பிளவுண்ட மனிதக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து தான் ஆட்சியில் அங்கம் வகிக்க முடியும்.

கேள்வி 21: அமெரிக்காவிற்கும் அரபு நாடுகளுக்கும் அல்லது இசுரேலுக்கும் வளைகுடா நாடொன்றுக்கும் சண்டை வந்தால் இங்கே இருக்கும் இசுலாமியர் இசுலாமிய நாடு தான் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்களே ? என்பது மார்க்ஸின் அடுத்த கேள்வி.

‘அப்படிப் பிரார்த்தித்தால் கூடத் தவறுமில்லை என்று நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். நியாயச் சிந்தையுள்ள யாரும் அமெரிக்காவும், இசுரேலும் இசுலாமிய நாடுகளுக்கெதிராகச் செய்து வரும் , அயோக்கியத் தனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. வரலாறு பூராவும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும், கிறித்தவ மதமும் இசுலாமியருக்கு எதிராகச் செய்து வந்த அநீதிகள் ஏராளம். ‘ என்று ஆரம்பிக்கும் மார்க்ஸின் பதில் என்னைத் திடுக்கிட வைத்தது உண்மை. ஆமாம், ‘ கிறுத்துவ மதம் இசுலாமியருக்கு எதிராகச் செய்து வந்த அநீதிகள் ‘ பற்றி மார்க்ஸ் சொல்வது உண்மையானது என்றாலும் மார்க்ஸின் வாயால் இது வெளிப்படுவது வினோதம். இசுலாமியருக்குச் சார்பாகப் பேசும் பார்வை கொண்ட மார்க்ஸ் இந்தச் சந்தர்ப்பத்தில் மட்டும் வேறு பார்வை கொண்டவராகிவிடுவார். அதாவது முஸ்லீம் அரசர்களைப் பற்றிப் பேசும்போது , அவர்கள் இந்துக்களுக்கு எதிராகச் செய்த அநீதிகளுக்கு மதம் காரணமல்ல என்று வாதிட்டவர், கிறுத்தவர்கள் இசுலாமியருக்கு எதிராக அநீதி செய்யும் போது , ‘இதை கிறுத்தவ மன்னர்களின் அதிகார நிறுவனப் போக்காகப் பார்க்க வேண்டும் அல்லாமல், கிறுத்தவர்கள் இசுலாமியர்கள் மீது பகை பாராட்டினார்கள் என்று பார்க்கக் கூடாது ‘ என்று உபதேசம் செய்யவில்லை என்பது விசேடமாய்க் குறிப்பிட வேண்டிய ஒன்று. பண்டைய மன்னர்கள் நடத்திய போர்கள் எல்லாம் பெரும்பாலும் கொள்ளையடிக்கவும் எதிரியின் பண்பாட்டு ஆளுமையை அழிக்கவும் பயன் பட்டன என்பது முஸ்லீம் மன்னர்கள் பற்றிக் கூறும்போது தான். கிறுத்தவம் மேற்கொண்ட போர்கள் அப்படியல்ல, இசுலாம் என்ற குறிப்பான மதத்தின் மீதான போர்கள் என்பது மார்க் ?ின் மார்க் ?ியத் தத்துவ ஞானப் புரிதல்.

இசுரேலியர்களுக்கு எதிரான முஸ்லீம்களின் பார்வையில் எந்த அளவு யூத வெறுப்பு பங்கு வகிக்கிறது என்பது பற்றியும் மார்க்ஸ் பேசுவதில்லை. இஸ்லாமியரிக்கிடையே நடக்கும் செக்டேரியன் சண்டைகள் பற்றி மார்க்ஸ் பேசுவதில்லை. இஸ்ரேல் மீதான எதிர்ப்பு நியாய உணர்வில் எழுந்த எதிர்ப்பா அல்லது, ‘முஸ்லீம்கள் ஒற்றுமை ‘ என்ற ஒன்றின் மீது எழுந்ததா என்பது பற்றியும் மார்க்ஸ் பேசுவதில்லை. நியாய உணர்வின் கீழ் எழுந்தது என்றால், இஸ்லாமிய ஆட்சிகள் செய்யும் அலங்கோலம் பற்றியும், முஸ்லீம் ஆக்கிரமிப்பின் கீழ் மற்ற மதத்தவர் மீது செய்யப் பட்ட அநீதிகள் பற்றி முஸ்லீம் தலைவர்களின் பார்வைகள் எப்படி உள்ளன என்பது பற்றியும் இவர் சொல்வதில்லை.

அதாவது இசுலாமிய மன்னர்கள் கொண்ட ஆளும் வர்க்கம் போரிட்டால் அது மதவாதப் போராகப் பார்க்காதே பொருளாதாரப் போராகப் பார், ஆனால் , முஸ்லீம்களுக்கு எதிராகப் போர் தொடுக்கப் பட்டால் அது முஸ்லீம்களுக்கு எதிரான போர் என்று பார்க்க வேண்டும், பொருளாதாரப் போராகப் பார்க்காதே என்பது மார்க்ஸின் உபதேசம்.

‘ஷாவின் ஆட்சிக் காலத்தில் ஈரான் அமெரிக்காவின் எடுபிடியாகவும் படைத் தளமாகவும் மாற்றப்பட்டது. இந்தப் பின்ணியில் தான் அமெரிக்க – ஐரோப்பிய வல்லரசுகளுக்கு எதிராகவும் , கிறுத்துவ கலாசார மேலாண்மைக்கு எதிராகவும் எழுகிற இசுலாமிய அடிப்படை வாதத்தை நாம் பார்க்க வேண்டும். குமைனியின் தலைமையில் இசுலாமிய அடிப்படைவாதம் என்பது அமெரிக்க. மேலாண்மையையும் , அடிவருடி ஷாவின் ஆட்சியையும் எதிர்த்த வகையில் இருக்கும் நிலையில் முன்னோக்கிய மாற்றம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தது. ‘ பிரமாதம். அதாவது அடிப்படைவாதம் அமெரிக்க எதிர்ப்பு என்றால் பரவாயில்லை, அது முன்னோக்கிய சிந்தனை. இது கேட்டு ஆர் எஸ் எஸ் காரர்கள் தமக்கு மார்க்ஸ் நண்பராகிவிட்டார் என்று பூரிக்கலாம். எனென்றால் அவர்களும் இசுலாமிய , கிறுத்துவ கலாசார மேலாண்மையை எதிர்க்கிறோம் என்று சொல்கிறார்கள். அமெரிக்க கலாசாரத்தின் பாதிப்புகளை எதிர்க்கிறோம் என்று சொல்கிறார்கள். இந்தியப் பொருளாதாரக் கொள்கையும் சுதேசி வடிவம் பெற வேண்டும் பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியாவை விட்டு விரட்டப் பட வேண்டும் என்று சொல்கிறார்கள். இனி , இந்தக் காரணங்களால் ஆர் எ ? எ ? எப்படி ‘முன்னோக்கிய ‘ பார்வையைக் கொண்டது என்று மார்க் ? விளக்கம் தந்தால் நல்லது.

ஆனால் அவர் அதைச் சொல்ல மாட்டார். ‘இந்து மீட்பு வாதம் என்பது மாற்றங்களுக்கு எதிரானது . நாட்டைப் பின்னோக்கித் தள்ளுவது. வருணாசிரமத்தை நிலைநாட்ட முனைவது. ‘ அதாவது குமேனி ஈரானில் பெண்களைப் பர்தாவைப் போட்டுக் கொள்ள வலியுறுத்துவதும், பெண்களின் கல்வியை நிறுத்துவதும் , மதவாத அரசை நிறுவி மற்ற மதத்தினருக்கு உள்ள உரிமைகளை நசுக்குவதும், ஜனநாயகத்திற்கு இஸ்லாமின் கீழ் இடம் இல்லை என்று சொன்னதும், சல்மான் ரஷ்டிக்கு கொலைத் தண்டனை வழங்குவதும் வருணாசிர தர்மமல்ல. முன்னோக்கிய பார்வை. ஆனால் இந்துக்கள் பின்னோக்கிய மீட்பு வாதம் மேற்கொண்டால் அது ‘நாட்டைப் பின்னோக்கித் தள்ளுவது ‘.

கேள்வி 22: அப்படியானால் இசுலாமிய மதம் தான் உயர்ந்தது என்கிறீர்களா ? என்பது அடுத்த கேள்வி.

மார்க்ஸின் பதில் : ‘மதம் மக்களின் அபின். எந்த மதமும் மக்களுக்கு எதிரானது தான் என்கிற கருத்தை நம்புகிறவர்கள் நாங்கள். ஒரு சிறுபான்மை மதத்திற்கெதிராக ஒரு பெரும்பான்மை மதம் உள்நாட்டு அளவிலோ , உலக அளவிலோ பொய்ப் பிரசாரத்தை வலிமையாக மேற்கொள்ளும் போது நாம் உண்மையைக் கண்டறிய வேண்டியவர்களாக இருக்கிறோம். ‘ அந்த உண்மை என்ன ? உலக அளவில் இந்துமதம் சிறுபான்மை மதமல்லவா ? அதற்கு எதிரான பொய்ப் பிரசாரங்கள் மேநாட்டிலும், இஸ்லாமிய நாடுகளிலும் செய்யப் பட்டு வருகின்றனவே அது பற்றி எங்கே எப்போது மார்க்ஸ் தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். இஸ்லாமிய நாடுகளில் ‘எந்த மதமும் மக்களுக்கு எதிரானது ‘ என்ற தன் உயர் கருத்தைப் பிரசாரம் செய்ய உரிமை வேண்டி மார்க்சும் மார்க் ? போன்றோரும் எங்காவது போராட்டம் நிகழ்த்தியிருக்கிறார்களா ?

*********

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 14

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள் (தொடர்ச்சி)


மஞ்சுளா நவநீதன்

12. 13. 14 மூன்று கேள்விகள் : இந்தக் கேள்விகள் காஷ்மீர் தொடர்பானவை. காஷ்மீர்பற்றி பாகிஸ்தான் சொல்வதை அப்படியே வாந்தியெடுத்து தன்னுடைய பதில்களாய்த் தருவதற்குச் செளகரியமாய் கேட்கப்படும் கேள்விகள் இவை.

‘கடைசியாக ஒரு கேள்வி: இந்தக் காசுமீர் விவகாரம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். இந்திய யூனியனில் ஒரு மாநிலமாகிய காசுமீருக்கு மட்டும் என்ன தனி உரிமை ? அரசியல் சட்டத்தின் 370-ஆம் பிரிவை நீக்கிவிட வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானது தானே ? காசுமீர மக்களுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா ? இருந்தாலும் 370-ஆம் பிரிவு இன்னும் நீடிக்கிறதே ? காசுமீர இசுலாமியர்கள் இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம். ஆனால் இந்தியர் யாரும் காசுமீருக்குள் நிலம் வாங்க முடியாதது என்ன நியாயம் ? ‘

இந்தக் கேள்விகளுக்கு மார்க்ஸ் சொல்லும் பதில்கள் மார்க்ஸ் போன்ற ஒருபக்கச் சார்பு உள்ளவரிடம் எதிர்பார்க்கக் கூடியவையே. ‘1846-க்குப் பின்பு பிரிட்டிஷாரின் எடுபிடிகளான டோக்ரா மன்னர்கள் காசுமீரை ஆண்டு வந்தனர். இவர்கள் இந்துக்கள். ஆனால் காசுமீர் பள்ளத்தாக்கின் மொத்த சனத்தொகையில் 77 சதவீதம் பேர் இசுலாமியர். ‘ என்று பதில்களைத் தொடங்குகிறார் மார்க்ஸ். சுவாரஸ்யமான வார்த்தைகள். இதுவரையில் முஸ்லீம் மன்னர்களைப் பற்றி மார்க்ஸ் உபயோகிக்காத் சொற்றொடர் ‘ பிரிட்டிஷாரின் எடுபிடிகள் ‘ இந்து மன்னராய் இருப்பதால டோக்ரா மன்னருக்கு உடனே இந்த அடைமொழி வழங்கப் படுகிறது. காசுமீர்ப் பள்ளதாக்கில் 77 சதவீதம் பேர் முஸ்லீம்கள் என்று சொல்லும் மார்க்ஸ், மிகச் சாமர்த்தியமாய் மறைக்கிற விஷய்ம இது. காஷ்மீர்ப் பிரசினை காஷ்மீர்ப் பகுதியினுடையது மட்டுமல்ல. ஜம்மு-காஷ்மீர்ப் பகுதியினது. காஷ்மீர்ப் பகுதியில் 77 சதவீதம் முஸ்லீம்கள் ஆனது எப்படி என்பதோ, இந்தக் கணிப்பு காஷ்மீர்ப் பண்டிதர்களை முஸ்லீம் தீவிரவாதிகள் விரட்டியதற்குப் பின்பா முன்பா என்பது பற்றியும் மார்க்ஸின் பதிலில் தகவல் இல்லை. ஜம்மு-காஷ்மீர்ப் பகுதியில் மொத்த முஸ்லீம்கள் ஜனத்தொகை 51 சதவிதமே. தவிர பெளத்தர்கள், இந்துக்கள் , சீக்கியர்கள் மிச்சப் பகுதியினர். இந்துமதப் பெரும்பான்மையினர் இந்து ராஷ்டிரம் என்று முழங்குவதை ஜனநாயகத்திற்கு எதிரான பெரும்பான்மைவாதம் என்று விமர்சிக்கும் மார்க்ஸ் காஷ்மீரில் முஸ்லீம்கள் 77 சதவீதம் என்பதால் அவர்களுக்குதனி அடையாளம் என்றும் சொல்கிறார். வினோதமான தர்க்கம் தான்.

‘1939-ல் ஷேக் அப்துல்லா தலைமையில் ‘தேசியமாநாடு கட்சி தொடங்கப்பட்டது ‘ என்கிறார் மார்க்ஸ். உண்மையில் தொடங்கப் பட்ட போது இதன் பெயர் ‘முஸ்லீம் மாநாடு ‘ பிறகு ‘தேசிய மாநாடு ‘ ஆக்கப் பட்டது.

‘ராஜா அரிசிங் இணைப்புப் பற்றித் திட்டவட்டமான முடிவு எதையும் அறிவிக்காத சூழலில் 1947- அக்டோபர் 26-ல் வடமேற்கு எல்லைப் பகுதியிலிருந்த இனக்குழு மக்கள் பாகிஸ்தான் ஆதரவோடு காஷ்மீர் மீது படையெடுத்தனர். சமாளிக்க முடியாத அரிசிங் இந்திய அரசின் உதவியை நாடினார். இணைப்புக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே படைகளை அனுப்ப முடியும் என்கிற நிபந்தனையோடு படைகளி அனுப்பிக் காசுமீரை இந்திய அரசு கப்பற்றிக் கொண்டது. இணைப்பு ஒப்பந்த்தத்தை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்யவே அரிசிங் காசுமீரை விட்டே ஓடினார். ‘

ஜம்மு-காஷ்மீர் அரசரின் ஊசலாட்டத்தை மையமாய் வைத்து , பாகிஸ்தான் தொடுத்த காஷ்மீர்ப் படையெடுப்பை மார்க்ஸ் இங்கே குறிப்பிடுகிறார். இந்திய அரசுடன் சேர அரிசிங் எடுத்த முடிவுப் படி பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்த காஷ்மீர்ப் பகுதிகளை விட்டு வெளியேறியிருக்க வேண்டும். இதுவரையில் இது நிறைவேறவில்லை என்பது பற்றி மார்க்ஸ் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்பதில் ஆச்சரியம் இல்லை. இந்தியாவின் மீது எல்லாக் குற்றங்களையும் சுமத்துவதில் அவருக்கிருக்கிற ஆர்வத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பற்றி ஒன்றும் இவர் சொல்வதில்லை என்பது மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானப் படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை பற்றியும் ஒன்றும் கூறுவதில்லை இவர். ஜம்மு காஷ்மீர்ப் பகுதியில் மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மக்களுக்கு இல்லை என்பது பற்றியும் மார்க்ஸ் மெளனம் சாதிக்கிறார்.

370-ஆம் பிரிவிற்கு ஆதரவாகவும், இந்தப் பிர்வு எல்லா மாநிலங்களுக்கும் வழங்கப் படவேண்டும் என்பதும் மார்க்ஸின் கோரிக்கை. மாநில சுயாட்சிபற்றிய விவாதங்களைத் தொடர இது இடமில்லை என்றாலும் சில விஷயங்களைச் சொல்லலாம். மாநில சுயாட்சி என்பது இன்றைய மாநிலத் தேர்தல் முறைகளின் கீழ் சாத்தியமா ? இன்றைய மாநிலத் தேர்தல்கள் பெரும்பான்மை இடங்கள் பெற்ற கட்சிக்கு கிட்டத்தட்ட அனைத்து அதிகாரங்களையும் வழங்கி, நீதிமன்ற இடையீட்டைத் தவிர , மிகத் தீவிரமான தேவைகளுக்கு மத்திய அரசின் இடையீடு தவிர கிட்டத்தட்ட எதேச்சையான ஒரு சர்வாதிகாரிக்கான அதிகாரங்களை வென்ற கட்சிக்கு வழங்குகிறது என்ற யதார்த்தத்தின் கீழ் மாநில சுயாட்சியை வழங்குவது , ஜனநாயக விரோதமான ஆட்சியை நிறுவத் தான் பயன்படும். மாநில சுயாட்சியைப் பற்றி மார்க் ? போன்றவர்கள் பேசும்போதெல்லாம் என் நினைவில் வருவது , அமெரிக்காவின் தென் மாநிலங்கள் அடிமைத்தனத்தை நியாயப் படுத்த ‘மாநிலங்களின் உரிமை ‘ என்ற போர்வைக்குள் புகுந்து கொண்ட வரலாற்று நிகழ்ச்சி தான். சரித்திர ரீதியாக ?னநாயகத்தை வலியுறுத்தும் எவரும் மாநில சுயாட்சியை மார்க் ? வலியுறுத்தும் நிலையில் ஆதரிக்கவே முடியாது. இப்போது கொஞ்ச நஞ்சம் இருக்கும் checks and balances பாதுகாப்புகள், இல்லாமல் ஆகிவிடும் நிலை அது.

கணிப்புத் தேர்தல் நடத்துவதற்கு ஐ நா விதித்த முன் நிபந்தனைகள் எதையும் பாகிஸ்தான் நிறைவேற்றாத பட்சத்தில் , இன்று பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீரில் மனித வேட்டையாடும் நிலையில் , கணிப்புத் தேர்தல் என்பது மக்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்கும். இந்தியாவுடன் இணைந்த ஜம்மு-காஷ்மீர் மக்களுக்குத் துரோகம் செய்வதாகும்.

*********

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 13 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

மஞ்சுளா நவநீதன்


11. இந்திய வரலாறு எழுதப்பட்டதே இந்து வகுப்புவாதச் சார்போடு தான் என்பது போலச் சொன்னீர்கள் . வரலாறு என்பது பழைய சம்பவங்களைத் தொகுத்துச் சொல்வது தானே ? இது எப்படி ஒருபக்கச் சார்பாக இருக்க முடியும் ? என்பது மார்க்ஸின் அடுத்த கேள்வி.

மார்க்ஸின் பதில் : ‘வரலாறு என்பது ஒரு வகையான கதை சொல்லல் தான். ..தொடக்க காலத்தில் இந்திய வரலாற்றைக் காலப்பாகுபாடு செய்யும்போது ‘இந்து இந்தியா ‘ , ‘முசுலிம் இந்தியா ‘, ‘பிரிட்டிஷ் இந்தியா ‘ என்று வகுத்தனர். ஆனால் நவீன வரலாற்றறிஞர்கள் இந்திய வரலாற்றை இப்படி மத அடிப்படையில் பகுப்பது தவறு என்கின்றனர். பண்டைய இந்தியா , இடைக் கால இந்தியா , நவீன இந்தியா எனப் பிரிப்பது தான் பொருத்தமாக இருக்கும். ‘

எல்லா வரலாறுகளும் அப்போது வெற்றி பெற்றவர்களின் சார்பாக எழுதப் படுவது உண்மை தான் என்றாலும், இது வரலாற்றியலைச் சார்ந்த விஷயம். வரலாற்றின் அடிப்படைச் சம்பவங்களின் மீது இந்த புரிதல் எழுப்ப முடியும். இந்தியாவை புராதன இந்தியா , இடைக்கால இந்தியா என்று பிரித்தாலும் கூட படையெடுப்புகளும், காலனியாதிக்கமும், மதவாத அரசு இருந்ததையும் மறைப்பதற்கில்லை. அதன் காரணங்கள் என்பது, வெவ்வேறு ஆசிரியர்கள் வேறு விதமாய்ச் சொல்லலாம்.

‘உணர்வு ரீதியாய் இந்தியத் தேசியத்தைக் கட்டமைக்க முயன்ற உயர்சாதி இந்துக்கள் பண்டைய இந்து இந்தியாவை லட்சியமாய் முன்வைத்தனர். இந்தச் செயற்பாடு தான் இசுலாமியர் பற்றிய பல்வேறு விதமான வரலாற்றுப் பொய்களுக்கும் காரணமாகியுள்ளன . ‘ என்பது மார்க்ஸின் அடுத்த கூற்று. எந்தப் பொய்கள் என்று அவர் சொல்லவில்லை. முன் பத்திகளில் அவர் சொல்லியிருந்த பொய்களைக் குறிப்பிடுவதாய் இருக்கலாம்.

எந்த விடுதலை இயக்கத்திலும் முதலில் முன்கால் எடுத்து வைப்பது ‘எலீட் ‘ என்று சொல்லத் தக்க மேல்தட்டினரும் ,மத்தியதர வர்க்கத்தினரும் தான். அவர்கள் இந்த நோக்கில் பழைமை நோக்கிப் பாய்வது என்பதும் எல்லா விடுதலை மற்றும் சீர்திருத்த இயக்கங்களிலும் நடப்பது தான். ஆனால் இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் பழைமை மீட்புக் கண்ணி வெகு சீக்கரமே அறுபட்டுவிட்டது. காந்தியும், நேருவும் மர்றும் ஆங்கிலம் பயின்ற தலைவர்களும், சோஷலிஸ்டுகளும் நிரம்பிய தலைமை இது. இன்று ஆர் எஸ் எஸ் கொண்டிருக்கும் செல்வாக்கை வைத்து வரலாற்றைத் திருக மார்க்ஸ் செய்யும் முயற்சி இது. ஆர் எஸ் எஸ்-இன் கருத்து இந்திய விடுதலை வரலாற்றில் எந்த இடத்தையும் வகிக்க வில்லை. திராவிட இயக்கங்கள் தமிழனின் ஆதிப் பெருமையை முன்வைப்பது போன்றதே இந்திய தேசியத் தலைவர்கள் இந்தியாவின் முற்காலத்திய பெருமையை முன்வைப்பது. எல்லாவற்றிலும் சாதியம் பார்க்கும் மர்க்ஸிற்கு இதில் சாதியம் தோன்றுவதில் வியப்பில்லை. ஆனால் இந்திய தேசியம் முஸ்லீம்களை விலக்கி வைக்கவில்லை. ஆனால் முஸ்லீம் தலைமை எப்போதுமே இந்துக்களை மத வெறுப்புடன் நடத்தியிருக்கிறது என்பது வெளிப்படை. வங்காளம் இரண்டாய்ப்பிளவுண்ட போதும் அதற்கான எதிர்ப்பு இந்துக்களிடம் தான் வெளிப்பட்டதே தவிர முஸ்லீம் தலைவர்களிடம் அல்ல.

இன்றைய கருத்துமோதல்கள் செக்குலரிஸம் என்னும் நேரு கட்டமைத்த மதச்சார்பின்மை கொள்கைக்கும், இந்துத்வா அமைப்புகள் அமைக்கும் கருத்துக்களத்துக்கும் இடையேயான போராட்டம். நேருவும் அவரது காங்கிரஸின் மதச்சார்பின்மைக் கொள்கையின் பக்கத்தோழர்களே திராவிட இயக்கமும் அன்றைய சீர்திருத்தவாதிகளும். அந்த நேரு கொள்கை சார்ந்த மதசார்பற்ற அமைப்புகள் உருவாக்கிய வரலாறுகளே இன்று வரலாறாக முன்வைக்கப்படுகிறது. நேரு அன்றைய எலீட்டான சோசலிஸ்ட், லண்டனில் படித்த பாரிஸ்டுகளின் பிரதிநிதி. அவர் தெளிவாகவே இந்து மத எதிர்ப்பு போக்கை கொண்டிருந்தார் என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் உண்டு. அவரையும் அவரது கொள்கை வழி வந்த வரலாற்றாசிரியர்களையும் மேல்ஜாதி இந்து என்று மார்க்ஸ் வரையறை செய்வதுதான் ஆச்சரியம் – இத்தனைக்கும் அந்த வரலாற்றாசிரியர்கள் சொன்னதையே புத்தகம் முழுவதும் தன் கருத்துக்களாகவும் பிரசுரித்துக்கொண்டிருப்பவர் மார்க்ஸ். மார்க்ஸின் பழைய மார்க்ஸிஸ்ட் அவதாரத்தில் நேரு போன்றவர்கள் ‘தரகு முதலாளிகளாகவும் ‘ சீனப் போருக்குப் பின்பு, ஏகாதிபத்திய அடிவருடிகளாகவும் இருந்தார்கள்.ஆனால் மார்க்ஸின் இன்றைய ‘கதை சொல்லலில் ‘ இன்று மேல்சாதி இந்துவாக ஆகிவிட்டார். நாளை என்ன ஆவாரோ தெரியாது. காந்தியை பனியா என்று சோன்னவர்களும் இவர்களே. ஒரு வேளை காந்தியை முன்னிறுத்தித் தான் ‘மேல்சாதி இந்துக்கள் ‘ என்று மார்க்ஸ் இங்கே குறிப்பிடுகிறாரோ என்னவோ ? அதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

*********

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 12 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

மஞ்சுளா நவநீதன்


6. பிற்கால நாயக்க , மராட்டிய மன்னர்கள் காலத்தில் இசுலாமியக் கோயில்களைப் பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இசுலாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக்க் கூட இருந்திருக்கிறார்களே ? என்பது மார்க்ஸின் அடுத்த கேள்வி.

‘உண்மை தான் .நாம் முன்பே குறிப்பிட்ட படி இவை எல்லாமே அரசியல் நோக்கில் செய்யப் பட்டவை தான். ‘ என்பது மார்க்ஸின் பதில் . அதாவது மதச் சார்பெடுத்து இசுலாமிய அரசுகள் செயல்படவில்லை. அதனால் தான் இந்துக்களை இசுலாமியர் வேலைக்கு வைத்துக் கொண்டார்கள் என்பது இதன் கருத்து எனப் புரிந்து கொள்ளலாம். இந்தியா ஒரு சிக்கலான பெரிய நாடு. இந்தியாவின் வருணாசிரம தர்மத்தைச் சிதைத்து அதனை மாற்றியமைத்து சமதர்ம பூமியாய் இந்தியாவை ஆக்கிவிடவேண்டும் என்ற பெரிய எண்ணமெல்லாம் முஸ்லீம் அரசர்களுக்கு இல்லை. படையெடுத்து வந்த நாட்டில் எப்படி கொள்ளையடிப்பது என்ற ராஜரீக தர்மத்தை அவர்கள் நிறைவேற்றி வந்தார்கள். முழுமையாய் இந்தியாவிலும் ஒற்றை முஸ்லீம் அரசனின் ஆட்சியும் என்றும் இருந்ததில்லை என்பதால், இப்படிப் பட்ட ‘இந்துக்களை வேலைக்கு வைக்கும் பெரிய மனுஷத்தனம் ‘ நிகழ்ந்ததே ஒழிய இது இஸ்லாமிய அரசுகளின் மதச் சார்பின்மைக்கு உதாரணம் ஆகாது. உண்மையில் சாதிக்கு எதிரான கருத்தியலை கிறுஸ்துவர்கள் தோற்றுவித்த அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட பொது தளத்தில் இ ?லாமியத் தலைமையோ, மதவாதிகளோ தோற்றுவிக்கவில்லை.

உண்மையில் வருணாசிரம தர்மம் கேள்விக்குட்பட்டது இந்து மகான்களும், சீர்திருத்தக்காரர்களாலும், பிறகு பிரிட்டிஷ் அரசாட்சியில் ஆங்கிலக் கல்வியின் விளைவாக ஏற்பட்ட ஜனநாயக உணர்வு பெற்ற இந்துத் தலைவர்களாலும் தானே ஒழிய இஸ்லாமிய ஆட்சி சமதர்மத்தை மலரச் செய்தது என்றெல்லாம் ஒன்றுமில்லை. அப்படி ஒரு நோக்கமும் இஸ்லாமிய அரசுக்கு இருந்ததில்லை.

ஹிட்லருக்குக் கீழும் யூதர்கள் பணி புரிந்ததுண்டு. அதனால் ஹிட்லரின் ஆட்சி யூதர்களுக்கு நியாயம் வழங்கும் ஆட்சி ஆகிவிடுமா ? பிரிட்டிஷாரின் கீழ் இந்தியர்கள் பணி புரிந்தனர். அதனால் பிரிட்டிஷாரின் அரசு நிர்வாகம் அடக்கு முறை இல்லாதது என்றோ, இந்தியருக்கு எதிராக பாரபட்சம் காட்டியதில்லை என்று சொல்லிவிடமுடியுமா ?

7. ‘பழைய சங்கதிகள் கிடக்கட்டும். சமீபத்திய வரலாறுக்கு வருவோம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முசுலிம் லீக் கட்சி தானே காரணம். ? ‘ என்பது மார்க்ஸ் எழுப்பும் அடுத்த கேள்வி.

‘நாடு என்றால் என்ன. நாட்டுப் பற்று என்பதெல்லாம் எவ்வாறு மக்கள் மத்தியில் கட்டமைக்கப்படுகிறது. இந்தியா என்றொரு நாடு ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இருந்ததுண்டா, எந்த ஒரு பகுதி மக்களும் தாங்கள் பிரிந்து போய்ச் சுதந்திரமாக வாழவேண்டும் என விரும்பினால் அதனை நிறைவேற்றுவது தேனே நியாயம் என்பன போன்ற கேள்விகளிலிருந்து தொடங்கி மிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய விஷயம் இது. ‘ என்பது மார்க்ஸின் பதில்.

கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன புரட்டு இது. 1918-க்கு முன்னால் சோவியத் யூனியன் இருந்ததுண்டா ? ஐரோப்பா எப்போது ஐரோப்பா என்று அழைக்கப் பட்டது ? அமெரிக்கா 200 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி , எங்கே இருந்தது என்று கவைக்குதவாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். அலுக்காமல் இந்தப் பிரசாரம் தொடர்ந்து செய்யப் பட்டு திரும்பத் திரும்பச் சொன்ன பொய்யை சொன்னவர்களே நம்பி விடுகிறார்கள். அதன் பின் இந்தப் பொய்க்கு புனிதமான ஒரு அந்தஸ்தும் வந்துவிடுகிறது. இதனுடன் சேர்ந்த இன்னொரு பொய் இந்து மதம் 200 வருட வரலாறு கொண்டது என்பது. தேசம் தேசியம் என்று இன்று நாம் அறியும் கருதுகோள்கள் காலனியம் தாண்டித் தான் நம்மிடையே உருக்கொண்டுள்ளன. ஆனால் இப்படி உருக்கொண்ட பின்பு அதன் அடையாளங்களும் எழும்புவதும் அவசியமாகிறது.

இதைத் தொடர்ந்து இந்து மகா சபை போன்ற அமைப்புகள் தான் முதன் முதலில் பிரிவினையைக் கோரியது என்கிறார் மார்க்ஸ். ‘சவர்க்கர், பாய் பரமானந்தர் போன்றவர்களால்தலைமை தாங்கப் பட்டு இயங்கிய இவ்வமைப்பு இந்துக்கள் மத்தியில் முக்கியமான கருத்தியல் சக்தியாக விளங்கியது. ‘ என்கிறார் மார்க்ஸ். இது சந்தேகத்திற்குரியது. இந்து மகாசபை அமைப்புகள் எப்போதுமே இந்துக்களிடத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்தியதில்லை. முதன்முதலில் இந்தக் கருத்தாக்கம் இந்து மகாசபையில் தோன்றியது என்பது உண்மை என்று வைத்துக்கொண்டாலும் கூட , இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லீம் லீக் கட்சி ‘யும் ஜின்னாவும் தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த இவருடைய வாதத்தில் உள்ள ஓட்டையை இவரே உணர்ந்து தானோ என்னவோ அடுத்த கேள்வியை எழுப்புகிறார்.

8 . மார்க்ஸின் அடுத்த கேள்வி இப்படி வருகிறது : ‘ தாங்கள் பெரும்பான்மையாய் உள்ள ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று இந்துக்கள் சொன்னார்களா ? நம்ப முடியவில்லையே ? அவர்களுக்கு இதில் என்ன லாபம் ?

‘இந்துக்கள் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்துமகாசபைத் தலைவர்கள் சொன்னார்கள். சாதாரண மனிதனுக்கு தான் இந்து என்ற உணர்வே கிடையாது . அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமானால் இருக்கலாம். ‘ என்பது மார்க்ஸின் பதில்.

‘இந்துக்கள் மத்தியில் முக்கியமான கருத்தியல் சக்தியாக ‘ இந்து மகாசபை விளங்கியது என்று முதல் பத்தியில் உளறுவார் மார்க்ஸ். அடுத்த பத்தியிலேயே இந்துக்களுக்கு இந்து என்ற உணர்வே கிடையாது என்பார். என்றால், இந்து மகாசபை வெற்றிடத்திலே கருத்தியல் சக்தியாக விளங்கியதா ? அபப்டியென்றால் இந்துமகாசபை வெற்றிடத்தில் விதைத்த கருத்தியல் தான் வளர்ந்து இந்து மகா சபையாய் வளர்ந்ததா ? என்ன பிதற்றல் இது ? ‘உயர்சாதி இந்து ஆதிக்கச் சக்திகள் வெள்ளையரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறித்து தாங்கள் வைத்துக் கொள்ள விரும்பியபோது சாதிகளாய்ப் பிளவுண்டிருந்த மக்களை ‘இந்துக்கள் ‘ என்ற பெயரில் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது. ‘ என்பது மார்க்ஸின் இன்னொரு புரிதல். அதாவது சாதிஎதிர்ப்பில் சமூக ரீதியாய் எழுந்த எல்லா இயக்கங்களையும் ஒன்றே போல் நிராகரித்துவிட்டு , ‘உயர்சாதி இந்துக்களின் அரசியல் சதி ‘ என்பதான புரிதல் மார்க்ஸினுடையது . முதலாவதாக, காங்கிரஸ் இந்து அமைப்பு அல்ல. கடைசிவரையில் இந்து-முஸ்லீம் இணக்கத்தில் ஈடுபாடு காட்டி வந்தது இந்த இயக்கம். அதனால் தான் சுதந்திரம் அடைந்தும் கூட , பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாய் அறிவிக்கப் பட்ட போதும் இந்தியா , காங்கிரஸின் கீழ் தன்னுடைய மதச்சார்பின்மைத் தனித்துவத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரொலியாய் இந்தியா அமைக்கப் பட்டிருந்தால், எப்போதோ மனிதப் பரிமாற்றமும் நிகழ்ந்து, இந்தியா இந்து ராஷ்டிரமாகவும் ஆகியிருக்கும். பாகிஸ்தான் போன்ற பிற்போக்கு , பெரும்பான்மைவாதக் கருத்தியலுக்கு ‘தேசம் ‘ என்ற அந்த ?தை அளிக்க முன்வரும் மார்க் ?, இந்தியா என்று ஒரு நாடு இருந்ததுண்டா என்று கேட்பார். என்ன விசித்திரம் ?

பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லீம் லீக் காரணமல்ல என்று சொல்பவரின் வரலாற்று ஆய்வைப் பற்றி என்னவென்று சொல்வது ?

9. ‘அப்படியானால் நாட்டுப் பிரிவினைக்கு இசுலாமியருக்குப் பங்கே இல்லை என்கிறீர்களா ? ‘ மார்க்ஸின் அடுத்த கேள்வி.

‘கூட்டுத் தேசியத்துக்கு இசுலாம் எதிரானதல்ல ‘, என்பது மார்க்ஸின் பதில் . ‘ஜின்னா போன்ற அரசியலை முதன்மையாய்க் கொண்ட சக்திகள் காங்கிரசுக்கு மாற்றாக இருந்து பிரிவினையை ஆதரிப்பது என்பதும், மெளலானா அபுல் கலாம் ஆசாத் போன்ற மதப் பற்றாளர்கள் தொடர்ந்து காங்கிரசில் இருந்து அதனை ஆதரிப்பதும் தொடர்ந்தது. ‘ என்பது மார்க்ஸின் கூற்று.

கூட்டுத் தேசியத்துக்கு இசுலாம் எதிரானதல்ல என்பது உண்மை தான் : எப்போது ? இசுலாமியர்கள் சிறுபான்மையாய் இருக்கும் போது. இசுலாமியர்கள் பெரும்பான்மையாய் ஆகிவிட்டால் , கூட்டுத் தேசியம் ‘இசுலாமியக் குடியரசு ‘ ஆகிவிடும். மதச் சார்பின்மை காற்றில் பறந்து விடும். பாகிஸ்தான், பங்களா தேஷ் தொடங்கி சவூதி அரேபியா வரையில் இது தான் உண்மை.

10. ‘ சர் சையத் போன்ற மேல்தட்டினர் காங்கிரசுக்கு எதிராக வெள்ளையருக்கு ஆதரவளித்தனர் என்று சொன்னீர்கள். இது இழிவில்லையா ? ‘ என்பது மார்க்ஸின் அடுத்த கேள்வி.

‘இந்து மத ஆதிக்கச் சக்திகளுக்கெதிரான பல்வேறு குழுவினர் தங்களின் உரிமைகளைப் பெற வேண்டி காங்கிரசை எதிர்த்துள்ளனர். நமது நீதிக்கட்சி, பெரியார், அம்பேத்கர் போன்றோரும் இன்னிலை எடுக்க நேர்ந்ததை நாம் மறந்து விடக்கூடாது. ‘ என்பது மார்க்ஸின் பதில்.

அம்பேத்கர் சரி , நீதிக்கட்சி இந்து மத ஆதிக்கச் சக்திக்கு எதிராக எங்கே போராடியது ? ஆதிக்கச் சக்தி என்று மார்க்ஸ் சொல்வது பிராமணர்கள் என்ற பொருளிலா ? பொருளாதார அந்தஸ்து படைத்தவர்கள் என்ற பொருளிலா ? பிராமணர்கள் என்றால் மார்க்ஸ் சொல்வது சரி. ஆனால் நீதிக்கட்சி யாருடைய பொருளாதார நலன்களை முன்னிறுத்திப் போராடியது. அம்பேத்கர், பெரியார் பிரிட்டிஷாரை ஆதரித்ததும், மேல் தட்டு முஸ்லீம்கள் ஆதரித்ததும் ஒன்றாகிவிடுமா ? இந்துக்களிடையே போலவே, முஸ்லீம்களிடையேயும், ராவ் பக்தூர்களும், சர்களும் உண்டு. அம்பேத்கர் பிரிட்டிஷாரை ஆதரித்தது, தம்முடைய சகோதர தாழ்த்தப் பட்டவர்களின் நலனுக்காக. பிரிக்கப் படாத இந்தியாவில், முஸ்லீம்களுக்குப் பெருத்த அதிகார வளையமும், பெருமுதலாளிகளும் உண்டு. பாகிஸ்தான் பிரிவினையே அப்படிப்பட்ட மேல்தட்டினரின் போராட்டத்தினால் தான் நடந்தது. நிலப் பிரபுத்துவ நலன்களைக் காக்க வேண்டி, நேருவின் சோஷலிசச் சார்பான கருத்துகளினாலும், மதச்சார்பின்மையில் அவர் கொண்டிருந்த அசையாத நம்பிக்கையும் கண்டு அதன் கீழ் தம்முடைய மதவாத ஃப்யூடலிசம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்ற அச்சத்தில் ஏற்பட்டது தான் பாகிஸ்தான் பிரிவினைக் கோஷம் எழுந்தது. அதற்கு தனி மதம் தனி தேசியம் என்ற குரலை இக்பால் எழுப்ப, ஜின்னா துணை போனார். இந்த மதவாத தேசியம் பற்றி மார்க்ஸ் எங்குமே பேசவில்லை. இப்பொழுதும் கூட , பாகிஸ்தானின் பொருளாதார விதியை நிர்ணயிப்பவர்கள் பஞ்சாபி நிலப் பிரபுக்களான முஸ்லீம்களே. பாகிஸ்தானின் ராணுவத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் இந்த பஞ்சாபி முஸ்லீம்களே. சாதாரண முஸ்லீம்களுக்கு இந்தியாவில் ஏற்பட்ட அளவு கூட பொருளாதார வாய்ப்புகள் பாகி ?தானில் இல்லை. மேல் தட்டினர் பிரிட்டிஷாருடன் துணை போவதற்கும் , தாழ்த்தப் பட்ட மக்கள் பிரிட்டி ?ாருடன் இணைந்து கொள்வதற்கும் இடையே உள்ள பாரதூரமான வித்தியாசம் கூட மார்க்சுக்குப் புரியவில்லை என்பது ஆச்சரியம்.

‘இசுலாமியர் அனைவரும் ஒற்றைக் கருத்துடையவர்கள் ஒரே மாதிரிக் கருத்துடையவர்கள், ஒரே மாதிரி வாக்களிப்பவர்கள் என்பதெல்லாம் அவர்கள் பற்றிச் சொல்லக் கூடிய கட்டுக் கதைகளில் ஒன்று தான். இசுலாமியர்களுக்குள்ளும் பல்வேறு போக்குகள் இருந்தன. ‘ என்று மார்க்ஸ் சொல்வது உண்மைதான் .

ஆனால் இந்துக்களைப் பற்றிச் சொல்லும்போது ‘சாதாரண மனிதனுக்கு தான் இந்து என்ற உணர்வே கிடையாது. அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமானால் இருக்கலாம் ‘ என்பது மார்க்ஸ் சொல்படி, கட்டுக்கதையல்ல, பேருண்மை.

**************

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 11 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

மஞ்சுளா நவநீதன்


3. ஆனால் இஸ்லாமியர்கள் கட்டாயமாக மதம்மாற்றியுள்ளனரே ? இந்துக்களாக இருந்தவர் மீது ஜிஸ்யா என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாட நூல்களில் படித்திருக்கிறோமே ? என்பது மார்க்ஸ் எழுப்பும் கேள்வி.

‘மன்னர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தபோதும் அவர்கள் மக்களின் எதிரிகள் தான். ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களைக் கொள்ளையடித்தவர்கள் தான். இசுலாமிய மன்னர்கள் இந்துக்கள் மீது ‘ஜிஸ்யா ‘ வரி சுமத்தியது உண்மை தான். ஆனால் இந்த வரி இந்துக் கோயில்களைப் பராமரிக்க என்று சொல்லப் பட்டது. இசுலாமிய மக்கள் மீது வரி இல்லை என்று நினைத்து விடாதீர்கள் ‘சக்காத் ‘ என்ற பெயரில் அவர்களிடமும் வசூலிக்கப் பட்டது. ‘ என்பது மார்க்ஸின் சப்பைக் கட்டு.

இந்த ஜிஸ்யா ,ஜகாத் வரிகளின் மூலம் குரானை அடிப்படையாய்க் கொண்ட ஷாரியத் சட்டம் ஆகும். இதன் சிவில் வடிவங்கள் இன்றும் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் தனிச் சட்டமாய்த் தொடர்கின்றன. இதில் உள்ள அநீதியைச் சுட்டிக் காட்டி முஸ்லீம் அறிவாளிகள் கூட பொது சிவில் சட்டம் வேண்டும் என்று வாதாடுகிறார்கள். ஆனால் , முஸ்லீம்களின் சிறுபான்மை உரிமை என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான சட்டம் இருக்க வேண்டுமா என்று விவாதங்கள் நடைபெறுகின்றன. அது ஒரு புறம் இருக்க ஜிஸ்யா, சகாத் பற்றிப் பார்ப்போம்.

ஜிஸ்யா என்ற வரி முஸ்லீம் அரசர்கள் முஸ்லீம்கள் அல்லாதார் மீது சுமத்திய வரி . சகாத் என்பது முஸ்லீம்களின் மீது சுமத்திய வரி. இது எதற்காக என்னும்போது , முஸ்லீம் அல்லாதாரைத் தனியாய்க் காண்பதற்கும், அவர்களைப் ‘பாதுகாக்க ‘ என்றும் சொல்லப் படுகிறது. இது முஸ்லீம் அல்லாதாரை ‘பாதுகாப்பு ‘ வேண்டி நிற்கிற இரண்டாம் தரக் குடிமகன்களாய் ஆக்கப் பயன்படுகிறது. இதன் அழுத்தத்தில் சமூக அங்கீகாரம் வேண்டி அவர்கள் முஸ்லீம்களாக மாறுவதும் நிகழ்ந்தது.

முஸ்லிம் அரசர்களின் ஆளுகையில் வரி என்பது வெறும் ‘பணம் ‘ பற்றிய பிரசினை அல்ல. அது சமூக அந்தஸ்தையும் , சமூக நிலையையும் அறிவிக்கிற ஒரு அடக்குமுறை ஆயுதம். சகாத் செலுத்துவது கடவுளுக்குப் பிரியமான ஒரு செயலாய், முஸ்லீமின் பெருமைக்குரிய கடமையாய்க் கொள்ளப் படுகிறது என்பது தான் முக்கியமான விஷயம். இதைப் பூசி மெழுகிவிட்டு, மார்க்ஸ் யாரோ ஒரு இந்து அரசன் 14ம் நூற்றாண்டில் யூதர்கள் மீது வரி விதித்ததாய்ச் சொல்கிறார். அது யார் என்றோ இந்தியாவின் எந்த பகுதியில் என்றோ அவர் குறிப்பிடவில்லை. 2000 வருடத்துக்கு மேற்பட்ட இந்திய வரலாற்றில் அவர் தேடித் தேடிக் கண்டுபிடித்தது இது ஒன்றைத் தான், என்பதே இது மதம் விதித்த வரிமுறை அல்ல என்பதன் நிரூபணம்.

தொடர்ந்து மார்க்ஸ் சொல்வது இது : ‘ ஜிஸ்யாவுக்குப் பயந்து கொண்டு இந்துக்கள் மதம் மாறினார்கள் என்று நினைத்து விடாதீர்கள். எந்ர்த இசுலாமியமன்னரின் காலத்திலும் இந்து மக்கள் கட்டாயமாக மதம் மாற்றப் பட்டதில்லை. ‘ முழுப் பூசணியை சோற்றில் மறைப்பதற்கு இதை விட உதாரணம் தேவையில்லை. முஸ்லிம் மன்னர்களின் அவையில் இருந்தவர்களே இந்த மதமாற்றங்களைப் பெருமளவில் நடந்ததாய்ப் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி இல்லையென்றால் இந்தியத்துணைக்கண்டத்தில் எப்படி பாகிஸ்தான், கிழக்கு வங்கம் பகுதிகளில் மட்டும் இசுலாமியர் பெரும்பான்மையாய் ஆகியிருக்க முடியும் ? 20-ம் நூற்றாண்டிலேயே, நவகாளியிலும், மலபாரிலும் இவை நடந்திருக்கின்றன.

4. அலாவுதீன் கில்ஜி இந்து சமீன் தார்களை ஒடுக்கினானே ? என்பது மார்க்ஸ் தொடுக்கும் அடுத்த கேள்வி.

‘அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் செய்த சில முயற்சிகளை , பெரும் மக்கள் திரள்களைக் கட்டாயமாக மதம் மாற்றினார்கள் என்கிற பொருளில் நாம் புரிந்துகொள்ளக் கூடாது. ‘ என்கிறார் மார்க்ஸ். பின் எப்படிப் புரிந்து கொள்வது ?

‘எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்பு மேற்கொள்ளப் பட்ட அதிகார வெறி பிடித்த மன்னர்களின் நடவடிக்கைகளை அவற்றிற்குரிய சூழலிலிருந்து விலக்கிப் பூதாகாரப் படுத்தி இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது இரத்த வெறி கொண்ட பகைமையை ஏற்படுத்தப் பயன்படுத்தக் கூடாது ‘ என்ற மார்க்ஸின் கூற்றுடன் நான் முழுக்க முழுக்க உடன்படுகிறேன். ஆனால், இந்த நிலைபாட்டை எடுப்பதற்கு முன் நேர்மையான வரலாற்று வரைவு வேண்டும். ஆமாம், இதெல்லாம் நடந்தது. ஆமாம் தாம் இஸ்லாமுக்குப் பணி புரிகிறோம் என்று நம்பிய அரசர்களால் இது நடத்தப் பட்டது என்ற உண்மையை பூசி மெழுகாமல் பதிவு செய்து , அதனை கடந்த காலநிகழ்வாக ஒப்புக்கொண்டால் தான் நாம் அதைத் தாண்டிச் செல்ல முடியும். அதில்லாமல் இந்து மன்னர்களும் இதைச் செய்தார்கள் என்று சொல்வது எந்த விதத்திலும் உதவாது.

அப்படி வரலாற்றை ஒப்புக் கொண்டால் தான் நாம் வரலாற்றின் பழைய தவறுகளைத் தவிர்க்க முடியும். இசுலாமிய மன்னர்களின் செயல்கள் ஏன் இசுலாமுடன் இனங்காணப் பட்டன ? இனங்காணப் படுகின்றன ? ஜாலியான் வாலாபாகின் டயர் அட்டூழியத்தை யாரும் கிறுஸ்தவத்துடன் இனங்காண வில்லையே ஏன் ? காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

5. இந்து மன்னர்கள் எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கலாம். ஆனால் ஓரிருவரைக் கூட கட்டாயமாய் மதம் மாற்றியதில்லையே ? என்பது மார்க்ஸின் அடுத்த கேள்வி.

‘ இசுலாம், கிறுஸ்தவம் போன்றவை பரப்புதற்குரிய மதங்கள் இந்து மதம் அப்படிப்பட்டதல்ல. ..எனவே ஒருவரை இந்து மதத்திற்கு மாற்றினால் அவரை எந்தச் சாதியில் வைப்பது என்பது இந்து மதத்திற்கு ஒரு பிரசினை. இங்கேயுள்ள வைதிக, சனாதன மதத்திற்கு இந்து மதம் என்ற பெயர் சமீபத்தில் ஏற்பட்டது தான். மூன்றாவதாக: மதம் மாற்றியதில்லையே தவிர , மாற்று மதங்களை இழிவு செய்ததிலும் அரசதிகாரத்தின் துணையோடு மாற்று மதத்தவரை இரக்கமேயில்லாமல் கொன்று குவித்ததிலும் இந்து மதம் வேறெந்த மதத்திற்கும் சளைத்ததில்லை. ‘

இதை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். ஆனால் அந்த மூன்றாவது காரணம் தான் மார்க்ஸின் மொழிதலில் சுவாரஸ்யமான ஒன்று . இந்து மதத்தைத் தாக்குகிற தீவிரத்துடனே கூட தன்னை மறந்து மார்க்ஸ் தந்திருக்கும் ஒப்புதல் வாக்கு மூலம் இது. கிறுஸ்தவமும் ,இசுலாமும் ‘மாற்று மதங்களை இழிவு செய்ததிலும், அரசதிகாரத்தின் துணையோடு மாற்று மதத்தவரை இரக்கமேயில்லாமல் கொன்று குவித்த ‘வை தாம் என்று மார்க்ஸ் ஒப்புக் கொள்வது பாராட்டத்தக்க உண்மை. மார்க்ஸ் ஒரு வழியாக உண்மையை முன்மொழிந்ததற்கு அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.

