அப்பாவின் கண்கள் நனைந்திருந்தன

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

ஆறுமுகம் முருகேசன்..


மிகைப்படியான யோசித்தல்
ஒருசில சமயங்களில்
ஒன்றும் புரிபடுவதில்லை..

அப்பிஞ்சு பள்ளி சிறுமியையும்
பட்டம் நோக்கி ஓடிகொண்டிருந்த
வால் சிறுவனையும் அழைத்து
“தன் நீலநிற புதிய பீ-எம்-டபுள்யு” வினில்
ஊர்சுற்றி வருவதாக சொல்லிச்சென்றவன்
இன்னும் வீடு திரும்பவில்லை..

மூவரும் இணைந்து விளையாடும்
புகைப்படமொன்றின் கதவு
அவரை வெறித்து நோக்கியது ..!!

மிகைப்படியான யோசித்தல்
ஒரு சில சமயங்களில்…..

Series Navigation

ஆறுமுகம் முருகேசன்..

ஆறுமுகம் முருகேசன்..