அவுரங்கசீப்

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

கும்பகோணம் கண்ணன்


ஒளரங்கசீப் cheepஓ costlyஓ தொியாது. அவன் உத்தமோத்தமனாக இருந்துவிட்டுப் போகட்டும் நமக்கு ஒன்றும் ஆட்சேபணையில்லை.

நம்மைப் பொறுத்தவரை அவன் வெள்ளைக்காரனைப்போலவே அன்னியன், ஆக்ரமிப்பாளன். வெல்லப் பிள்ளையாரைக்கிள்ளி வெல்லப்பிள்ளையாருக்கே நைவேத்தியம் செய்வதுபோல் இங்குள்ளதை எடுத்து இங்குள்ள கோயில்களுக்கு அவன் மானியங்கள் கொடுத்ததைப் பற்றி பெருமை என்ன ?

வெள்ளைக்காரர்கள் கூட எவ்வளவோ நல்ல வி ?யங்களை இங்கு விட்டுச்சென்றிருக்கலாம்; அதனால் அவன் நம்மை ஆள வந்த உத்தமன் என்று கொண்டாட முடியுமா என்ன ?

இங்குள்ள ஆரோக்யசாமியும் கிருத்துவன்; அங்கிருந்து வந்த ெ ?னரல் டையரும் கிருத்துவன் என்ற வகையில் அவனை இவன் விசுவாசிப்ப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?

இந்த மனப்பான்மையிலே ஹமீது ஜாஃபர்கள் உழல்வதும் வளர்வதும், வேறு போக்கிடம் இல்லாத என்போன்ற ஹிந்துவிற்கு மிகுந்த கவலயை அளிக்கிறது.

என்னைப்போன்றவர்கள் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலு இந்த மண்ணின் கலாசாரத்தோடுதான். எவர் மானியத்தையும் நான் வேண்டவில்லை. எனது வழிபாட்டு முறையை மதிக்கின்ற ஒரு அரசு, அரசியலில் மதத்தைக் கலக்காத ஒரு அரசு இதுவே இந்த மண்ணின் பாரம்பர்யமும், எனது எதிற்பார்ப்பும்.

ஆனால். காஃபிர்,ஜிஹாத், தாருல் இஸ்லாம்-தாருல் ஹரப் என்ற கருதுதுக்கள் என்னை பீதியடையச்செய்கிறது. இஸ்லாமிய அரசு என்ற லட்சியம் மதக் கருத்தா ?

தீவிர சைவ, வைணவ மன்னர்கள் இருந்திருக்கிறார்கள்; மதச்சண்டைகள் நடந்துள்ளன; ஆனால் எவரும் சிவராத்திாி அல்லது வைகுண்ட ஏகாதசிதான் அதிகாரபூர்வ விரத நாள்; அன்று நாட்டில் உள்ள அன்ன சத்திரங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை. கூடவே அதை அனுசாிக்க இயலாதவர்களுக்கு மதியம் ஒரு நாழிகை நேரத்திற்கு ஒரு கவளம் தயிர்சாதம் வழங்கப்பட வேண்டும் என்ற கருணை உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை. அரசனின் கொடுமையோ நன்மையோ அனவருக்கும் உண்டு. ஜக்காத் ஜிஸியா கதையெல்லாம் கிடையாது.

என்னுடைய சாித்திரத்தையும், சங்க காலக் கதைகளையும் நான் மறக்கமுடியாது; அவை எனக்கு என்றும் வேண்டும்; என் முன்னோர்கள் எனக்கு வேண்டும்; அவர்களை நான் மூடர்கள் என்று நினைக்க முடியாது.

ஆனால் பாணினியும் சிந்துசமவெளி நாகாீகமும், அன்றய இந்தியாவாகவும் இன்றய பாகிஸ்தானாகவும் இருக்கும் நாட்டின் சாித்திர பாடங்களில் இருக்கிறதா. வழிபாட்டுமுறை மாற்றத்தினால் முன்னோர்களை மாற்றிக்கொள்ள இயலுமா ? அவர்களின் முன்னோாின் பெருமகள் கொண்டாடப்படுகிறதா; இன்றய சந்ததியினருக்கு அங்கே அவை சொல்லப்படுகின்றனவா ? அவுரங்கசீப்பின் மானியங்களிலே அங்கே கட்டப்பட்ட கோயில்கள் இன்று இருக்கிறதா ? அதற்கு முன்னே கட்டப்பட்ட தஞ்சைப் பெருவுடையார் இங்கே இருக்கிறார். அது நாளை பாமியான் புத்தர் சிலைகள் போல் காணாமல் போய்விடக்கூடாது.

மீண்டும் சொல்கிறேன் அவுரங்கசீப் அதி உத்தமனாக இருந்துவிட்டுப் போகட்டும்; ராபர்ட் க்ளைவும், வாரன் ஹேஸ்ட்டிங்க்ஸும் இந்த நாட்டவர்க்கு என்ன உறவோ அதே உறவுதான் பாபரும்,அக்பரும், அவுரங்கசீப்பும்.

‘காந்தி மாஹாத்மாவாகவே இருந்தாலும் கடையனான ஒரு முஸ்லீம் அவரைவிட எனக்கு உயர்வுதான் ‘ என்று அலி சகோதரர்கள் சொன்னதை நானும் என் வருங்கால சந்ததியினரும் நினவு வைத்துக் கொள்வது இந்த தேசத்திற்கு என்றும் நன்மை பயக்கும்.

கண்ணன்

—-

kannankumbakonam@yahoo.com

Series Navigation

கும்பகோணம் கண்ணன்

கும்பகோணம் கண்ணன்