கிறுஸ்தவமும், இசுலாமும் மிஷனரி மதங்கள் என்பதால் அவை பண்ணிய அட்டூழியத்தைப் பொறுத்தருள வேண்டும். ஆனால் இந்து மதம் மிஷனரி மதம் அல்ல என்பதால் , இஸ்லாமுக்கும் கிறுஸ்துவத்திற்கும் வ்ழை விட்டு இந்து மதம் விலகி நிற்க வேண்டும் என்பது மார்க்ஸ் போன்றோரின் கூற்று. மிஷனர் மதம் என்பது என்ன ? உலகில் மற்ற நம்பிக்கையினரிடையே ‘நற்செய்தி ‘யைக் கொண்டு போகிற தெய்வீகக் கடமை என்பது இதன் பொருள். இந்தப் பரப்புதலுக்கான வழிமுறைகளின் நேர்மை பற்றி இந்த மதங்கள் கவலைப் பட்டதில்லை என்பது மார்க்ஸ் ஒப்புக்கொள்வது தான். ஆனால் இப்படி , பரப்புதலை முக்கிய நோக்கமாய்க் கொண்டு செயல்படும் ஒரு மதத்துடன் , சாதகமாகவோ பாதகமாகவோ உறவு கொள்கிற இன்னொரு மதம் எப்படி தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள முடியும் ? இந்து மதத்தின் முன்னால் கடந்த 1000 வருடங்களாக நிற்கும் கேள்வி இது. சாதியம் என்பது மட்டுமே இந்து மதத்தின் அடையாளம் அதனால் இந்துவாய் மதமாற்றம் செய்வது இந்துக்களுக்குக் கூடவில்லை என்று சொல்லும் மார்க்ஸ் அடுத்த பத்தியிலேயே சொல்வது இது. ‘ இந்து மதம் பரப்புதற்குரிய மதமில்லை என்ற போதிலும் பல்வேறு இனக்குழு மக்கள் இந்து மதத்திற்குள் கொண்டு வரப்பட்டு சாதியப் படி நிலையில் இருத்தப்பட்டது ‘ என்று சொல்கிறார். ஆதாரம் இதற்கும் இல்லை. இந்திய இலக்கியத்தில் சாதியம் பேசப்படுவதன் கூடவே அதன் எதிர்க்குரல்களும் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கின்றன. மதம் என்ற ஓர் அமைப்பின் ஐரோப்பியப் புரிதல்கள் இந்தியாவில் நுழைந்ததே சமீபத்திய வரலாறு தான். இன்று இந்து மதமும் அப்படி உருக்கொள்வது அவசியமாகிறது. இந்துமதம் என்பது பெயரால் அப்படி சுட்டப் படாவிட்டாலும் அதன் வேர்கள் காலங்காலமாக இருந்துஅருபவை என்பதை அறிந்த எவரும் இந்து என்ற பெயர் சமீபத்தில் ஏற்பட்டதைக் காரணம் காட்டி அதைக் கண்டனம் செய்ய முடியாது. சாதியம் என்பது சமூகத்தைக் கட்டமைக்கும் ஒரு செயல். மதம் என்பது சமூகக் கட்டமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு சூழலில், இந்து மதத்தின் அங்கமாய் இது ஆகிப் போனதும் அது பற்றிய விமர்சனங்கள் எழுந்தவுடன் , நகர்மயமாதலுடன் இணைந்து அது தன்னைப் புனரமைத்துக் கொள்ள முயன்றதும் வரலாறு. இந்த வரலாற்றை ஒரே வரியில் முடித்து விடுகிறார் மார்க்ஸ். இதனால் பெளத்தமும், சமணமும் கூட முழுக்க சாதியத்தைத் துறக்க முடியவில்லை. இதனால் தான் இஸ்லாமும், கிறுஸ்துவமும் இந்தியாவில் சாதியத்தைத் துறக்க முடியவில்லை. சமூகப் படி நிலைகளில் இயங்கிய ஒரு சமூகத்தில் மதமாற்றம் மட்டும் சாதியத்தைத் தகர்த்து விட முடியாது என்பது பால பாடம்.

*********

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 10 (இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

மஞ்சுளா நவநீதன்


பா ஜ க ஆர் எஸ் எஸ் இசுலாமியர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு பதில் சொல்கிற பாணியில் இந்த அத்தியாயம் எழுதப் பட்டிருக்கிறது. இது தனிப் பிரசுரமாகவும் வெளியாகி நன்றாக விற்பனையாகியிருக்கிறது. காரணம் இசுலாமியர் பற்றி ஒரு பாதுகாப்பு உணர்வுடன், அவர்களைப் பற்றிய விமர்சனங்களை நியாயப் படுத்தும் விதமாகவும், இசுலாமியரிடையே எல்லாம் சரியாய் இருக்கிறது என்ற ஆறுதல் அளிக்கும் வண்ணம் எழுதப் பட்டது ஒரு காரணமாய் இருக்கலாம்.

இந்த அத்தியாயத்தின் தலைப்பு வேறு விதமாக இருந்திருக்க வேண்டும். ‘இசுலாமியர் பற்றிய உண்மைகள்- துரதிர்ஷ்டவசமாக மற்ற மதத்தினர் பற்றியும் இவையே உண்மைகள் ‘ என்பதாய் இருக்கலாம்.

‘இசுலாமியர்கள் கோயில்களை இடித்தவர்கள், இந்தியத் துணைக் கண்டத்தைத் துண்டாடியவர்கள், பலதார மணம் புரிபவர்கள், நாட்டுப் பற்று இல்லாதவர்கள், பெரும்பணக்காரர்கள்.. என்றெல்லாம் பிம்பங்கள் உருவாக்குவதில் இந்துத்துவம் வெற்றி பெற்றுள்ளது.. இத்தகைய பிம்பங்கள் மதவெறியைப் பரப்புவதிலும், வன்முறைக்குத் தூண்டுவதிலும், நடந்துபோன வன்முறையை நியாயப் படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.. இசுலாமியருக்கு எதிராகப் பரப்பப் பட்டுள்ள கட்டுக் கதைகள் இப்பகுதியில் தொகுக்கப் பட்டு கட்டவிழ்க்கப் படுகின்றன. ‘

1.இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள் தானே இசுலாமியர்கள் வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவது உங்கள் நோக்கமா ?

இந்தக் கேள்வியை முன்னிறுத்தி மார்க்ஸ் சொல்லும் பதில் இது : ‘ வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படி போதித்துள்ளன. ஆனால் வரலாற்றை ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் இன்று இசுலாமியரை அந்நியர் எனச் சொல்லுபவர்களும் வந்து குடியேறியவர்கள் தான் என்று விளங்கும். .. இந்த ஆரியர்கள் ‘ரிக் ‘ வேத க் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களைப் போரிட்டு அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கினார்கள். ‘

அதாவது இசுலாமியர்கள் வந்தேறிகள் தான். ஆனால் அதைச் சொல்லுபவர்கள் – பிராமணர்கள் என்ற மார்க்ஸின் ஊகப்படி – கூட வந்தேறிகள் தான். இசுலாமியர்களை வந்தேறிகள் என்று சொல்வது பாசிசம், ஆனால் நிரூபிக்கப் படாத ஆரிய இனவாதத்தின் அடிப்படையில் ஓர் இயக்கமே இங்கு பிராமண எதிர்ப்பில் கொடிகட்டிப் பறந்தால் அது முற்போக்கு- புரட்சி. நான் ஆரிய வந்தேறிகளை – அவர்கள் வந்தேறிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் கூட – எதிர்க்கிறேன், இசுலாமிய வந்தேறிகளை ஆதரிக்கிறேன் என்பது தான் மார்க்ஸ் போன்றோரின் நிலைபாடு. இதில் உள்ள முரண்பாடு கூட இவர்களுக்குத் தெரிவதில்லை. பிராமண எதிர்ப்பில் உள்ள வந்தேறி வாதம் எப்படித் தவறோ அதே போன்ற தவறு தான் இசுலாமியர்களை வந்தேறிகள் என்று சொல்வதும்.

இந்த வந்தேறிகள் என்ற சொல்லே தவறு. வரலாற்றில் ஓர் இனக்குழுவின் அரசர்கள் படையெடுத்து வருவதும், ஆக்கிரமிப்பதும் எல்லாக் காலங்களிலும் நடந்து வந்திருக்கிறது. ஆனால் இசுலாமிய , கிறுஸ்தவ படையெடுப்புகள் வெறும் அரசு சார்ந்தவை மட்டுமல்ல, மக்களைச் சார்ந்து அவர்கள் கலாசாரத்தை ஆக்கிரமிப்பவையும் கூட. இந்தக் கலாசார ஆக்கிரமிப்பு சிறு அளவில் எல்லாப் படையெடுப்புகளிலும் நிகழ்ந்தாலும், இசுலாமியப் படையெடுப்புகளில் பாரதூரமான பாதிப்புடன் நிகழ்ந்தவை என்பது வரலாறு.

ஆனால் அது வரலாறு தான். இன்றைய ஜனநாயக இந்தியாவில் இந்தச் சொல்லாடலுக்கு இடமில்லை. ஆனால் பா ஜ க வின் ஆர் எஸ் எஸ்ஸின் அரசியல் செயல்பாடுகளுக்கு இது ஒரு பக்கத்துணையான பொய்ப்பிரசாரம்- திராவிட இயக்கங்களின் பொய்ப் பிரசாரம் போன்றதே இது.

2. இசுலாமியர் படை எடுத்து வந்து இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறதே. ?

இந்தக் கேள்விக்கு மார்க்ஸின் பதில்: ‘பண்டைய மன்னர்கள் நடத்திய போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டவை தான். .. எந்த இசுலாமிய மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோயில்களையோ தனது பாதுகாப்பிலிருந்த இந்து மன்னர்களின் கோயில்களையோ இடித்ததில்லை. ‘ என்ற பச்சைப் பொய்.

ஒளரங்கசீப்புக்குக் கூட மார்க்ஸ் சான்றிதழ் அளிக்கிறார். ‘ அவனுக்கு எதிராகச் சதி செய்தவர்களின் கோட்டைகளும் கோயில்களும் தான் இடிக்கப் பட்டன. மற்றபடி முழுமையான மதச் சுதந்திரம் இருந்தது. ‘

முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாமிய மதத்திற்கு முதன்மையான கடப்பாடுடையவர்களாய் இருந்தார்கள். மதச் சட்டங்கள் அவர்கள் ஆட்சி முறையில் முதன்மையான இடம் பெற்றன. அவர்கள் கோயில்களை இடிப்பதை ஒரு மதக் கடமையாய் எண்ணிச் செய்தார்கள் . அது வெறும் பொருளாதாரச் செயல் மட்டுமல்ல. மற்ற மன்னர்களுக்கு கோயில் இடிப்பு, போர் முறையுடன் சேர்ந்த ஒன்றாய் இருக்கலாம், ஆனால் விக்கிரக ஆராதனையை ஒழிப்பதை தம் புனிதக் கடமையாய்த் தான் இஸ்லாமிய மன்னர்கள் கருதினார்கள். 20-ம் நூற்றாண்டின் இறுதியில் தாலிபன் புத்தர் சிலையைத் தகர்த்ததையும் இந்த மதக் கடமையின் கண்ணியாக வைத்துத் தான் பார்க்க வேண்டும். பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னால் திட்டமிட்டு நடந்த பாகிஸ்தானிய, பங்களாதேஷ் வன்முறையில் இந்து வழிபாட்டுத் தலங்கள் உடைக்கப் பட்டதையும் இத்துடன் வைத்துப் பார்க்க வேண்டும்.

ஒரு செயலுக்கு காரணங்கள் என்ன என்று பார்த்து அதன் பின்னணியைக் காண வேண்டும். வெறும் கோயில் உடைப்பை மட்டும் பார்த்தோமானால், இந்து மன்னர்களின் செயலும், இஸ்லாமிய மன்னர்களின் செயலும் வேறு வேறு தளத்தில் உள்ளன என்பது புரியும். இந்து மன்னர்கள் தாம் இந்துவாய் இருப்பதால் கோயில் உடைப்பை மேற்கொள்ளவில்லை. இந்து மதம் தமக்கிட்ட புனிதக் கடமை என்றும் அதைக் காணவில்லை. ஆனால் இசுலாமிய மன்னர்கள் அப்படியல்ல. இது தான் மிக முக்கியமான வேறுபாடு. இந்த வேறுபாட்டைக் காணாமல், எல்லா உடைப்புகளும் ஒன்று போல் தான் என்று மதவாத பாசிசத்துக்கு நியாயம் கற்பிப்பது தவறு.

ஆனால் கடந்த கால மன்னர்களின் செயலுக்கு , இன்றுள்ள இஸ்லாமிய மக்களைக் காரணமாக்கிப் பகைமையினை உருவாக்கும் பாஜக- ஆர் எஸ் எஸ்-ஐத் தாக்க மார்க்சுக்கு எந்த உரிமையும் இல்லை. ஏனென்றால் எப்போதோ யாரோ எழுதிவைத்த மனுதர்மத்தை முன்வைத்து இன்றுள்ள பிராமணர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் மாமனிதர் இவர்.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம்

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

மஞ்சுளா நவநீதன்


போடா சட்டம் எப்படி மனித உரிமைகள் விரோதச் சட்டம் என்று கூறுவதற்கு ஆர் எஸ் எஸ் – பா ஜ கைவை ஏன் குற்றம் சாட்ட வேண்டும் என்று தெரியவில்லை. எல்லா அரசுகளுமே, மிசா என்ற பெயரில், தடா என்ற பெயரில் அவ்வப்போது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிற சட்டங்களை இயற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதிகார வர்க்கத்தினருக்குக் கேள்வி எதுவும் , யாரும் கேட்டு விடாமல் தன் இஷ்டத்திற்கு தனக்குப் பிடிக்காதவர்களை துரத்திப் பிடிக்கும் சட்டத்தின் மீது எப்போதுமே ஓர் ஆசை உண்டு. அதன் காரணகர்த்தாக்கள் அன்று முதல் இன்று வரையில் எல்லாக் கட்சிகளிலும் இருந்து வருகிறார்கள். போடாவை ஆர் எஸ் எஸ் – பா ஜ க வின் சட்டம் என்றும் முஸ்லீம்களைக் குறி வைப்பதற்கென்றே இயற்றப் பட்ட சட்டம் என்றும் கூற முடியாது. ஆமாம், இது மோசமான சட்டம் தான், இன்று பா ? க-விற்கு ஆதரவாக எடுக்கப் படும் நடவடிக்கைகள் நாளை, காங்கிர ? ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கையிலும் இது ஒட்டிக் கொள்ளும் அவர்கள் நலனுக்கும் பயன்படும் என்பது தான் உண்மை.

போடா ஒரு மோசமான சட்டம். இது போன்ற சட்டங்களை எதிர்க்க ஒட்டுமொத்தமாக ஜனநாயக வாதிகளின் ஆதரவைத் திரட்ட இது முஸ்லிம் எதிர்ப்புச் சட்டம் என்று ஒரு வர்ணத்தை மற்றும் தரலாகாது. இப்படி இந்த்ச் சட்டத்தைச் சித்தரிப்பது, மனித உரிமைகளுக்காக போராடும் மற்றவர்களுக்கு நியாயம் செய்வதாகாது.

******

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி – 3 (அத்தியாயம் 3 : இந்துத்துவத்தின் பரிணாமம் – ஒரு வரலாற்றுக் குறிப்பு)

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue

மஞ்சுளா நவநீதன்


இந்த அத்தியாயத்தில் மார்க்ஸ் இன்றைய ஆர் எஸ் எஸ்-இன் பிதாமகர்கள் என்று இவர் கருதும் சில இயக்கங்களைப் பற்றிச் சொல்கிறார். இதனுடன் கூடவே இந்து ‘மேல்சாதிக் காரர்கள் ‘ இந்து மதத்தில் கொண்டு வந்த சீர்திருத்தங்களின் மீது சில விமர்சனங்களை வைக்கிறார்.

‘வெள்ளையருக்கும் முன் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் வந்த வெளிநாட்டு ஆக்ரமிப்பாளருக்கும், வெள்ளையருக்கும் நோக்கத்திலும் , நடைமுறையிலுமிருந்த சில வேறுபாடுகள் எண்ணத்தக்கவை. வெள்ளையருக்கு முன் வந்தோர் இந்த நாட்டைச் சுரண்டி தங்கள் நாட்டிற்குக் கொண்டு சென்று வாழும் உத்தேசமுடையவர்களல்ல. ‘ என்பது மார்க்ஸின் குறிப்பு. வெள்ளையருக்கு முன்பு வந்த ஆக்ரமிப்பாளர்கள் என்று யாரைக் குறிப்பிடுகின்றார் என்பதைத் தெளிவில்லாமலே விட்டு விடுகிறார் மார்க்ஸ். அவர் சொல்வது இஸ்லாமியப் படையெடுப்புகளைப் பற்றித் தான். ஆனால் இதை வெளிப்படையாய் குறிப்பிடுவது அவர் ‘பாதுகாக்க ‘ நினைக்கும் இஸ்லாமியமக்களுக்குச் சங்கடம் தரும் என்றோ என்னவோ இதைக் குறிப்பிடாமல் விட்டு விடுகிறார். ‘பெரும்பாலும் அவர்களது நோக்கம் இங்கேயே குடியேறுவதாக இருந்தது. ‘ என்கிறார் மார்க்ஸ்.

இது இடதுசாரி அறிவுஜீவிகளின் வழக்கமான பாட்டு. இஸ்லாமியப் படையெடுப்புகளின் தீவிரத்தைக் குறைத்தும் அதன் விளைவுகள் வெள்ளையர் படையெடுப்புகளைப் போலக் கண்டனம் செய்யப்படவேண்டியதில்லை என்பதாகவும் சொல்வதற்கு இந்த வாதம் இவர்களுக்குப் பயன்படுகிறது. அதாவது ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்த இடத்தில் குடியேறுவதாய் இருந்தால் பரவாயில்லை என்கிற வாதமாய் இதைக் கொள்ளலாம். இதன் தவறை உணர வேண்டுமென்றால் அமெரிக்கா மீது நிகழ்ந்த ஆக்கிரமிப்பையும், தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர் செய்த ஆக்கிரமிப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா ‘புதிய உலகம் ‘ என்ற பெயரில் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டது. அங்கிருந்த புராதனக் குடிமக்கள் கொல்லப் பட்டார்கள். அவர்களுடைய வாழ்க்கைமுறை முற்றிலுமாய் குலைக்கப் பட்டது. தென் ஆப்பிரிக்காவில் இனவெறிப் பகுப்பு முறை புகுத்தப் பட்டது. இஸ்லாமியப் படையெடுப்புகள் எகிப்து தொடங்கி ஆஃப்கானிஸ்தானம் வரையில் இருந்த பழங்குடிகளைக் கட்டாய மதமாற்றம் செய்து , அவர்களுடைய கலாசாரம் அழிக்கப் பட்டது. மார்க்ஸ் வாதப் படி பார்த்தால் இதெல்லாம் சரியே. ஏனென்றால் இந்த ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம் ‘இங்கே வந்து நிரந்தரமாக ‘க் குடியேறுவது.

சொல்லப்போனால், வெள்ளையர்கள் இங்கே குடியேறக்கூடாது என்று எந்தக் கொள்கையும் இருந்ததாய்த் தெரியவில்லை. விடுதலைப் போராட்டம் இல்லாமல் இருந்திருந்தால், இங்கு குடியேற்றம் அதிகரித்திருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கும் சரி, சிலுவைப் போர்களுக்கும் சரி மதம் ஆக்கிரமிப்பின் பின்னணியில் மிக முக்கியமான விஷயமாய் இருந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு இது முன்னணியில் இல்லை. இன்னும் கூர்ந்து கவனித்தால், ஜனநாயக மரபு ஒரு புறம் வளரவும், எழுதப்பட்ட சட்ட வரைவுகள் நிலை பெறவும், எல்லாருக்கும் பொதுவான நீதி என்ற ஒரு நடைமுறை வரவும் பிரிட்டிஷார் காலம் தான் துணை புரிந்தது. இதை மார்க்சும் ஒப்புக் கொள்கிறார். ‘நவீன வடிவிலான அரசு நிறுவனங்களைக் கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ‘ பிரிட்டிஷாருக்கு இருந்ததாய் அவர் தெரிவிக்கிறார். ‘நிர்ப்பந்தம் ‘ என்பதன் பொருள் என்ன ? என்ன நிர்ப்பந்தம் எங்கிருந்து அவர்களுக்கு வந்தது ? ஏன் இஸ்லாமிய அரசின் கீழ் இந்த நிர்ப்பந்தம் எழவில்லை ?

கேள்வியிலேயே ஒருக்கிறது பதில். மார்க்சும் இந்த உண்மைகளைச் சொல்கிறார். ஆனால் அழுத்தம் தந்து சொல்வதில்லை. ‘ அவர்கள் இங்கே வந்தபோது தொழிற்புரட்சி தொடங்கியிருந்தது. ‘ அதாவது , நிலப்பிரபுத்துவ ஆட்சி முறையான இந்து மற்றும் இஸ்லாமிய மன்னராட்சிக்கு மாற்றாக ஒரு புதிய ஆட்சி முறை, ஒரு புதிய அரசாங்க வழி முதன் முதலில் எழுந்தது. இதை ‘இந்து உயர்சாதி ஆதிக்க சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. ‘ என்பது மார்க்சின் கூற்று. இந்தப் பயன்படுத்தலின் பின்னால் உள்ள நவீனப் படுத்துதல் எப்படி இந்த உயர்சாதிகளிடையே முதன்முதலில் சமத்துவம் பற்றிய ஐரோப்பியக் கருத்துகளுக்கு வித்திட்டது என்பதை அவர் சொல்வதில்லை.

விடுதலைப் போராட்டத்தின் ‘தொடக்ககால எழுச்சிகளில் இசுலாமியரின் பங்கு அதிக வீச்சுடனும், வன்மையாகவும் இருந்தது ‘ என்பதற்கான காரணங்களாய் மார்க்ஸ் சுட்டுபவை : சிலுவைப்போரின் நினைவும், ஐரோப்பியர் இஸ்லாமியர் மீது எடுத்த படையெடுப்பும். இந்த வன்மைக்கு இவர் மார்சிய அணுகுமுறையைப் பயன் படுத்தியிருந்தால், நிலவுடமைச் சமூகத்தின் மதிப்பீடுகளையும். மதம் சார்ந்த அடையாளங்களையும் கொண்டு எழுந்தது இஸ்லாமியரின் விடுதலைப் போராட்டம் என்பது தெளிவாய் ஆகியிருக்கும். இஸ்லாமியரின் விடுதலைப் போராட்டம், பாகிஸ்தானின் இஸ்லாமியக் குடியரசிற்கு இட்டுச் சென்றது, ‘இந்து உயர்சாதி ‘ என்று மார்க்ஸ் சொல்கிறவர்களின் விடுதலைப் போராட்டம் மதச்சார்பற்ற, அனைவருக்கும் சம வாக்குரிமை அளிக்கிற இந்தியாவிற்கு இட்டுச் சென்றதும் தற்செயலல்ல என்பதும் சொல்லப் பட்டிருக்கும். சுவாரஸ்யமான ஒரு முரண்பாடு என்னவென்றால் இன்று மார்க்ஸ் தான் போராடுவதாய்ச் சொல்லிக்கொள்ளும் ‘மதச்சார்பின்மை, ஜனநாயகம் சமத்துவத்தை ‘ இவர் பெறுவதே ஆங்கிலக்கல்வியாலும், பிரிட்டிஷ் தந்த தாராளவாதக் கொள்கைகளினாலும், இவர் சுட்டிக் காட்டும் ‘இந்து மேல்சாதியினர் ‘ மேற்கொண்ட இயக்கங்களின் விளைவாகவும் தானே ஒழிய, இஸ்லாம் தந்த மதக் கோட்பாடுகளினால் அல்ல.

இந்து உயர்சாதிகள் ஆங்கிலேய அரசு நிறுவனங்களை மட்டுமல்ல, இஸ்லாமிய அரசு நிறுவனங்களிலும் கூட இடம் வகித்தனர். இஸ்லாமிய் அரசு எப்படி மதம் சாராத அரசு என்று நிரூபிப்பதற்காக பலரும், அக்பரின் கீழ் பணி புரிந்த இந்துக்களைச் சொல்வதுண்டு. திப்பு சுல்தானிடமும் கூட ஒரு பிராமணர் முக்கிய மந்திரியாய் இருந்ததுண்டு. இஸ்லாமிய அரசாங்கங்கள் தலித்களைத் தேடிப் பிடித்து அரசு அமைப்பில் இடம் கொடுத்து சாதியத்தை உடைத்துச் செயல் பட்டனவா ? இஸ்லாமிய அரசாங்கங்களுக்கு இங்கிருந்த சாதிய அமைப்பு உறுத்தலாகவோ, களையப் படவேண்டிய ஒன்றாகவோ என்றுமே தோன்றியதில்லை. மார்க்ஸ் இதை மறைமுகமாய்ச் சொல்கிறார். பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகான ஆவணப் படுத்துதல்கள் தாம் முதல் முறையாய் அட்டவணையிட்டு தலித் மக்களுக்கு உரிய அங்கீகாரம் தந்தது.

இதனால் இந்தக் கட்டுரையில் அவர் சொல்வது பாதி. சொல்லாமல் நம் ஊகத்திற்கு விடுவது மீதி. ஆனால் அவருடைய முடிபுகள் அனைத்தும் அவர் சொல்லாமல் விடும் விஷயங்களுக்கு நேர் எதிரிடையானவை.

‘ இந்தியாவிலிருந்த சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் , இசுலாமியர்கள் வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதையும் ஆங்கிலேயர்கள் பள்ளிப் பிள்ளைகளின் மனத்தில் திரும்பத் திரும்பப் பதித்து வந்தனர். ‘ ( என்னுடைய குறிப்பு இது பற்றி : சாதிய ஏற்றுத் தாழ்வுகள் இந்தியாவில் இதற்கு முன்பு இருந்ததில்லை என்பது மார்க்ஸின் வாதமா ? அதைச் சொல்ல பிரிட்டிஷாருக்கு உரிமை இல்லை என்பது இதன் பொருளா ? இசுலாமியர்கள் வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று பதிய வைத்தவர்கள் தம்மை – பிரிட்டிஷாரை- உள்ளூர்க்காரர்கள் என்று சொல்லிக் கொண்டார்களா ? ஆங்கிலேயர் இஸ்லாமியரைப் பற்றி மட்டும் இப்படிச் சொல்லவில்லை ஆரியர்-திராவடர் என்ற பகுப்பு முறையையும், ஆரியர் வெளியிலிருந்து வந்தவர்கள் என்ற கருத்தையும் பதிய வைத்தவர்கள் அவர்கள் தானே ? இதை ஏற்றுக் கொண்டு ,திராவிட இயக்கங்கள் பிராமணர்கள் வெளியே இருந்து வந்தவர்கள் என்று செய்த பிரசாரமும் தவறல்லவா, மார்க்ஸின் கூற்றுப்படி ? அப்படித் தவறு என்றால் அடஹி ஏன் மார்க்ஸ் வெளிப்படையாய்ச் சொல்வதில்லை ? )

‘இசுலாமியர் ஆங்கிலக் கல்வியிலிருந்து ஒதுங்கும் நிலை நீடித்தது. 1835-ல் ஆங்கிலப் பள்ளிகள் அனைத்திற்கும் நிதியுதவி செய்ய ஆங்கில அரசு முடிவு செய்த போது கல்கத்தாவைச் சேர்ந்த 800 இசுலாமியர் அதனை எதிர்த்து மனு ஒன்றை அளித்தனர். கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்யும் முயற்சி என்று இதனைக் குற்றம் சாட்டினர்/ இந்துக்களோ அரசு முயற்சியை வரவேற்றனர். .. இசுலாமியர் ஆங்கிலக் கல்வியில் நாட்டம் செலுத்தவில்லை. இன்றுவரை இந்நிலை தொடர்கிறது. ‘ (என்னுடய குறிப்பு இது பற்றி : இது மிகச் சுவாரஸ்யமான புள்ளி விவரம். பள்ளிகள் மதமாற்றத்திற்குப் பயன்படும் என்ற அச்சத்தை இசுலாமியர்கள் காண்பித்தார்கள் என்பது இன்றைய ஆர் எஸ் எஸ்-காரர்கள் சிறுபான்மையோர் பள்ளிகளைப் பற்றி சொல்கிற புகாரின் அச்சு நகலாக இருப்பது நோக்கத்தக்கது. இதில் எனக்கு அர்த்தமாகாத இன்னொரு விஷயம் என்னவென்றால், யாருடைய மதமாற்றம் பற்றி இஸ்லாமியர்கள் கவலைப் பட்டார்கள் ? அது நிச்சயமாய் இஸ்லாமியர்களின் மத மாற்றமாய் இருக்க வாய்ப்பில்லை. என்றால், இந்துக்களைப் பற்றியதாய்த் தான் இருக்க வேண்டும். எனில், இந்துக்கள் கிறுஸ்தவர்கள் ஆவது பற்றி இஸ்லாமியர்கள் ஏன் கவலைப்படவேண்டும் ? தாம் செய்யும் மதமாற்றம் தடைப்படும் என்பதாலா ? தம்மை விட கிறுஸ்துவ மதமாற்றக் காரர்கள் திறமையாய்ச் செயல்படக்கூடும் என்ற அச்சம் இந்த எதிர்வினைக்குக் காரணமா ? கடைசியாக ஆங்கிலக் கல்வியில் இஸ்லாமியர்கள் நாட்டம் காட்டவில்லை என்று எங்கே மார்க்ஸ் சர்வே எடுத்தார் என்பது தெரியவில்லை. மத்திய தரவர்க்கத்தினரிடையே, இஸ்லாமியராயினும், இந்துக்களாயினும் ஆங்கிலக் கல்வி மோகம் ஒன்றே போல்தான் என்பது என் எண்ணம்.)

இந்துக்கள் ஏன் அதிகாரத்தில் பங்கு பெற்றார்கள் ஏன் இந்து மதச் சீர்திருத்தத்தை வலியுறுத்தினர் என்பதற்கு மார்க்ஸ் கூறும் காரணங்கள், மார்க்ஸின் வக்கிர மன நிலையைப் புரிந்து கொள்ள உதவும். ‘புதிய மாற்றங்களால் இந்துச் சமூகப் படிநிலை அமைப்பில் எந்தச் சிதைவும் ஏற்படாமல் காப்பது . ‘ என்பது மார்க்ஸ் சொல்வது. இந்த நூறு வருடங்களில் இந்துச் சமூகப் படிநிலை அப்படியே இருந்து வந்திருக்கிறதா என்று இதய பூர்வமாய் அவர் சொல்லட்டும்.

தொடர்ந்த மார்க்ஸின் வார்த்தைகளைப் பார்ப்போம்.

‘ இதன் அடிப்படையிலான செயற்பாடுகளில் ஒன்று மத்தியதரவர்க்கத்திற்கு ஏற்ற இந்து மனைவியரை உருவாக்குவது. இந்த நோக்கில் பெண்கல்வி பற்றிப் பேசினர். விதவைகளின் எண்ணிக்கை அதிகமானால் உயர்சாதிப் பெண்டிர் மத்தியில் விபசாரத்திற்கு வழி வகுக்கும், இது குடும்ப அமைப்பைக் கெடுக்கும் என்கிற நோக்கில் விதவை மறுமணம், இளமைத் திருமணத் தடை முதலியவற்றை உயர்சாதி இந்துச் சீர்திருத்தவாதிகள் முன்வைத்தனர். ‘

நான் இது இட்டுக்கட்டிச் சொன்னதில்லை. நிஜமாகவே மார்க்ஸ் இதைச் சொல்கிறார். அதாவது இந்து உயர்சாதி ஆண்கள் விதவைத் திருமணத்ட்தை வலியுறுத்திச் சொல்வதற்குக் காரணம் , தம்முடைய குடும்பப் பெண்கள் விதவையானால் விபசாரிகள் ஆகிவிடுவார்கள். அவர்களை விபச்சாரியாகாமல் தடுக்க வேண்டுமென்றால் அவர்களை மறுமணம் செய்ய ஊக்குவிக்கவும் வேண்டும். இந்தக் கருத்தை தெரிவித்தவர்கள் யார் என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறாரா என்று தேடிப் பார்த்தேன். எங்குமே அவர் இது பற்றிக் குறிப்பிடவில்லை. இந்த மாதிரி ஒரு வெறுப்புப் பார்வையில் இஷ்டத்துக்கும் இட்டுக்கட்டி இவர் சொல்கிற இடங்கள் அனேகம். இதில் இது ஒரு உதாரணம் தான். ஆயிரக்கணக்கான வருடங்கள் மேல்சாதி விதவைகள் விபச்சாரிகள் ஆகிக்கொண்டே இருந்தார்களா ? இதற்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா ?

இதன் மறுதலை எவ்வளவு ஆபத்தான கருதுகோளுக்கு இட்டுச் செல்கிறது என்பதை இவர் உணர்ந்த மாதிரி தெரியவில்லை. விதவைத் திருமணத்தை எதிர்த்தவர்கள் தம்முடைய குடும்பத்துப் பெண்கள் விபசாரியானால் பரவாயில்லை என்று கருதினார்களா ? இந்து உயர்சாதி மக்களின் சீர்திருத்தம் அந்தரங்க சுத்தியில்லாதது, உள்நோக்கங்கள் உள்ளது என்று இவர் கூறுவதற்காக இப்படி இட்டுக் கட்டிச் சொல்லும் வாசகங்கள் , மார்க்ஸின் பெண்வெறுப்பைச் தான் காட்டுகின்றன.

இத்துடன் சேர்த்து பெண்கல்வியையும் ஏன் அவர் குறிப்பிடவேண்டும் என்பதும் எனக்குப் புரியவில்லை. மத்தியதரவர்க்கத்திற்கு ஏற்ற பெண்களை உருவாக்குவதுதான் பாரதியார் , ஜோதிபா ஃபுலே ஆகியோரின் நோக்கமா ?

இதற்குப் பின் மார்க்ஸ் இந்துத்துவத்தின் வளர்ச்சியில் முதன்மையாய் பிரம்ம சமாஜம் தோற்றுவித்த ராஜாராம் மோகன் ராயினைக் காண்கிறார். சதி என்ற கொடிய பழக்கத்தை ஒழிக்கப் போராடியவர். பிரம்ம சமாஜம் ஐரோப்பியப் பார்வையில் இந்து மதத்தைப் புனரமைக்க முயன்றது. இந்துமதம் என்பதை , கிறுஸ்தவத் திருச்சபை மாதிரி ஆக்க முயன்ற இந்த முயற்சி அவ்வளவாய் வெற்றி பெறவில்லை. காரனம், பன்முகத்தன்மை இந்துக்களிடம் ஊறிப்போன ஒன்று. ஐரோப்பிய மதங்கள் உருவான வரலாறும், இந்துமதம் உருவான வரலாறும் நேர் எதிரிடையானவை. ஒற்றை அடையாளத்திலிருந்து உருவாகியவை ஐரோப்பிய மதங்கள் இந்து மதம் வேறு வேறுஅடையாளங்களின் சங்கமம். ஒற்றை அடையாளம் என்பதே இந்து மதத்தவரின் ஆழ்மனதில் இடம் காணாத ஒன்று. பிரம்ம சமாஜம் போன்றவை வேரூன்றாததற்கும் இதுவே காரணம்.

மார்க்ஸின் பிரசினை என்னவென்றால், ஒரு அத்தியாயத்தில் ஒற்றை அடையாளம் இருந்ததில்லை என்பதால் ‘இந்து ‘ என்ற சொல் குழப்பமான அர்த்தம் கொண்டிருப்பதால் சொல்கிறார். வேறு அத்தியாயத்தில் ஒற்றை அடையாளம் கட்டுவிக்க முயன்றவர்கள் ‘இந்துத்துவ ‘வாதிகள் என்கிறார். மார்க்சிற்கு அதுவும் சரியில்லை. இதுவும் சரியில்லை. இன்றைய அர்த்தத்தில், எந்த விதத்திலும் ஆர் எஸ் எஸ்-உடன் ராஜாராம் மோகன் ராயை இணைக்க முடியாது எனினும் அதை இணைக்க முயல்கிறார் மார்க்ஸ். இந்து அடையாளமே இந்துத்துவ அடையாளம் என்று காண்பிக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார். அதனால், பிரக்ஞை பூர்வமாகவே இந்தக் கோட்பாட்டிற்கு சங்கடம் விளைவிக்கும் எல்லோரையும் ஒன்று ஏதோ ஒரு விதமாய் இந்துத்துவ ஆட்கள் தான் என்று நிறுவ முயல்வது, அதுவும் முடியவில்லை என்றால் அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல் விடுவது – இது தான் அவருடைய உத்தி. ராஜாராம் மோகன் ராய் ஐரோப்பியப் படுத்தப் பட்ட நிலையில் இந்துமதம் – சாதியத்திற்கு அதில் இடமில்லை. ஆனால் ஆர் எஸ் எஸ் வர்ணாசிரமத்தைப் பாதுகாக்கிறது என்று சொல்லும் மார்க்ஸ், எப்படி இந்தத் தொடர்பை நிறுவமுடியும் ? ஆனால் தர்க்கம் பற்றித் தான் மார்க்ஸிற்குக் கவலையே இல்லையே. இன்றைய ஆர் எஸ் எஸ்-ஐ எதிர்ப்பதற்காக இந்து என்ற பெயரில் செயல்பட்ட எல்லோரையும் வரிசையாக ஒரே நேர்கோட்டில் நிற்கவைப்பது தான் அவர் பாணி.

