அயோத்திதாசர் ஈ. வே.ரா நிலைப்பாடு: சிவக்குமார் எதிர்வினையின் தூண்டுதலால் எழும் சில சிந்தனைகள்

This entry is part [part not set] of 24 in the series 20051202_Issue

மலர் மன்னன்


பி. கே. சிவக்குமார் கடிதம் படிக்க வாய்த்ததில் மகிழ்ச்சி. கோ. ராஜாராம், இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் என்னையும் நான் நடத்திய கால் இதழையும் நினைவுகூர்ந்த தகவலை அவர் தந்தமைக்கு நன்றி. அன்றைய சிற்றிதகழ்கள் பெரும்பாலும் சந்தைக்கடை சச்சரவுகள் மாதிரியான வ்சைகளில் தம் அரிய பக்கங்களை விரையம் செய்துகொண்டிருந்ததால்

எழு ந்த எரிச்சலின் காரணமாகவே ‘கால் ‘ இதழைத் தொடங்கும் கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இதுபற்றி வெங்கட் சாமிநாதன் சொன்னது:

‘ ‘ எங்கள் எல்லார் முதுகுகளுக்கும் பின்னாலிருந்து எங்களைக் கண்காணித்துக்கொண்டிருந்துவிட்டு, அதன் காரணமாகத்தான் இதைத் தொடங் கியிருக்கிறீர்கள். ‘ ‘

இனி அயோத்திதாசர் தொடர்பாக சிவக்குமார் எழுப்பியுள்ள பிரச்னை.

திரு. ஈ.வே.ரா. பற்றிய எனது கருத்து இன்னதென்பதை அயோத்திதாசர் கட்டுரையிலிரு ந்தே புரிந்துகொள்ள முடியும்.

அயோத்திதாசரின் பிரிட்டிஷ் ஆதரவுக்கு நியாயமான காரணங்கள் இருந்தன. பிராமணர்கள் ம்ட்டுமின்றி உயர் சாதியினர் என்று அறியப்படும் பிற சாதியினர், தோம்ற்றத்திலும், பொருளாதார நிலையிலும் தங்களைப் போலவே இருந்த மிகப் பிற்படுத்தப் பட்ட வகுப்பாராலுங்கூட ஒதுக்கித்தள்ளப்பட்ட தலித்துகள் சமுதாயத்தில் சம அந்தஸ்து பெறுவதற்கு பாரதம் முதலில் சமூக விடுதலை கிடைத்தாலன்றி அரசியல் விடுதலை பெறுவதில் பயனில்லை என்ற கருத்தின் தாக்கம் அவரை பிரிட்டிஷ் ஆட்சி தொடர விரும்புபவராக இயங்கச் செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் பிரிவினை வாதம் பேசியவரல்ல.

தீரமிக்க இளைஞரான சுவாமி விவேகானந்தர் சமூக விடுதலையே முதலில் நமக்குத் தேவை எனக் கருதியதாலேயே அரசியலில் ஈடுபடவில்லை. பின்னாளில் அவர் சமூகத் தொ ண்டில்தான் கவனம் செலுத்தினார். பிராமணர்களையும் மேலாதிக்க ஜாதியினரையும் அவர் திட்டாத திட்டா ? குறிப்பாக நம்பூதிரிமார்களின் சுபாவத்திற்காகவே கேரளத்தைப் ‘பைத்தியக்காரர்களின் தேசம் ‘ என வர்ணித்தவராயிற்றே! ஆனால் ஹிந்து சமூகத்தைப் பிளவுபடுத்தும் துர்நோக்கம் அவருக்கு இல்லை. ரிஷி அரவிந்தருங்கூட அரசியல் விடுதலைக்குத் தற்போது அவசரமில்லை, அதற்குமுன் மக்கள் ஆன்ம நேயம்பெறச் செய்யவேண்டும் எனக் கருதி யோக சாதனையில் ஈடுபட்டார்.

