அறிந்தும்.. அறியாமலும்…
பனசை நடராஜன், சிங்கப்பூர்

பிறந்த குழந்தையென,
மலர்ந்த பூவென
தனித்தன்மையோடு மிளிர்ந்தது
ஒவ்வொரு முகமும்..,
கலகக் கண்டுபிடிப்பான
வெளுக்க முடியாத சாயங்களில்
விழுந்து தொலைத்தன்
முகங்கள் அனைத்தும்..
எல்லா முகங்களிலும்
ஏதாவதொரு நிறச்சாயம்…
வண்ணங்களின் பெயராலேயே
தம்மை வகைப்படுத்திக் கொண்டு
குழுக்குழுவாய் பிரிந்தன
முகம் மறைந்து,
‘முகம்’ என்ற பெயர் மறந்து..!
அவற்றில் சில
ஒப்பனை பூசியிருப்பதாய்
மற்றவற்றைக் குற்றம் சொல்லின,
தத்தம் முகத்திலும்
சாயம் இருப்பதை
அறிந்தும் அறியாமலும்..!!
பனசை நடராஜன், சிங்கப்பூர்
feenix75@yahoo.co.in