இன்றைய ஆர் எஸ் எஸ்-இன் முதல் பிதாமகர் ராஜாராம் மோகன் ராய் என்றால் ஆர் எஸ் எஸ் காரர்கள் மகிழவே செய்வார்கள். இன்னும் கொஞ்சம் முன்னால் போய் மார்க்ஸ் சங்கரரிடமும் போகலாம். வியாசரிடம் போனாலும் தப்பில்லை.

(தொடரலாம்)

Series Navigation

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி -2

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

மஞ்சுளா நவநீதன்


(இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு : அ மார்க்ஸ் வெளியீடு : அடையாளம், எச் 15/193, 2-வது தளம் , கருப்பூர் சாலை, புத்தா நத்தம் 621310)

இரண்டாவது அத்தியாயம் : இந்துத்துவம் ஒரு கோட்பாட்டுப் புரிதல்

இந்தத் தொகுப்பிலேயே மிக முக்கியமான கட்டுரை இது. அடையாளங்கள் எபப்டிக் கட்டுவிக்கப் படுகின்றன என்பதையும், யார் நலனுக்காகக் கட்டப்படுகின்றன என்பதையும் பற்றி மிகத் தீவிரமான சொல்லாடலை நிகழ்த்தியுள்ளார் மார்க்ஸ். யார் தமிழன் , யார் இந்து என்பது பற்றிய அடையாளங்கள் எப்படி காலத்துக்குக் காலம், அப்போதைய அரசியல் நிலவரங்களுடன் இயைந்து உருவாக்கப் படுகிறது என்பதையும் குறிக்கிறார்.

இந்து என்ற உணர்வு மிகச் சமீபத்தில் அரசியல் ரீதியாய்க் கட்டமைக்கப் பட்ட ஒன்று என்றால் அதன் காரணங்கள் என்ன ? இந்துக்களும் , முஸ்லீம்களும் தனித்தனி தேசங்கள் என்று குரல் எப்படி ஏன் எழுந்தது ? பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று ஒரு புறம் சொன்னாலும், வங்கப் பிரிவினையின் போது, முஸ்லீம் மேல் வர்க்கத்தினர் முழுக்க பிரிவினைக்கு ஆதரவாக நின்றது ஏன் ? இந்துக்கள் என்ற அடையாளம் கட்டுவிக்க இஸ்லாமிய அரசியலின் தனித்துவப் போக்கு எப்படி மிக முக்கியமான பங்கு வகித்தது என்பதை மிகச் சாமர்த்தியமாய் மறைத்து விடுகிறார் மார்க்ஸ்.

‘ஏதேனும் ஒரு நம்பிக்கை அல்லது அடையாளத்தினடியாக தங்களை இனம் கண்டுகொள்ளும் ஒரு சமூகப் பிரிவைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் சமூக/ பொருளாதார/ அரசியல் நலன்களும் ஒரே மாதிரியானவை என்கிற அடிப்படையில் அரசியல் இயக்கம் பெறும் நடவடிக்கையை வகுப்பு வாதம் எனலாம். இந்தியத் துணைக் கண்டத்தில் மதம் என்பது வகுப்பு வாதத்தின் அடையாளமாகப் பயன் படுத்தப் படுகிறது ‘ என்று மார்க்ஸ் முதலிலேயே சொல்லி விடுகிறார். இதிலேயே சிக்கல் தொடங்கி விடுகிறது. இந்த வரையறையை மேற்கொண்டு பார்த்தால் தொழிற்சங்கங்களும், வணிகர் சங்கங்களும், பா ம க , புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு , பத்திரிகையாளர் சங்கம் எல்லாமே இந்த வரையறைக்குள் அடங்கும் இல்லையா ? முஸ்லீம் லீக், பிராமணர்கள் சங்கம், நாயுடு மகாஜனச் சங்கம் எல்லாமே வகுப்புவாத அமைப்புகளா ? இருக்கலாம், அப்படி இருப்பது தவறு என்றும் சொல்ல முடியாது. அவரவர் அடையாளத்தை அவரவர் சுதந்திரத் தேர்வின் வயப்பட்டுக் கட்டுவிக்கிற உரிமை ஜனநாயக நாட்டில் எல்லாக் குடிமக்களுக்கும் உண்டு. அவரவர் அடையாளங்களைக் கட்டுவிக்கும் போது, எதிரி என்று ஒருகுழுவை அல்லது கருத்தியலைக் கட்டி எழுப்பும் போது தான் சிக்கல் ஆரம்பாமாகிறது இதைச் சரியாகவே சொல்கிறார் மார்க்ஸ்.

வகுப்புவாதம் – Communalism என்பது பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்த வார்த்தை. Community என்பதை மதம், சாதி , பிரிவு இவற்றை எல்லாவற்றையும் குறிக்கிற வார்த்தையாய்ப் பயன்படுத்துகிறார்கள். மதக் கலவரம், சாதிக்கலவரம் என்பவை தான் இந்தியாவில் பெரும்பான்மையும். இவற்றை மதக் கலவரம், சாதிக் கலவரம் என்று குறிப்பிட்டால், மீண்டும் இப்படிப் பட்ட கலவரங்கள் மேலும் பரவ வழி வகுக்கும் என்ற நல்லெண்ணத்தில் ‘ஒரு குறிப்பிட்ட வகுப்பார், இன்னொரு குறிப்பிட்ட வகுப்பாரைத் தாக்கினர் ‘ என்பதாய்ச் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இது செய்தி என்ற அளவில் சரியில்லை என்றாலும், சமூகத்தில் சமநிலை விளங்கவும், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதைத் தவிர்க்கவும் பயன் படுகிறது என்ற அளவில் சரியான செயல் தான். ஆனால் இந்த வார்த்தையை மார்க்ஸினது போன்ற ஆய்வுப் புத்தகங்களில் பயன் படுத்தும்போது சிக்கல் எழுகிறது.

அடையாளங்கள் இயற்கையானவை அல்ல . அவை செயற்கையானவை என்பது உண்மைதான். இந்து அடையாளம் கடந்த இரு நூற்றாண்டுகளில் அமைக்கப் பட்ட ஒன்று தான் எனவும், யாரை இந்து என்று அடையாளப் படுத்துவது என்பதில் குழப்பம் இருந்து வருகிறது என்று பல ஆதாரங்களைக் காட்டி நிறுவுகிறார். ஆதாரங்கள் உண்மையானவை. ஆனால் இதன் மூலம் அவர் என்ன நிறுவ விரும்புகிறார், அவர் சொல்லும் செய்தி என்ன என்பது சரியாய் விளங்கவில்லை. கடந்த இரண்டு -மூன்று நூற்றாண்டுகளில் தான் இந்து என்ற அடையாளம் கட்டப் பட்டது என்பதால், ஈராயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கிறுஸ்தவ மதத்தைக் காட்டிலும் பதினான்கு நூற்றாண்டுகள் வரலாறு கொண்ட இஸ்லாமிய அடையாளத்தைக் காட்டிலும் இந்து என்ற அடையாளம் பழமை கொண்டதல்ல என்பதல்ல என்பதால் இந்து என்ற மதம் இல்லை என்று சொல்கிறாரா ? இந்து மத அடையாளம் இதனாலேயே இழிவானது என்று சொல்கிறாரா ? இந்து மதத்தின் மீது மிகத் தீவிரமான விமர்சனங்களை வைத்த அம்பேத்கர் கூடத் தம் இறுதிக் காலத்தில் தான் புத்த மதம் நோக்கித் திரும்பினார். அவருக்கு செமிட்டிக் மதங்களின் மீது ஈர்ப்பு இருந்ததில்லை என்ற விஷயத்தையும் இங்கு பதிவு செய்ய வேண்டும். இந்து சமூகம் மட்டுமல்ல, இஸ்லாம் கிறுஸ்தவ சமூகங்கள் கூடக் கற்பிதம் செய்யப் பட்ட சமூகம் தான் என்று மார்க்ஸ் சொல்கிறார். எனில் இந்து மத அடையாளம் கட்டப்படுவதைப் பற்றி மட்டும் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் ? ‘இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தாழ்த்தப் பட்டோரை யாரும் இந்து என ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் ‘ என்று ஓமெயிலி என்ற ஒருவரை இவர் மேற்கோள் காட்டுகிறார். தாழ்த்தப் பட்டோர் இந்துக்கள் அல்ல என்றால் அவர்கள் யார் ? உண்மையில் இந்தக் குழப்பம் பஞ்சமர்கள் என்று அழைக்கப் பட்ட நால் வருணத்திற்கும் வெளியே இருந்தவர்கள் பற்றித் தான் இருந்தது. இவர்கள் சமூகத்திற்கு அன்னியராய்க் காணப்பட்டார்கள். சமூகத்திற்கு அன்னியர் என்பது , கிராம சமுதாயத்திற்கு அன்னியர் என்பது தான். நம்பிக்கைக் கூட்டுக் கருத்துருவத்திற்கு வெளியே என்று இதன் பொருள் அல்ல. வேறு வேறு சாதியினரின் வழிபாட்டு முறைகள் வேறுபட்டனவே தவிர, முரண்பட்டவை அல்லை. அவற்றிற்கு அவற்றிற்கு உரிய இடம் இருந்து வந்தது. சாதீயத்தின் மிகக் கொடூரமான செயல்பாடுகள் இருந்து வந்த அதே நேரத்தில், வழிபாட்டு முறைகள் வேறு வேறு விதமாய் பின்பற்றவும் செய்தனர்.

மக்களை ஓர் அடையாளத்தின் கீழ் திரட்டுகிற ஓர் இயக்கம் எல்லா மதங்களுக்குள்ளும் நடந்து வந்திருக்கிறது. இது இந்துத்துவ சக்திகளின் பிரத்தியேகமான செயல்பாடு அல்ல. இஸ்லாம் மதத்திற்குள்ளும் சூனி பிரிவினர் , ஷியா பிரிவினர் இருவரும் உண்மையான இஸ்லாமியர்கள் தாமே என்று உரிமை கொண்டாடி ஒருவரை ஒருவர் தாக்கியும் கலவரங்கள் புரிந்தும் வந்திருக்கின்றனர். இவ்விரு பிரிவினருக்கும் கூட பொதுச் சடங்குகள் உண்டு ஆனாலும் தனியாகத்தான் செய்கிறார்கள். அவர்கள் கல்லறைகள் கூட தனித்தனி தான். அதனால் மார்க்ஸ் அவர்களின் ஒரு பிரிவினருடன் உடன்பட்டு மற்ற பிரிவினர் முஸ்லீம்கள் இல்லை என்று சொல்வாரா ? பாகிஸ்தானில் உள்ள அகமதியா பிரிவினர் தம்மை முஸ்லீம்கள் என்றூ அழைத்துக் கொள்வது தெய்வ நிந்தனைக் குற்றத்திற்கு சமம் , தண்டனைக்குரிய குற்றம் என்று ஜியா உல் ஹக் காலத்தில் இஸ்லாமியச் சட்டங்களின் கீழ் வரையறை செய்யப்பட்டது. ஆனால் இந்துத்துவ சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்களை இந்துக்கள் என்று அடையாளம் கண்டு அவர்களை ஒருங்கிணைக்கும் செயல் ஏன் கண்டனத்திற்கு உள்ளாக வேண்டும் ? இந்தச் செயல்பாட்டில் அரசியல் நோக்கம் இருக்கலாம். இருந்தால் என்ன ?

அம்பேத்கரை மேற்கோள் காட்டுகிறார் மார்க்ஸ். ‘சாதீய அமைப்பு என்பது பொதுச் செயற்பாடுகளையும் ஒருங்கிணைக்கப் பட்ட வாழ்வையும் தடுத்துவிடுகிறது. இந்து மதச்சடங்குகளில் பொதுப் பங்கேற்பு கூடாது… எனவே சடங்குகள் ஒரே மாதிரியாக இருந்த போதிலும் அவர்கள் தனித்தனியானவர்களே ‘ என்று வலியுறுத்தும் அம்பேத்கர் கருத்தைத் தொடர்ந்து சிந்தித்தால், இந்து மதம் ஒரு பொதுமைத் தன்மையைக் கட்டினால் ஒழிய இந்து மத உணர்வு பொய் என்பதாகத் தான். அப்படிப்பட்ட ஒருமை உணர்வைக் கட்டியெழுப்ப முயற்சிகள் நடந்தால், சாதி ஒழிப்பும் அதன் மையத்தில் என்றால் அதில் தவறென்ன இருக்க முடியும் ? ‘கடந்த ஒரு நூற்றாண்டு காலத் திட்டமிட்ட அரசியற்செயல்பாடுகளின் விளைவாக இந்துமத உணர்வு என்பது இயற்கையானது தான் என்கிற புனைவு ஓர்ளவு மக்களின் பொதுப் புத்தியில் பதிய வைக்கப் பட்டுவிட்டது. ஆனாலும் இந்து என்கிற உணர்வு இந்துப் படிநிலை அமைப்பில் மேலிருந்து கீழாக இறங்கிவர வர இந்து என்கிற உணர்வு தாழ்த்தப் பட்டவர்கள் மத்தியில் மிக மிகக் குறைவாக உள்ளதும் கவனிக்கத் தக்கது. ‘ என்பது மார்க்ஸின் கூற்று. இது பற்றி என்ன ஆய்வு இவர் மேற்கொண்டார் ? எத்தனை தாழ்த்தப் பட்ட மக்களை அவர் பேட்டி கண்டு தொகுத்தார் ?

உண்மையில் சொல்லப் போனால் இந்து – முஸ்லீம் முரண் முஸ்லிம் படையெடுப்புக்குப் பின்பு தான் உருவானது. தம்மை இந்து என்று உணராவிட்டாலும் கூட , தம்முடைய பொதுத்தன்மை பற்றிய உணர்வு இந்திய மக்களுக்கு இருந்தது. கிறுஸ்தவர்கள், முஸ்லீம்கள், பார்ஸிகள் இந்தியாவில் வியாபார நிமித்தமாகவும், படையெடுப்பின் மூலமாகவும் வந்து சேர்ந்த போது தான் மதம் என்கிற கருத்தாக்கத்தின் ஐரோப்பிய விளக்கத்துடன் வந்து சேர்ந்தார்கள். தாம் வேறுபட்டவர்கள் , தம்முடைய தத்துவப் பின்னணி வேறுபட்டது என்பதை அழுத்திச் சொன்னார்கள். கிறுஸ்தவ பாதிரிமார்கள், இந்து பிராமண மற்றும் சைவப் பண்டிதர்களுடன் தத்துவ உரையாடலில் ஈடு பட்டதிற்கும் சான்றுகள் உள்ளன. ஆனால் முஸ்லீம் தத்துவ வாதிகள் இப்படி இந்துத் தத்துவவாதிகளுடன் ஈடுபட்டதற்குச் சான்றுகள் இல்லை. எதிர் விவாதத்திற்குத் தயாராய் இல்லாத, மூடிய மனம் கொண்ட, உன்னைக் காட்டிலும் நான் புனிதமானவனாக்கும்(holier than thou attittude) என்ற உணர்வில் செயல்பட்டனர். அது தான் முதன் முதலில் முஸ்லீம் , கிறுஸ்தவரல்லாதாரின் ஒருங்கிணைப்பைத் துண்டியது என்று சொல்லலாம். அதன் பிறகு பிரிட்டிஷாரின் ஆவணப் படுத்துதல் இதைத் தீவிரப் படுத்தியது.

‘மற்றவர்களை ‘ அடையாளப் படுத்தித் தம்மை உயர்ந்தவர்களாய்க் காட்டிக் கொள்ளும் ஒரு போக்கு ஐரோப்பிய வரலாற்றின் ஒர் அம்சம். ‘பாகன்கள் ‘ (pagans) , காஃபிர்கள்,விக்கிரக வழிபாட்டாளர்கள் (idolators) என்று மற்றவர்களை வரையறை செய்யும் ஒரு போக்கு இருந்து வருகிறது இந்திய மரபில் ‘மற்றவர்களை ‘ அடையாளப் படுத்துவது ‘மிலேச்சர் ‘ -வெளிநாட்டார் என்ற பொருள் கொண்ட வார்த்தை ஒன்றால் தாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வழிபாட்டு முறைமைகளினால் மற்றவர்களை இழிவு படுத்தும் போக்கு இல்லை.

விசுவ இந்து பரிஷத்தின் முக்கிய தலைவர்களி ஒருவரான ஆனந்த் சாகர் பாண்ட்யாவை இவர் மேற்கோள் காட்டுகிறார். மேற்கோள் இது ‘தங்களது வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் இந்துத்துவத்தைப் பின்னணியாய்க் கொண்டோர் எல்லோரும் இன்று மானவதர்மத்திற்கு வந்துள்ள பேரழிவைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கிறார்களே ‘. இந்த மெற்கோளுக்கு மார்க்ஸ் தரும் விளக்கம் இது. ‘மானவ தர்மம் என்பது மனு தர்மம் தான். ‘ இது ஒரு பெரும் புரட்டு. மானவ தர்மம் என்றால் மானிட தர்மம் என்று பொருளே தவிர , மனு தர்மம் என்று பொருளல்ல.

மார்க்ஸ் சொல்வது : ‘இந்தச் சக்திகளின் இந்துத்துவச் சொல்லாடல் மக்களின் பொதுப் புத்தியில் படிந்து மேலாண்மைக் கருத்தியலாக மாறும் பட்சத்தில் ,

* வருணாசிரமம் புதிய வடிவில் நிலை நிறுத்தப் படும். (வருணாசிரமம் மரணப் படுக்கைக்குப் போய் வெகு நாளாயிற்று. பெரியார், அம்பேத்கர் போன்றோர் ஒரு புறமும், விவேகானந்தர் போன்றோர் இன்னொரு புறமும் வர்ணாசிரம தர்மத்தைக் கழற்றி எறியச் செய்து விட்டனர். ஆனால் மார்க்ஸ் போன்றவர்கள் வர்ணாசிரமப் பூச்சாண்டியை மட்டும் நிறுத்த மாட்டார்கள்.)