ஈ.வே. ரா. வின் சமாசாரம் அப்படியல்ல. ஹிந்து சமூகத்தில் பிராமணர் பிராமணர் அல்லாதார் என்ற பிளவை ஏறத்தாழ நிரந்தரமாகவே ஏற்படுத்தி, இன்று எந்த விவகாரம் என்றாலும் அந்தப் பிரக்ஞையுடனேயே அணுகும் மனப்பான்மையை ஏறத்தாழ ஹிந்துக்கள் அனைவரிடமுமே ஏற்படுத்திவிட்ட வசையை கால காலத்திற்கும் சுமந்து

கொண்டிருப்பவரான ஈ.வே.ரா., தொடக்கத்தில் காங்கிரசில் இருந்தவர்தான். காங்கிரசில் பிராமணர் ஆதிக்கம் அதிகமாகமாக இருப்பதாகக் கருதியதாலேயே அவர் அதிலிருந்து விலகினாரேயன்றி பிரிட்டிஷ் ஆட்சியின் ஆதரவாளராக மாறியதால் அல்ல. என்றைக்குமே சிறுபான்மையினரான பிராமணர்களின் ஆதிக்கம் உத்தியோகத்துறைகளில் இருப்பதை மாற்றி, மற்ற மேலாதிக்க ஜாதியினருக்கும் பிறருக்கும் அந்த வய்ய்ப்புக் கிடைக்கச் செய்வதுதான் அவரது குறிக்கோளாக இருந்தது. ஜஸ்டிஸ் கட்சி தோன்றிய கால கடத்தில்அந்தக் கட்சியை ‘முதலியார் கட்சி ‘ என்றுதான் அடையாளப் படுத்துவார்கள்.

பிரிட்டஷ் ஆட்சி நீடிக்க வேண்டிய அவசியமின்றியே இன்று கல்வித் துறையிலும் பிற துறைகளிலும் ஈ.வே.ரா.வின் குறிக்கோள் நிறைவேற முடியும் என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஆனால் சலுகைகள் பலவும் அளிக்கப்பட்டாலும் தலித்துகள் சரிசமமாக முடியாத நிலையே நீடிக்கிறது.

சொல்லப்போனால் சிறுபான்மையினரான பிராமணரின் ஆதிக்கம் இருக்குமானால் தலித்துகள் அல்லாத பிற வகுப்பார் அத்தகைய ஆதிக்கத்தை வெற்றிகொள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் தயவுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் தலித்துகளுக்கு மிகப் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைவரிடமிருந்தும் விடுதலை கிட்ட பிரிட்டிஷ் ஆட்சியின் பரிவு தேவைப் பட்டது.

அயோத்திதாசர் பிரிவினைவாதியல்ல. ஈ.வே.ரா.வோ, தெற்கே ஒரு ஜின்னாவாக உருவாக ஆசைப்பட்டவர். அதற்காகவே பிரிட்டிஷ்காரனைப் ‘ ‘போகாதே போகாதே, போவதானால் பாகிஸ்தான் மாதிரி திராவிடஸ்தானையும் கொடுத்துவிட்டுப் போ ‘ ‘ என்றவர். இதை எப்படி உளப்பூர்வமான பிரிட்டிஷ் ஆதரவு என்பது ? பார்ப்பானே வெளியேறு என்றும் சொல்வார். தேர்தலில் மாவூர் சர்மாவையும் அதரிப்பார். மகளே, மகளே என்பார். அந்த அம்மையாரையே திடாரென மனைவியென்றும் அறிவிப்பார். தம் தொண்டர்களுக்கு சட்டப்படிச் செல்லாத சுயமரியாதைத் திருமணத்தை தட்சிணை வாங்கிக் கொண்டு புரோகிதம் செய்து நடத்தி வைப்பார். ஆனால் தமக்குச் சட்ட அங்கீகாரமுள்ள பதிவுத் திருமணத்தைச் சாமர்த்தியமாக நடத்திக் கொள்வார். காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்பார். பச்சைத் தமிழன் என்று சொல்லி காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியை ஆதரிக்கவும் செய்வார். 1967ல் தி.மு.க. வெற்றி பெற்றவுடன் பிளேட்டைத் திருப்பிப் போட்டுவிட்டேன் என்றும் சொல்வார். ஆக, எதிலும் தெளிவான போக்கு இல்லாதவர். சமயத்திற்கு ஏற்றாற்போல் நட ந்து கொள்பவர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடி சித்ரவதைகளைத் தாங்கிக் கொண்ட வீர சாவர்கருங்கூட இரண்டாம் உலகப்போரின்போது ஹிந்துக்கள் பெருமளவில் ராணுவத்தில் சேரவேண்டும் என்பதற்காக பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக யுத்தப் பிரச்சாரம் செய்தார்தான். வருங்கால பாரதத்தின் ராணுவத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையனராக இருப்பதும், போர்ப் பயிற்சியும், போர்க்கள அனுபவமும் உள்ளவர்களாக அவர்கள் இருப்பதும் அவசியம் என்பதால் தொலை நோக்குப் பார்வையுடன் சாவர்கர் யுத்தப் பிரச்சாரம் செய்தார். காந்தியும் மற்ற காங்கிரஸ் தலைவர்களுமோ அத்தகைய தீர்க்க தரிசனமின்றி எதிர்ப் பிரச்சாரம் செய்தார்கள்.

