அரும்புகள்

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

ப.மதியழகன்


காக்கை கூட்டில் வந்து
பிறந்த குயில்கள்
கடவுளையே கைகட்டி நிற்கவைக்கும்
சின்னஞ்சிறு முல்லைகள்
மழலை பேச்சினில் மயக்கிடும்
குட்டி குட்டி மொட்டுக்கள்
மண்ணுலகை சொர்க்கமாக்கிடும்
வீடேறி வந்த தெய்வங்கள்
கவலை ரேகைகளை
நொடியில் களைந்திடும்
வறியவன் வீட்டு அரசிளங்குமரிகள்
சரியும் நிலையிலுள்ள குடும்பத்தை
தூக்கி நிறுத்த வந்த
ஆலம்விழுதுகள்
புவனத்தை புத்துயிர்ப்புடன் வைத்திருக்கும்
வானம்பாடிப் பறவைகள்
நாங்கள் சொன்னதையே திரும்பச் சொல்லும்
எங்கள் கூட்டின் செல்லக்கிளிகள்
பூவுலகத்திலிருந்து வேறுலகத்திற்கு
நம்மை அழைத்துச் செல்லும்
மோட்ச தேவதைகள்
வானவில் போல் ஏழு வண்ணங்கள்
காட்டும்
கார்மேகக் கூட்டங்கள்
கேள்விக்குறிகளை
ஆச்சர்யக்குறியாக மாற்றும்
எங்கள் வீட்டு தேன் அரும்புகள்.

ப.மதியழகன்

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts