அழிவின் தீராநடனங்கள்

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue

இளங்கோ


1.
உலகெங்கிலும்
போாிலிறக்கும் சிறார்களை நினைவுகூர்ந்து
கருத்துக்கள் பாிமாற
வாருங்கள் தோழர்களேயென
வளாகத்துச் சுவர்கள்
விடுத்தன அழைப்பு

தீவிரவாதிகளென முகத்திலறைந்து
புதியநாமம் சூட்டப்பட்ட அவர்களும்
வன்முறை முகமூடியிடப்பட்ட நாங்களும்
உலகமயமாதலிற்கெதிராய் உரத்துக்குரலெழுப்பிய
தோழர்கள் சிலருமாய்..

நிறங்களை
கலாச்சாரக்கூறுகளை
மீறியவோர் புள்ளியில்
மனந்திறந்து பேசக்கூடினோம்

கருத்துக்கள்
காந்தப்புலமாகி
திசைகளெட்டுமலைந்து
தீவிரவாதத்தில் நிலைகுத்தியது

வந்திருந்த வெள்ளைத்தோழர்கள்
இனத்துவேசம் பொங்கிப்பிரவாகாிக்கும்
நாஷனல்போஸ்டுக்களில்* எழுதிக்குவிக்கும்
அறிவுஜீவிகளின் வழித்தோன்றல்களல்ல

அமொிக்காவிற்கு
இன்னும் வேண்டுமென
ஆத்திரத்தின் உச்சியில்நின்ற
பாலஸ்தீனிய தோழனைக்கண்டு
கோபம்மிகுந்து வெளிநடப்புச்செய்தாாில்லை

வலிகளைப்புாிந்துகொள்கிறோம்
ஆனாலும்
அநியாயமாய் இறந்தவுயிர்களுக்கு
மதிப்பளித்தலும்
சாலவும் சிறந்ததென்றனர்

அழிவுகளிலிருந்து
எதைநோக்கிய தேடலென
வினாவிய தோழியிற்கு
அரங்கம் நிரம்பிய நிசப்தமே
வழிந்தது விடையாக

எதுவுமே செய்ய இயலாதவர்களாயிருப்பினும்
கேள்விகள் எழுப்பி
பொதுவான தளத்தில்
கருத்துக்கள் பாிமாறுபவர்களாய்
இருப்பதுகுறித்த களிப்புடன்
பிாிந்தோம் நாம்

2.
இன்றையபொழுதில்
ஒரு போாிலிருந்து
இன்னொரு போரைத்தொடக்குதல் குறித்து
எல்லாத்திசைகளிலிருந்தும்
ஆர்ப்பாித்துப் பேசுகிறார்கள்

ஒரு மனிதனை
சிதைக்காமல் தடுக்கும்
மிகஎளிய சமன்பாடுகள்
ஒவ்வொரு அழிவின்
தீராநடனங்களிடையே
சுடர்விட்டொளிர்வதை
நிசப்போாின் கொடூரமறியாக்கண்கள்
கவனிப்பதேயில்லை

என்றுமே.

*************

*நாஷனல்போஸ்ட் – கனடாயநாளிதழ்

Series Navigation