அபிராமி முதல் கண்ணகி வரை (ஒரு பயணக்கட்டுரை)

This entry is part [part not set] of 19 in the series 20010226_Issue

லாவண்யா


அப்பா, அம்மாவின் அறுபதாவது கல்யாணத்தைக் பூஜையோடு கொண்டாடுவதற்காக முதலில் திருக்கடவூர் மட்டும் போய் வருவதாகத்தான் திட்டம்,

அது மெல்லமாய் பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம், சீர்காழி என்று ஒரு சின்ன சுற்றுப் பயணமாகச் சென்றது, சுவாரஸ்யமான

பயணம்.

திருக்கடவூர் அழகாய் இருக்கிறது, ஊர் சிறியதுதான், , ஆனால் ஏகப் பட்ட ஹோட்டல்கள், ‘வெந்நீர், டிவி வசதியோடு கூடிய அறைகள், கார்

பார்க்கிங், கார் டிரைவர்களுக்கு தனியாய் தங்கும் வசதி ‘ என்றெல்லாம் பொிதாய் விளம்பரப் படுத்தி தங்க அழைக்கிறார்கள், கோயிலின்

குருக்கள் கூட ஒரு லாட்ஜ் வைத்திருப்பதாகவும், ஊாில் வீடுகளைவிட லாட்ஜ்கள்தான் அதிகமாயிருக்கும் என்றும் எங்கள் கார் டிரைவர் சொன்னார்.,

ஆச்சாியமாய் இருந்தது.,

ஹோட்டல்களின் பெயர்கள் இன்னொரு விநோதம், ‘ஹோட்டல் சதாபிஷேகம் ‘., ‘ஹோட்டல் மணிவிழா ‘ – உதாரணங்கள்., அப்பாவிடம் விசாாித்தபோது

என்னை ஒரு புழுவைப் போல பார்த்துவிட்டு, ‘விடிய விடிய ராமாயணம்.. ‘ என்று துவங்கும் பழமொழி சொன்னார்., அதாகப் பட்டது திருக்கடவூாில்

60வது, 70வது, 80வது கல்யாணங்களுக்கு விசேஷமாம்., இந்தக் கோயிலில் என்றில்லாமல் வேறு எங்கே செய்தாலும் இந்தக் கோயிலின்

கால சம்ஹாரமூர்த்தியை மனதில் நினைத்துதான் செய்ய வேண்டுமாம்.,

திருக்கடவூாில்தான் மார்க்கண்டேயன் ‘என்றும் 16 ‘ வரம் பெற்றான்(ர்) என்று கேள்விப் பட்டிருக்கிறேன்., அதனால் 16ம் கல்யாணத்தை இங்கே

செய்தால் ஒரு அர்த்தம் இருக்கிறது, சச்சின் டெண்டுல்காின் ரன்களைப் போல 60, 70, 80, 100வது கல்யாணமெல்லாம் இங்கே எதற்கு

என்று கேட்டேன்., ‘அதெல்லாம் அப்படித்தான் ‘ என்று சொல்லிவிட்டு எங்கேயோ போய்விட்டார்., தலவரலாறு புத்தகங்களுக்குள் குதித்துத் தேடினால்,

எல்லோரும் விதிவிலக்கில்லாமல் ‘சதாபிஷேகம் இந்தக் கோயிலில்தான் விசேஷம் ‘ என்று எழுதியிருக்கிறார்களே தவிர ஒருவரும் காரணத்தைச்

சொல்லக் காணோம்., சதாபிஷேகமூலம் கேட்பதும் தவறு போலிருக்கிறது என்று முயற்சியைக் கைவிடப் போன நேரத்தில் ஆழி என்று ஒருவர்

எழுதிய புத்தகத்தில் விளக்கம் கிடைத்தது., ‘மார்க்கண்டேயனைக் காப்பாற்றுவதற்காக ஈசன் எமனை எட்டி உதைத்த தலம் இது., அதனால்தான்

இங்கே ‘கால சம்ஹார மூர்த்தி ‘ இருக்கிறார், எம பயம் நீங்க அவரை வழிபடுவது மரபு ‘ என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது., இரண்டிற்கும் முடிச்சுப்

போட்டுப் பார்த்தால், முதிய வயதை நெருங்கிவிட்டவர்கள் எமபயம் இல்லாமல் இருப்பதற்காக அறுபதாவது கல்யாணம் துவங்கி எல்லாம் இங்கே

செய்வதற்குக் காரணம் இதுவாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது.

அடுத்த சந்தேகம் திருக்கடவூர் என்ற பெயர் எப்படி வந்தது ? அதுவும் ஒரு தலவரலாற்றுப் புத்தகத்தில் கிடைத்தது. கடம் என்பது கலம் என்பது

போன்ற பொருளில் உபயோகமாகிறது, பாற்கடலைக் கடையும்போது பிள்ளையாரைக் வழிபடாமல் துவங்கிவிட்டார்களாம், அவருக்கு ஏகப் பட்ட

கோபம் வந்து, அமிர்தம் வந்தபிறகு அந்த கல(ட)த்தை எங்கேயோ கொண்டு போய் ