அளவுகோல்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

நாகூர் ரூமி


====
செண்ட்டிமீட்டர்களும் இன்ச்சுகளும் கொண்ட
இஷ்ட அளவுகோல் ஒன்று
எப்போதும் வைத்திருந்தேன்
துல்லியமாக அளப்பதற்கு.

கைக்கு அடக்கமான அதைக்கொண்டு
கஷ்டப்பட்டு ஒரு நாள் நான்
நீளம் மற்றும் உயரம் அறிய
பாதத்திலிருந்து தொடங்கியபோதுதான்
சிரசிலிருந்து சிரிப்பு எழுந்தது.

தலைதூக்கிப் பார்த்தேன்
தலையே தெரியவில்லை
சிரிப்பின் அருவி மட்டும்
கொட்டிக்கொண்டிருந்தது
மேலிருந்து.

அளவுகோலின் மீதெனக்கு
அபார நம்பிக்கையுண்டு
எனினும் புரியவில்லை
இவ்வளவு கொழுப்பெதற்கு
இந்த இமயமலைக்கு மட்டுமென்று.

ruminagore@yahoo.com
ruminagore@hotmail.com
http://nagorerumi.blogspot.com/ — எனது ப்ளாக் முகவரி
http://abedheen.tripod.com/nagorerumi.html — எனது வலைப்பக்க முகவரி

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி