அம்பேத்கரின் பன்முகம் – நூல் அறிமுகம்

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

அருளடியான்


நூல்: அம்பேத்கரின் பன்முகம்
தொகுப்பு: டி. தருமராஜன்
வெளியீடு: அம்பேத்கர் ஆய்வு மையம்
முகவரி: தூய சவேரியார் கல்லூரி
பாளையங்கோட்டை – 627 002
பக்கம்: 141
விலை: ரூ. 50

அ. மார்க்ஸ், தந்தை பெரியாரிடம் இருந்து பலரும் அதிகம் அறிந்திடாத பரிமானங்களை, பெரியார்? என்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய நூலாக எழுதி வெளியிட்டார். அது போல, அம்பேத்கரின் ஆளுமையின் பல பரிமானங்களைப் பற்றி எட்டு அறிஞரிகள் எழுதிய கட்டுரைகளை டி. தருமராஜன் தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்நூலில் கிறித்துதாஸ் காந்தி ‘அம்பேத்கரின் பன்முகம்’ என்ற கட்டுரை எழுதியுள்ளார். ந. முத்துமோகன், ‘அம்பேத்கர் பன்முகம்: அரசியல், சட்டம், சமயம், பண்பாடு’ என்ற கட்டுரை எழுதியுள்ளார். ஆ. சிவசுப்பிரமணியன் ‘அம்பேத்கர் குறித்த காந்தியவாதிகளின் எதிர்வினைகள்’ என்ற கட்ட்ரையையும், தொ. பரமசிவன் ‘அம்பேத்கரும் பெரியாரும்’ என்ற கட்டுரையையும் எழுதியுள்ளனர். அ. அந்தோனி குருசுவின் ‘அண்ணல் அம்பேத்கரது தலைமைத்துவம்’ என்ற கட்டுரையும், நா. ராமச்சந்திரனின் ‘இந்திய அரசியல் சட்ட வடிவமைப்பு’ என்ற கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அ. ஜெகநாதன் ‘இரட்டை வாக்குரிமையும், தனித்தொகுதி முறையும்’ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இந்நூலின் தொகுப்பாசிரியரும், அம்பேத்கர் ஆய்வு மையத்தின் இயக்குநருமான டி. தருமராஜன் ‘அம்பேத்கர் பார்வையில் தீண்டாமை’ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இந்நூல் தலித் இலக்கியத்துக்கு புதிய வரவு. சமகால கட்டுரைகளின் அரிய தொகுப்பு.
-அருளடியான்
aruladiyan@yahoo.co.in

Series Navigation

அருளடியான்

அருளடியான்