* சிறுபான்மையினர் இந்துமயமாக்கல் என்ற பெயரில் அவர்களின் கலாச்சாரங்கள் அழித்தொழிக்கப் படும். தலித் மற்றும் பல்வேறு குழுக்களின் பன்மை கலாச்சாரக் கூறுகள் தீய்க்கப் பட்டு, ஒற்றைக் கலாசார மேலாண்மை நிறுவப்படும். (இதன் முரண்பாடு அவருக்கு உறைக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. தலித் மக்களின் பன்மைக் கலாச்சாரக் கூறுகள் மீது மார்க்ஸின் அக்கறை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. இதே புத்தகத்தின் வேறு பக்கங்களில் தலித் மக்கள் இஸ்லாம் மதமாற்றம் பெற்று உய்வு பெற வேண்டும் , இந்து மதத்தின் இழிவிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். மதமாற்றம் பெற்றால்,அவர்கள் முஸ்லீம்கள் ஆகிவிட்டால் மட்டும், தலித் பன்மைக் கலாசாரக் கூறுகள் காப்பாற்றப் பட்டு விடுமா ? அவர்கள் கலாசாரக் கூறுகள் காப்பாற்றப்படவேண்டும் என்ற அக்கறை உண்மையில் இருந்தால் இந்து அடையாளத்தின் கீழ் தானே அவர்கள் இருக்க வேண்டும் ? )

* வரலாற்றுப் போக்கில் அடைந்துள்ள பெண்ணுரிமைகள் ஒடுக்கப்படும். ( இது பற்றி நான் சொல்ல ஏதுமில்லை. இதன் அபத்தம் என்னவென்று ,பெண்ணுரிமைகளை இந்துத்துவ சக்திகள் மறுக்கின்றனவா என்பதை நடைமுறை யதார்த்தத்தினைப் பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள்.)

* தகுதி , திறமை என்ற பெயரில் இட ஒதுக்கீடுகள், சலுகைகள், மான்யங்கள் , ஒடுக்கப் பட்டோருக்கான கல்வி, மருத்துவ வசதிகள் நீக்கப் படும். (இப்படி ஏது செயல் திட்டம் இருப்பதாய் எங்குமே காணக் கிடைக்கவில்லை.)

* சுதந்திரமான போட்டி என்கிற வகையில் தொழில் துறையில் எஞ்சியுள்ள கொஞ்ச நஞ்ச அரசுக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு பெருந்தொழில் நிறுவனங்கள் மட்டுமே நிலை நிறுத்தப் படும். (இது காங்கிரஸின் ராவ் செயல் திட்டத்தின் தொடர்ச்சி. இந்த்துத்துவ சக்திகளிடையே இது பற்றி முரண்பாடுகள் நிலவுகின்றன. சுதேசி என்ற பெயரில் உள்ளூர்த் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது ஒரு குழுவினரின் நிலைபாடு.)

* கட்டுப்பாடு, ஒழுங்கு என்கிற பெயரில் சனநாயக உரிமைகளும், அரசியல் நிறுவனங்களும் முடக்கப்படும். (அரசு சக்திகள் தமக்குப் பிடிக்காத அமைப்புகள் மீது பாய்வது என்பது எல்லா சக்திகளுக்கும் பொதுவான ஒர் அம்சம்.)

அடைப்புக் குறிகளுக்குள் என் இடையீட்டைத் தெரிவித்துள்ளேன். மார்க்ஸின் வாக்குகள் வெளியே. என் விமர்சனம் உள்ளே.

இந்துமதம் என்பது சில நம்பிக்கைகளின் தொகுப்பு. வர்ணாசிரம தர்மம், மறுபிறவியில் நம்பிக்கை என்பது இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு என்று கொள்ளலாம். செமிட்டிக் மதங்களிலிருந்து இந்து மதத்தினை மிகச் சிறப்பாக வேறுபடுத்திக் காண்பிப்பது மறுபிறவியில் நம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும். இந்த மையக் கருத்தில் தான் வர்ணாசிரம தர்மத்தின் வேர்கள் உள்ளன. வர்ணாசிரம தர்மத்தின் இறுகிப்போன விளக்கங்கள் இன்று பலவாறாக உடைபட்ட பின்பும், இந்தப் பிறவியில் நம் செயல்களுக்குத் தக்க அடுத்த பிறவியில் இன்ப துன்பங்கள் விளையும் என்ற நம்பிக்கை இந்திய மக்களின் ஆழ்மனதில் வேரோடிப் போன ஒரு கருத்து. இந்தக் கருத்து ஆழ்மனதில் இருக்கும் வரையில் இந்த மக்களை ஒருங்கிணைக்கிற ஓர் அடையாளம் இருக்கத் தான் செய்தது. இருக்கும். இந்து என்ற பெயரில் இந்த நம்பிக்கை கொண்ட ஜனக் கூட்டத்தை அழைப்பது வேண்டுமானால் ஓரிரு நூற்றாண்டுகளின் முந்திய பழக்கமாய் இருக்கலாம். ஆனால் இன்று இந்து என்று அடையாளப் படுத்தப் படும் மானிடக் குழுவின் அடிப்படை அடையாளங்கள் மிக நீண்டகாலத் தொடர்ச்சி உள்ளவையே.

‘ வகுப்பு என்பது மேலிருந்து வரையறுக்கப் படுகிறது ‘ என்ற மார்க்ஸின் வார்த்தை எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தும் . இந்துத்துவ சக்திகளுக்கு மாத்திரம் பிரத்தியேகமானவை அல்ல. ‘ஒழுங்கு – நிலைத்தன்மை ஆகியவற்றை இந்துத்துவம்வலியுறுத்துகிறது ‘ என்றால் இஸ்லாம், கிறுஸ்தவம் போன்ற மதங்கள் ஒழுங்கின்மையையும், நிலையற்ற தன்மையையும் வலியுறுத்துகின்றனவா ? இது என்ன விமர்சனம் ?

(ஜீவன் கந்தையா குறுப்பிட்ட விபரத்தவறுக்கு நன்றி. விபரப் பிழையைச் சாராத , என்னுடைய விமர்சனம் அப்படியே இருக்கிறது.தமக்கு ஒப்புக்கொள்ள செளகரியமற்ற கருத்துகளை நேருக்கு நேர் சந்தித்து விமர்சனங்களை எதிர் கொள்ளத் திராணியற்றவர்கள் நடுவில், ஜீவன் கந்தையா கருத்துக் கூறியது பாராட்டுதலுக்கு உரியது. நன்றி.)

(தொடரலாம்)

Series Navigation

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

மஞ்சுளா நவநீதன்


(இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு : அ மார்க்ஸ் வெளியீடு : அடையாளம், எச் 15/193, 2-வது தளம் , கருப்பூர் சாலை, புத்தா நத்தம் 621310)

முதலில் சொல்ல வேண்டியது : இந்தப் புத்தகத்தின் தலைப்புப் பற்றி. ‘இந்துத்துவம் – ஒரு பன் முக ஆய்வு ‘ என்ற பெயரே தப்பு. இதை ‘ஆர் எஸ் எஸ் – பா ஜ க : ஒருமுக ஆய்வு ‘ என்று பெயரிட்டால் மிகச் சரியாய் இருந்திருக்கும். ஏனெனில் இந்துத்துவம் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் இந்த சக்திகள் இந்து மதம் மற்றும் கலாசாரத்தின் ஒரே பிரதிநிதிகளாய்த் தம்மை அடையாளப் படுத்திக் கொள்ள முயல்வதன் மூலம் ஓர் ஒற்றைப் பரிமாணத்தில் இந்து சமூகத்தினைக் கட்டுவிக்கவும், பிரதிநிதிப் படுத்தவும் முயல்கிறார்கள் அவர்களுடைய அரசியல் ஆதாயங்களுக்கு இப்படித் தம்மைப் பிரகடனப் படுத்துவது பயன் படலாம். ஆனால் அ மார்க்ஸ் போன்றவர்கள் இந்துத்துவத்தின் ஒற்றை பிரதிநிதிகள் இவர்கள் என்ற கருத்தாக்கத்தை நிராகரித்தல்லவா இருக்க வேண்டும் ? இல்லை, அ மார்க்ஸ் போன்றவர்கள் இந்த நிராகரிப்பை வழங்குவதன் மூலம் , இந்துத்துவத்தின் பன்முகத் தன்மையை அங்கீகரிக்க மாட்டார்கள். இந்துத்துவ சக்திகள் தான் இந்து மற்றும் இந்தியக் கலாசாரத்தின் ஒரே பிரதிநிதிகள் என்று சுவீகரிப்பதன் மூலம் இவர்களின் ஏச்சு ஒரு முனைப்பட்டு விடுவதும், பா ஜ கவைத் தாக்குவது இந்து மதத்தைத் தாக்குவது என்பதாக அர்த்தப் படுவதும் , இவர் போன்றவர்களின் பரந்து பட்ட நோக்கத்தை நிறைவேற்ற உதவும். இந்து மதம் தான் சாதீயம், இந்து மதம் தான் தலித் எதிர்ப்பு, இந்து மதத்திற்கு எதிர்ப்புத் தான் உய்விற்கு ஒரே வழி என்ற தாரக மந்திரத்தை மீண்டும் மீண்டும் லட்சார்ச்சனை செய்வதில் பா ஜ கவை எதிர்ப்பது என்பது இந்து மதத்தை எதிர்ப்பதற்குச் சமானம் என்பது நிறுவப் பட்டு விடும்.

உதாரணமாக திராவிடர்கள் என்ற பதத்திற்கும், திராவிட இயக்கத்தினர் என்ற பதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. திராவிடர்கள் எல்லோரும் திராவிடர் இயக்கத்தினராய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லீம்கள் எல்லாம் முஸ்லீம் லீகினராய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லீம்களின் வரலாறு என்று முஸ்லீம் லீகின் வரலாற்றைச் சுட்டுவது எவ்வளவு நேர்மையற்ற செயலோ, திராவிடர்களின் வரலாறு என்று திராவிடர் இயக்கத்தின் வரலாற்றை எழுதுவது எவ்வளவு நேர்மையற்ற செயலோ , அதே போல் தான் இந்துக்களையெல்லாம் இந்துத்துவ சக்திகளின் உள்ளே இருப்பவர்களாய்ப் பார்ப்பது.

இதற்கு ஈடு சொல்லும் படியாக நான் கோவை குண்டு வெடிப்புக் காரர்களையும், ஒசாமவின் ஜிகாத் கும்பலையும் மையப் படுத்தி ‘இஸ்லாம் : ஒரு பன்முக ஆய்வு ‘ என்று எழுதித் தீர்க்கலாம். உடனே மார்க்ஸ் போன்றவர்கள் இது இஸ்லாம் இல்லை, அஸ்கர் அலி இஞ்சினீயர் இருக்கிறார், ஷபனா ஆஸ்மி இருக்கிறார், இஸ்லாமியர்கள் ஏழைகள், சாதாரண மக்கள் தம் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போரிடுகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்து விடுவார்கள் . ஆனால் இந்து மதமும் , கலாசாரமும் பற்றி மிதவாத சக்திகளைப் பட்டியலிட வேண்டாம் — ஒரே ஒரு உதாரணம் கூடச் சுட்டிக்காட்ட இவருக்கு மனம் வரவில்லை. இது இந்தப் புத்தகத்தில் மட்டும் ஏற்படுகிற விதி விலக்கான செயல் அல்ல. வழமுறையாக இந்து மதத்திலும் , கலாசாரத்திலும் எந்தப் போற்றத்தக்க விஷயமும் இல்லை என்று நிறுவுவதற்கு, இந்த நேர்மையற்ற அணுகுமுறை மார்க்ஸ் போன்றவர்களுக்குப் பயன்படுகிறது.

முதல் அத்தியாயம் : இந்துத்துவம் : கவனத்தில் கொள்ள வேண்டிய சில புள்ளிகள்

இந்த அத்தியாயத்தில் மீண்டும் இந்துத்துவம் என்று சொல்லப் படுவது முன் சொன்னது போலவே, ஆர் எஸ் எஸ் – ஜன சங்கம் – விஸ்வ இந்து பரிஷத்-இன் தோற்றம் வளர்ச்சி தான் பேசப் படுகிறது. விவேகானந்தரோ, காந்தியோ, ராமகிருஷ்ண பரம ஹம்சரோ பேசப் படவில்லை.

‘ஜன நாயகம், மதச் சார்பின்மை என்கிற இரு முழக்கங்களின் மீது இந்துத்துவம் மிகப் பெரிய தாக்குதலை இன்று நிகழ்த்தி வருகிறது ‘ என்று குறிப்பிடுகிறார். மதச் சார்பின்மை மீது இந்துத்துவ சக்திகள் தாக்குதல் நடத்தி வருவது உண்மை தான். ஆனால் ஜன நாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவதில்லை. ஏனென்றால் தாம் அரசியல் சக்தியைப் பற்றும் வரையில் ஜன நாயக ரீதியான மேலோங்கல் தான் தமக்கு ஒரு மதிப்பையும், சமூக இடத்தையும் அளிக்கும் என்று அவை புரிந்து வைத்திருக்கின்றன.

கோல்வால்கர் இந்தியாவை பித்ரு பூமி என்று சொன்னாராம். ‘ இந்துத்துவச் சொல்லாடலுக்கு வசப்பட்ட நமது சுப்பிரமணிய பாரதியும் கூட ‘எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே ‘ தான் இன்பத்தேன் வந்து பாய்வதாக மகிழ்கிறார் ‘ என்று சொல்லிச் செல்கிற மார்க்ஸின் வக்கிரபுத்தியை என்னவென்று சொல்ல ? பாரதி இந்துத்துவவாதி என்றால் யார் இந்துத்துவவாதி இல்லை – மார்க்ஸ் உட்பட ? ஒவ்வொரு கருத்தாக்கத்துக்கும் அதனதன் கால-இடச் சந்தர்ப்பங்களினால் அர்த்தம் மாறுபடும். தந்தையர் நாடு என்பது உண்மையில் தமிழ்நாட்டின் பிரத்தியேக மரபு. தந்தைவழிச் சமூகத்தை வழிவழியாய்க் கொண்டு வந்தவர்கள் தமிழர்கள். இந்தியாவும் கூட பரத கண்டம் என்று தானே வழங்கப்பட்டது. சொந்த நாட்டை வந்தே மாதரம் என்று வணங்கிய ஒருவர் , தந்தையர் நாடென்று கூறியதால் அவர் இந்துத்துவச் சொல்லாடலுக்கு வசப் பட்டார் – நூற்றாண்டு இறுதியில் வரப்போகிற சொல்லாடலுக்கு அன்றே வசப்பட்ட பாரதியின் மேதையைப் புகழ்வதா , பாரதியின் இந்துத்துவச் சார்பை சரியாய் இனங்கண்ட மார்க்ஸின் மேதமையைப் புகழ்வதா ?

மார்க்ஸ் இந்த இடத்தில் ஒரு முக்கியமான, ஆனால் சுலபமாக மறக்கப் பட்டு விட்ட ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். ‘சிறுபான்மையினர் தமது அடையாளங்களையும் , நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் அழித்துக் கொண்டு பெரும்பான்மைக்குள் அடக்கமாகி விட வேண்டும் எனச் சொல்வது ஜன நாயகமல்ல ‘ என்று மிகத் தெளிவாய்க் கூறுகிறார். ஆனால் இஸ்லாமிய நாடுகளில் மிக மோசமான மனித உரிமை மீறல்களும், பெரும்பான்மைவாதமும் செயல் படுவது பற்றி மூச்சு விடுவதில்லை. இது இந்தியாவில் உள்ள ஆர் எஸ் எஸ் பற்றிய புத்தகம் தான் என்று சமாதானம் சொல்லி விட முடியாது. உலக அரங்கில் நடக்கும் பாலஸ்தீன் போன்ற பிரசினைகளுக்கு இந்தியாவில் எதிர்வினையாற்றுவது சரிதான் என்று நிலைபாடு கொண்டவராயிற்றே மார்க்ஸ். அதே போல் பெரும்பான்மைவாதத்தின் ஆபத்தை எதிர்க்கும்போது , பெரும்பான்மைவாதத்தின் உச்ச கட்டமான தேசிய விடுதலை இயக்கம் என்ற பெயரில் நடக்கும் கேலிக் கூத்துகளையும், கருத்துருவச் சப்பைக் கட்டுகளையும் , வன்முறையின் நியாயப் படுத்தலையும் அல்லவா அவர் விமர்சித்திருக்க வேண்டும் ? காஷ்மீர் பிரிவினைக் கோரலின் அடிப்படை தர்மமே பெரும்பான்மை வாதம் தானே ? பாகிஸ்தான் உருவானதின் காரணமும் பெரும்பான்மை வாதம் தானே ? அதெல்லாம் சரியென்ற தொனியில் எழுதிச் செல்லும் மார்க்ஸ், இந்துத்துவ சக்திகள் பெரும்பான்மை வாதம் பேசுவது பற்றி மட்டும் குறிப்பிட்டுச் சொல்லி கண்டனம் செய்கிறார். ஏன் அப்படி ?

ஜனநாயகம் பற்றியும், ஆர் எஸ் எஸ் ஜனநாயக விரோதி என்றும் சொல்லும் மார்க்ஸ், ஜன நாயகம் பற்றி ஆர் எஸ் எஸ் சொல்லும் இன்னொரு விஷயம் – இதற்குத் தொடர்புடையது தான் — பற்றியும் விவாதித்திருக்க வேண்டும். ஆர் எஸ் எஸ் சொல்லும் இன்னொரு குற்றச் சாட்டு , இஸ்லாமியர்கள் பெரும்பான்மை பெற்றால் ஜன நாயகம் இராது என்பது. இது வெறும் அனுமானம் தான் என்றாலும், அகில இந்திய ரீதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையடைவார்கள் என்ற அச்சம் தேவையற்றது என்றாலும் இந்த விமர்சனம் பற்றிய உண்மையை அவர் எதிர் கொண்டிருக்க வேண்டும். அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களா தேஷில் ஜன நாயகம் காற்றில் பறக்க விட்டது பற்றியும், மற்ற முஸ்லீம் நாடுகளும் ஜன நாயகப் போக்கைப் பின்பற்றாதது பற்றியும், முஸ்லிம் முல்லாக்களும் சரி , முஸ்லீம் அறிவு ஜீவிகளும் சரி ஜன நாயகம் இஸ்லாமின் கருத்தாக்கம் என்று கொண்டதில்லை என்பது பற்றியும் பேசியிருக்க வேண்டும். ஆர் எஸ் எஸ்/பா ஜ க வின் வளர்ச்சிக்கான உள் காரணங்கள் போலவே வெளிக் காரணங்கள் உண்டு என்பதை மிகச் சுலபமாய் இவர் மறைத்து விடுகிறார்.