சாவர்கரின் தொலைநோக்கு பாரதத்திற்கு எவ்வளவு பயன்பட்டது, பயன்படுகிறது என்பதை விளக்கத் தேவையில்லை. குறிப்பாக, பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹிந்துக்கள் ராணுவத்தில் சிறுபான்மையினராக இருந்திருப்பின் என்ன ஆகியிருக்கும் ? பெரிய பதவிகளை எளிதில் பெறலாம் என்பதற்காகவே பாரத ராணுவத்திலிருந்த முகமதியர் பலரும் பாகிஸ்தானுக்குப் போய்விடவில்லையா ?

சாவர்கர் இவ்வாறு அன்று செயல்பட்டதால் அவர் பிரிட்டிஷ் ஆட்சி தொடரவேண்டும் என்று விரும்பியதாகக் கூறமுடியுமா ? ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள். சாவர்கருக்கு தேசாபிமானம் என்றால் ஈ.வே. ரா. வுக்கு தேசத் துரோகம்! இதை எப்படி அயோத்திதாசரின் குறிக்கோளுடன் இணைத்துப் பார்க்கமுடியும் ?

சிவக்குமார் என் ஆதரவு நிலைப்பாடுபற்றியும் யூகங்கள் செய்திருப்பதால் அதுபற்றியும் தெளிவுபடுத்தும் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

மாணவப் பருவத்தில் பரம நாஸ்திகனாகவும், அனேகமாக மார்க்ஸ்ஏங்கெல்ஸின் நூல்கள் எல்லாவற்றையுமே கரைத்துக் குடித்தவனாகவும் இருந்தவன்தான். ‘இருபது வயதில் கம்யூனிஸ்டாக இல்லாதவன் இதயமில்லாதவன்; நாற்பது வயதிலும் தொடர்ந்து கம்யூனிஸ்டாக இருப்பவன் மூளையில்லதவன் ‘ என்பதற்கு இணங்க, ஆனால் இறையருளால் இருபது வயதைத் தாண்டுமுன்னரே அந்த மாயையிலிருந்து விடுபட்டு, ஆன்மிக உணர்வும் இயற்கை விதிகளை ஒப்புக்கொள்ளும் விவேகமும் வரப்பெற்றவன்.

இன்றுள்ள பிரத்தியட்ச நிலையை நன்கு ஆராய்ந்து பார்த்து, அதன் பின் நாட்டு நலன் கருதி ஹிந்துத்துவக் கோட்பாட்டை சாவர்கர் வழியில் ஏற்றுக்கொண்டவன். எந்த அரசியல் கட்சியிலும் அமைப்பிலும் சேராதவன். ஆனால் ஹிந்து சமுதாய நலனுக்காக நடைபெறும் எல்லா இயக்கங்களிலும் விருப்பத்துடனும் வெளிப்படையாகவும் ஈடுபடத் தயங்காதவன்.

உத்தரப் பிரதேசத்திலும் பிஹாரிலும் உள்ள ஷியா முகமதியர்களே ‘ ‘இது ஹிந்துஸ்தானம். இங்கு ஹிந்துக்களே பெரும்பான்மையினராக இருக்க வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு வழிபாட்டுரிமை இருக்கும் ‘ ‘ என்னும்போது, பல கிறிஸ்துவ நண்பர்களும் அவ்வாறே விரும்பும்போது, நான் ஹிந்துத்துவக் கோட்பாட்டை மனமுவந்து ஏற்பதில் என்ன தவறு இருக்க முடியும் ?

—-

malarmannan97@yahoo.co.uk

Series Navigation