அப்பாவி ஆடுகள்

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

நரேந்திரன்


புலியும் சிங்கமும்
போர் முழக்கம் செய்தன.
‘விட்டேனா பார் ‘ என்றது புலி.
‘விடுவேனா பார் ‘ என்றது சிங்கம்.
நட்ட நடுவில் புகுந்து
நரிகளின் நாட்டாமை.
மூலைக்கொன்றாய்ச் சிதறியோடிய
எலிகளின் கூச்சலும் இடையிடையே.
அத்தனைக்கும் நடுவில்
அகப்பட்டுத் தவிக்கும்
அப்பாவி ஆடுகளைத்தான்
அத்தனைபேரும் மறந்து போனார்கள்.
அய்யோ பாவம் ஆடுகள்!
அப்பாவி ஆடுகள்!!
*
இன்றைய தமிழகம்,
திறந்து கிடக்கும் வீடு
திருடனின் கையில் சாவி.
—-
narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்