அவசியம் ஒரு அஸ்திவாரம்.

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

டி மோஹனலட்சுமி


அமைதி இன்று
அமைதி தேடி
அலைகிறது.

பாதுகாப்பே இன்று
தற்காப்புக்காக ஆயுதம்
தாங்கி நிற்கிறது.

ஒவ்வொரு விடியலும்
நாளும் அமைதி
வேண்டி விடிகிறது.

இரத்ததால்
நிர்ணயிக்கப் படுகின்றன
எல்லைக் கோடுகள்.
இழப்பின் எண்ணிக்கைகள்
நிர்ணயிக்கின்றன
நாடுகளின் வலிமையை!

விஞ்ஞானத்தால்
உலகம்
நெருங்கி விட்ட
போதிலும்
தனித் தனித் தீவாய்
மனிதர்கள்.

ஒவ்வொரு மனிதனும்
இன்று பிரசவ வேதனையில்,
அமைதி என்னும்
வெண் புறா
பிறக்க வேண்டி
தவமிருக்கிறான்.

புத்தகம் ஏந்த வேண்டிய
பூந்தளிர்களின் கைகள்
இன்று
ஆயுதம் ஏந்தி நிற்கின்றன
எதிரி யார் என யாருக்கும் தெரியாமலே.

வெட்ட வெட்டத் தழைப்பது
இலைகள் மட்டுமல்ல
வன்முறையும் தான்.
வேரோடு பிடிங்கி எறியாவிடில்
அது விதைத்தவனையும்
சேர்த்து எரித்து விடும்.
எச்சரிக்கை !

ஆயுதங்களில்
இல்லை வெற்றயின் ரகசியம்,
அவற்றின் அழிவில்
உள்ளது அன்பின் அவசியம்.

இன்றைய அவசர தேவை
பகை வளர்க்கும் பாசாங்கு குணம் இன்றி
மனிதம் காத்து வளர்க்கும்
மனித பண்பு.

சரித்தரம் மட்டும் பேசட்டுமே இனி
வன்முறையின் வீச்சத்தை.
அமைதி மட்டும்
வாழும் ஆலயமாகட்டும்
இந்த மண்னுலகம்.

ஆலயத்தின்
அடிக்கல் நாட்டு விழா
துவங்கட்டுமே இன்று –
அதற்கு அமையட்டுமே
அன்பே என்றும்
அஸ்திவாரமாக.
MohanaLakshmi.T@in.efunds.com

Series Navigation

டி மோஹனலட்சுமி

டி மோஹனலட்சுமி