அம்மாவின் இசை
Published February 6, 2011 • By
ரவிஉதயன்
ரவிஉதயன்
இரவில் செவிமடுக்கிறேன்.
தாழந்த குரலில்
முணுமுணுக்கிற வரிகளை
அதுஒரு பாடலல்ல,
விதிகளுக்கு உட்பட்ட
இசையுமல்ல.
அது தன்
நெடிய மௌனத்தை
உடைக்கிற முயற்சி
சுமைகளை அகற்றும் ஒரு சாதுர்யம்
தற்காலிகமாய்
மூச்சு விடுவதற்கான
ஒரு போராட்டம்.
(அம்மாவுக்குச் சமர்ப்பணம்)
ரவிஉதயன்
raviuthayan@gmail.com