அறமே சிவம்! சிவன் சொத்து…? அலைக்கற்றை மற்றும் தொலை தொடர்பு துறை ஊழல் தொடர்பாக – ஒரு முழுகவிதையே இடக்கரடக்கலாக!

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

காளி நேசன்


—-

“பாடியவர்:சோழன் நலங்கிள்ளி; ‘நல்லுருத்திரன் பாட்டு’ எனவும் பாடம்.
திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி
*******************
மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்று அவண்
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!

அலைக்கற்றைகள் என்ற இயற்க்கையின் மகாசக்தி(2-G-மின்அணு அலைகள்) ஒரு சித்து விளையாட்டை தானாகவே ஆடி அம்பலத்திற்க்கு கொண்டுவந்து விட்டது ஊழல் பெருச்சாளிகளை. என்ன ஆட்டம், என்ன வாண வேடிக்கை! நரியை பரியாக்கிய சிவனை போல, தன்னை சர்வ வல்லமை படைத்தவர்களாக கருதிக்கொண்டு மக்கள், மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்க்காக உருவாக்க பட்டு செலவிடப்பட்டிருக்க கூடிய லட்சம் கோடி மதிப்புள்ள இயற்க்கை வளத்தை ஒரு சூதாட்ட அரசியல் மூலமும், பன்னாட்டு நிறுவனங்களின் துணையோடும், போலிகளுக்கு துதி பாடி துணை போகும் பொருளாதார, நிர்வாக மேலாண்மை பேராசிரிய மேதைகளின் பரிந்துறைகளுடன் கண்ணுக்கு தெரியாத இடங்களில் இருந்து கொண்டு விலை பேசி சுரண்டிய ஊழல்வாதிகள் இந்த அலைக்கற்றைகளின் வலைப்பின்னலில் தானாகவே மாட்டியுள்ளார்கள். இந்த ஊழலின் ஆழத்தை, பின்ணனியை, பேரிழப்பை பற்றி பெரிய பத்திரிக்கை நிறுவனங்களோ, தொலைக்காட்சி ஊடகங்களோ, அரசு நிர்வாக இயந்திரங்களோ, காவல் துறையினரோ, தொழிற்சங்க பிரதிநிதிகளோ (பாதிக்க பட்ட துறையை சார்ந்தவர்கள் உட்பட) வெளிகொணர்ந்ததாக தெரியவில்லை. மாற்றாக, இந்த ஊழலின் தொடக்க நிலை ஆரம்ப கட்டங்களில் இருந்து, இதைப்பற்றி எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தது இணைய தளங்களிலும், சிறுபத்திரிக்கைகளிலும் செயல்படும், மக்கள் நல ஆர்வலர்கள் மட்டுமே. இறுதியாக, இந்த அரசியல், ஊழல் பேரங்ககளில் ஈடுபடும் தரகர்களின் தொலைபேசி உரையாடல்கள்(அதே அலைக்கற்றைகள்) எல்லா ஊழல் நரிகளையும் வெளிக்கொணர்ந்துவிட்டது.

இந்த ஊழலில் இடைத்தரகர்களாக இருந்து செயல்பட்டவர்களையும், தனியார்மயம், சந்தை பொருளாதாரம் என்ற பேரில், சுய ஆதாயம் நாடி நாட்டையும், இயற்க்கை வளங்களையும் விலை பேசி, (அதுவும் ஒரு ஏழ்மையுள் உழலும் வறுமை நிரம்பிய நாட்டின் அரிதான வளங்களை) கொள்ளை கொண்டவர்களை என்ன செய்ய வேண்டும் இந்த மக்கள்? இந்த ஊழலில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற முயலும் அரசியல், சட்ட, நீதி நிறுவனங்கள் ஏதும் இருப்பின், அவர்களையும் விரைவில் வெளிக்கொணரும் இந்த மின்னனு E-உலகம் (Electronics).

சந்தை உண்டு, சயனக்கிரகம் இல்லை மக்களுக்கு
வாழ்க நம் தலைவர்கள்! வெல்க நம் நாட்டு மக்கள்!

Series Navigation