அர்த்தமற்ற கேளிக்கைகள்…
ராம்ப்ரசாத்

வழக்கத்துக்கு மாறாக
அந்தப் பூ அன்று
வாசம் வீசவில்லை…
இலைகள் வாடின,
காம்புகள் வீழ்ந்தன…
குறிப்புகள் ஏதுமின்று
அலைபாய்ந்தன வண்டுகள்…
வாடிவிழுந்த பூ சட்டென
துளிர்த்தெழுந்தது…
வாசம் வீசியது…
எழுந்த வேகத்தில்
குறிப்புகள் ஏதுமில்லாத
வண்டுகளை நெட்டித்தள்ளிக்
கடந்துபோனது…
– ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)