தனக்குப் பிடிக்காத எல்லா இயக்கங்களையும் பாஸிஸ்ட் என்று சொல்லிச் செல்லும் ஒரு போக்கிற்கு மார்க்சும் பலியாகிறார். ஃபாஸிஸ்ட் கருத்தியல் இன்று எல்லா வெகுஜனக் கட்சிகளிலும் கூடப் புழங்கி வருகிற ஒரு விஷயமாய்த் தான் இருக்கிறது. அ தி மு க-வில் ஜெயலலிதா வைத்ததே சட்டம். காங்கிரஸில் சோனியா வைத்ததே சட்டம் என்று இயங்கி வருவதைக் காண்கிறோம். அவர் பட்டியலிடும் விஷயங்களை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம். என்ன ஆச்சரியம் அ தி மு க, காங்கிரஸ், பாமக, எல்லாமே மார்க்ஸ் தரும் அளவு கோல்கள் படி ஃபாஸிஸ்ட் கட்சிகள் தாம் அப்படி அவர் தரும் பட்டியல் இது:

விரிவாக்க நோக்கமுள்ள அயலுறவுக் கொள்கை. (சீனாவின் திபெத் கொள்கை.)

கட்டமைக்கப் பட்ட ‘மற்றது/எதிரி ‘க்கான சமூக ஒருமிப்பு.(உன்னை விடமாட்டேன் – எம் ஜி ஆர்.)

அரசியலதிகாரத்தை முழுக்க மையப் படுத்துதல் ( எம் ஜி ஆர், ஜெயலலிதா, சோனியா, ராமதாஸ்.)

நாடும் கலாசாரமும் கெட்டுச் சீரழிந்துவிட்டன என்ற ஓலம். (என் தாத்தாவும் ஒரு ஃபாஸிஸ்ட். ஊரே கெட்டுப் போச்சும்மா.)

வன்முறையின் புகழ் பாடுதல். ( ‘அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழலிலிருந்து பிறக்கிறது ‘ – மாவோ).

அரசியல் கூட்டங்களை / நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்து செயலை நோக்கி உந்துதல். (ஆகவே என் அருமை நண்பர்களே நீங்கள் அடுத்து நடத்தவிருக்கும் கூட்டத்தை, எது பற்றியதானாலும், கசாமுசா என்று, திட்டமிடாமல், செயல் எதையும் பற்றிப் பேசாமல் நடத்த வேண்டும் . இல்லையோ தொலைந்தது. நீங்களும் ஃபாஸிஸ்ட். )

‘ஆண்மை ‘யை வலியுறுத்துதல் .(தமிழ் /தெலுங்கு/ இந்தி சினிமா.)

பட்டியலிட்டது அ மார்க்ஸ். அடைப்புக் குறிகளில் எனது விளக்கங்கள் . இந்தப் பட்டியலைப் பற்றி வெகு நேரம் நான் யோசித்தேன். ஏன் இப்படி ஒரு பட்டியலை அவர் தரவேண்டும். பா ஜ க – ஆர் எஸ் எஸ் செய்லபாடுகளுடன் ஒப்பிட்டால் பல விஷயங்கள் இதில் பொருந்தாமல் இருக்கின்றன. அவர்கள் பெண்களுக்கு முக்கியமாய்ப் பல பதவிகளுலும் பொறுப்பிலும் முன்னிறுத்தியிருக்கிறார்கள். உலகமயமாதலில் இவர்கள் காங்கிரசிற்குச் சளைத்தவர்கள் இல்லை என்று மார்க்ஸே பல உதாரணங்கள் தருகிறார். ஜனநாயக ரீதியாகப் பலவிதங்களில் தம்முடைய அமைப்புகளில் அதிகாரபரவலுக்கும் பா ஜ க – ஆர் எஸ் எஸ் இடமளித்து வருகிறது. எனக்கு தோன்றுகிறது என்றால் இந்தப் பட்டியல் அனாதரவாக இங்கு தரபட்டதற்கு ஒரு நோக்கம் உண்டு. இஸ்லாமையும் , முஸ்லீம் அரசியலையும் ஆதரவுக் கண்ணோட்டத்தில் பார்த்தாக வேண்டும் என்ற அடிப்படைக் கடப்பாடுடன் புத்தகம் எழுதப் பட்டிருக்கிறது. ஆனாலும், முழுக்க இஸ்லாம் மதவாதத்துடன் , முஸ்லிம் அரசியல் நடவடிக்கைகளுடன் இனங்காண முடியாத முரண்பாடு மார்க்ஸிற்கு. தன் விமர்சனத்தை மறைமுகமாக வெளியிடலாம் என்று இந்தப் பட்டியலை வெளியிட்டிருக்க வேண்டும். இஸ்லாம் மதவாதம் மற்றும் அரசியலின் பிற்போக்குத் தன்மைகளை இப்படி விமர்சிப்போம் என்று அவர் கருதியிருக்க வேண்டும்.

‘இன்று நாட்டை எதிர் நோக்கியுள்ள மிகப் பெரிய ஆபத்தாக இந்துத்துவம் நிற்கிறது ‘ என்கிறார் மார்க்ஸ். ஆர் எஸ் எஸ்- இன்று நாட்டை எதிர் நோக்கியுள்ள முக்கியப் பிரசினைகளில் ஒன்று என்று நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதை வலுவிழக்கச் செய்வது என்று எல்லாவிதமான மதச் சொல்லாடல்களிலிருந்தும் விலகிச் செல்கிறவர்களால் சாத்தியம் என்று நான் நம்புகிறேன். மிகப் பெரிய ஆபத்துகளான மற்ற பிரசினைகளான ஊழல், தேசீய இனப்பிரசினைஎன்ற பெயரில் வன்முறையைக் கிளப்பும் இனவாதம், ஜன நாயகத்தின் வழியில் பெற்ற உரிமைகளை துஷ்பிரயோகம் செய்கிற பெருங்கட்சிகளின் செயல் – இவையெல்லாமே மிகப் பெரிய ஆபத்துகள் தான்.

‘இந்துத்துவம் வெறும் மதப் பிரசினை அல்ல; அது இந்து உயர்சாதி ஆதிக்கத்தைத் தக்க வைக்கும் அரசியல் செயற்பாடு ‘ என்ற மார்க்ஸின் கூற்றிலும் உண்மையில்லை. தம்முடைய பரந்து பட்ட தளத்தை, சாதி தாண்டிய அல்லது எல்லாச் சாதிகளையும் உள்ளடக்கிய ஒரு காட்சிப் பொருளாக ஆக்குவதன் மூலம், இந்து மதத்தினை எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பாகக் கட்ட வேண்டிய ஒரு கட்டாயம் பா ஜ க விற்கும், ஆர் எஸ் எஸ்-க்கும் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் கல்யாண்சிங், பங்காரு லட்சுமண் போன்றோரை அது தலைமைப் பொறுப்புகளில் நிறுத்தியுள்ளது.

‘இந்துத்துவம் சிறுபான்மையோரை எதிரிகளாய்க் கட்டமைத்து அவர்களது இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது ‘ என்ற மார்க்ஸின் கூற்று முதல் பகுதி உண்மை. ஆனால் சிறுபான்மையினர் மூலமாக இந்து மதத்திற்கு ஆபத்து என்ற பொய்யைக் கிளப்பிவிட்டு மத அரசியல் பண்ணுவது தான் ஆர் எஸ் எஸ்-ன் நோக்கம். ‘அவர்களது இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது ‘ என்பது மிகைப் படுத்தப் பட்ட பேச்சு.

‘சிறுபான்மையினரை எதிரிகளாகக் கட்டமைத்த போதும் பார்ப்பனீயக் கலாசாரக் கூறுகளை முதன்மைப் படுத்தி சமூக/அரசியல் அதிகாரங்களில் உயர்சாதியினரைத் தக்க வைத்து ஒடுக்கப் பட்ட சாதியினரைத் தொடர்ந்து ஒடுக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது ‘ என்ற மார்க்ஸின் கூற்றைப் படித்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.சாதீயம் என்பது ஒரு இந்தியக் குணாம்சம். அது ‘இந்துக் குணாம்சம் ‘ என்றும் சொல்லலாம். அப்படிச் சொன்னால் இந்து மதத்தின் அனைத்திந்தியப் பொதுமையை ஒப்புக் கொள்ள வேண்டும். அதை ஒப்புக் கொள்வாரா மார்க்ஸ் ? முதுகுளத்தூர் தொடங்கி, மேல வளவு வரையில் கீழ்வெண்மணி தொடங்கி தாமிரவருணி வரையில் , ஒடுக்கப் பட்டவர்கள் மீது நிகழ்ந்த தாக்குதல்களுக்கு மேல்சாதியினரைக் குற்றம் சாட்ட வேண்டும் . இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடத்தியவர்களுக்கு கோல்வால்கரையும் தெரியாது, சாவர்க்கரையும் தெரியாது. இந்தத் தாக்குதல்கள் நடத்தியவ்ர்களின் முன்னோடி யார் அவர்களின் தமிழ்ப்பாரம்பரியம் என்ன என்பதை மிகச் சாமர்த்தியமாய் மறைத்து, இந்துத்துவம்-ஆர் எஸ் எஸ்- ஒரு வடவர் சூழ்ச்சி என்பது போல வர்ணிப்பதன் அடிப்படையான் நேர்மையின்மையை எந்த விமர்சகர்களும் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் பரிதாபம். மார்க்ஸ் போன்றோர் இப்படிப்பட்ட தாக்குதல்களுக்காக மேல்சாதியினரைக் கண்டனம் செய்ய வேண்டிய தருணத்தில் மட்டும், பார்ப்பனீயத்தை இழுத்து மேல்சாதியினருடன் சேர்த்துவிடுகிறார்கள். அதாவது பிராமணரல்லாத மேல்சாதியினரைத் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பது என்பது சொல்லொணாச் செயல், இல்லையா ? மேல் சாதியினரின் மீது படிந்துள்ள சாதியக் கறையைமழுங்கடித்து, பிராமணர்கள் தான் சாதிய அமைப்புக்கு முழுமுதல் காரணம் என்று நிறுவுவதற்காக, மேல்சாதியினரை , ‘பிராமணல்லாதாராய் ‘க் காண்பது ஓர் உத்தி.

ஒரு குறிப்பிட்ட சாதியினரை அல்லது வகுப்பாரை ஒடுக்குவதைக் குறிக்கோளாகக் கொள்வது எந்த மதத்தின் அடிப்படை அம்சமும் அல்ல. அப்படியென்றால் கிருஸ்தவ மதம் தான் யூதப் படுகொலைகளுக்கும் காரணம் என்பதாகும். அடிமை முறை கிறுஸ்தவ மதத்தின் ஆணி வேர் என்றாகும். ஒவ்வொரு மதமும் வேறு வேறு காலகட்டத்தில் வேறு வேறு சமூகப் பிரசினைகளாலும், சில தனிமனிதர்கள் முயற்சியாலும் உருவாகி வளர்ந்து வருகிறது. மதத்தின் அடிப்படை ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைகளை நிலைபெறச் செய்வது. சில நம்பிக்கைகளின் , நம்பிக்கைகள் சார்ந்த சடங்குகளில் , அந்தச் சடங்குகளின் தனித்தன்மையில் பிரத்தியேகமான ஒரு அடையாளத்தைக் கட்டி எழுப்பும் ஏற்பாடு தான் மதம். காலப்போக்கில் சில கருத்துகள் முன்னுக்குத் தள்ளப்படலாம். சில கருத்துகள் மறைந்து போகலாம். மாறுபடலாம்.

இஸ்லாமும் சரி, கிறுஸ்தவமும் சரி இந்தியா வந்த போதும் சரி, மற்ற நாடுகளுக்குச் சென்ற போதும் சரி, சாதிகளை ஒழிக்க வேண்டும் , ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை அமைக்க வேண்டும் என்றெல்லாம் எந்த உன்னதச் செயல்திட்டமும் கொண்டு இயங்கவில்லை. தம்முடைய மத நம்பிக்கைகளுக்கு விளைநிலம் தேடி வந்தார்கள். அவ்வளவு தான்.

மத நம்பிக்கைகளுடன் ஊடாக ஏற்றத் தாழ்வுகளும், அந்த நம்பிக்கையமைப்பை வலுப்படுத்துவதற்காக, அந்த நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை ஒடுக்குவதும் மதத்தை வளர்க்கிற உற்சாகிகளின் வேலை. இந்து மதத்தைக் காட்டிலும் மற்ற செமிட்டிக் மதங்களில் இப்பட்டிப்பட்ட ஒடுக்குமுறைகள் தாங்க முடியாத அளவுக்கு நடந்ததுண்டு. கீழை மதங்களின் பார்வை ஒற்றைப் பார்வையல்ல. அதனாலேயே மதம் சார்ந்த வன்முறை கீழ்த்தேசங்களில் குறைவு. உலக வரலாற்றைப் பயின்றவர்கள அனைவருக்கும் மிக வெளிப்படையாய்த் தெரியும் செய்தி இது.

மதக் கோட்பாடுகளைத் தமக்குச் சார்பாய் வளைக்க வல்ல முல்லாக்களும், பூசகர்களும், கிறுஸ்தவ மேல் சாதியினரும் எப்போதும் எங்கேயும் உண்டு.தான். இவர்களுக்குச் சேவகம் செய்கிற மதத்தை, மறுப்பதென்கிற செயல் எல்லா மதங்களுக்குள்ளும் நடக்கிறது. இந்து மதத்திற்குள்ளும் , நாராயண குரு, பசவண்ணர், விவேகானந்தர், மாதா அமிர்தானந்தமயீ, சாய்பாபா, வள்ளலார், ராமனுஜர் என்று பலரால் நிகழ்த்தப் பட்டிருக்கிறது.

‘பார்ப்பனீயம், சாதீயம் , தீண்டாமை இவை பற்றியெல்லாம் பேசாமல் இந்துத்துவத்தை எதிர்க்க இயலாது ‘ என்பது இதைத் தொடர்ந்த இன்னொரு அருள் வாக்கு. நான் முன்பே குறிப்பிட்டது போல பார்ப்பனீயம், சாதீயம் , தீண்டாமை என்பது இந்து மதக் கருத்தாக்கங்கள் என்பதைக் காட்டிலும் இந்தியக் கருத்தாக்கங்கள் என்பதே சரி. அதனால் தான், கிறுஸ்தவர்களிடையே கல்லறைப் பிரசினை வருகிறது. முஸ்லீம்களிடையேயும் சாதீயம் வெளிப்படுகிறது. பாகிஸ்தான், பங்களா தேஷ் போன்ற , இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற நாடுகளிலும் – அவை இஸ்லாமிய நாடுகள் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்டாலும் கூட – இந்தப் பிரசினை ஓயவில்லை. எனவே பார்ப்பனீயம், சாதீயம் , தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும், ஆர் எஸ் எஸ்- போன்ற இயக்கங்களை எதிர்ப்பதையும் போட்டுக் குழப்பிக் கொள்வதன் மூலம் அவர் சொல்லவருவது என்னவென்றே புரிவதில்லை.

‘பன்மைத்துவத்தை உயர்த்திப் பிடிப்பதே பாசிசத்தை எதிர் கொள்வதற்கான ஒரே வழி. ‘ என்பது மிகச் சரியான பார்வை தான். ஆனால் இந்தப் பன்மைத்துவம் கடைப் பிடிக்க வேண்டியவர்கள் இந்துக்கள் மட்டுமே என்பது எப்படி ?

‘நமது சூழலில் ‘மதவாதத்தின் ஆபத்து எனப் பொதுவாகச் சொல்லிவிடமுடியாது. இந்துமதவாதம் என நாம் அழுத்திச்சொல்லியாக வேண்டும். நேரு ஒரு முறை சொன்னது போல இங்கே பாசிசம் என்பது பெருமதவாதத்தின் அடிப்ப்டையில் தான் தோன்ற முடியும். ‘ என்று மார்க்ஸ் சொல்கிறார். நேரு சொன்ன காலகட்டத்தில் இது உண்மையாய்க் கூட இருந்திருக்கலாம். ஆனால் இன்று காலம் வெகுவாக மாறிவிட்டது. இஸ்லாமியப் பயங்கரவாதம் உலகின் பெரும்பான்மை மதத்தின் பிரதிநிதியாய்த் தன்னைக் காண்பித்துக் கொண்டு உலா வருகிறது என்பதை மறந்து விட முடியாது. இன்று ஏற்படும் செயல்பாடுகள் அகில உலக அளவில் பரந்த எதிரொலிகளைக் கொண்டவை. ‘சிறுபான்மைத் தீவிரவாதத்தின் மீது ‘ கவனம் குவிப்பதை மார்க்ஸ் எதிர்க்கிறார். நம் போராட்டம் இரண்டு விதமான தீவிரவாதத்தினையும் எதிர்த்தே செயல்பட முடியும். ஆனால் மார்க்ஸ் சிறுபான்மைத் தீவிரவாதம் பற்றிய மெத்தனமும், ‘பெருமதவாதத்திற்கு எதிர்வினையாகவே இங்குச் சிறுபான்மைத் தீவிரவாதம் தோன்றுகிறது ‘ போன்ற வாதங்களின் மூலம் சிறுபான்மைத் தீவிரவாதத்தினை நியாயப் படுத்தும் முயற்சியும் செய்கிறார். இந்த விதமான வாதங்கள் மேலும் எதிர்த் தீவிரவாதத்தை வளர்க்கத் தான் உதவுமே தவிர தீர்வாகாது.

(தொடரலாம்)

Series Navigation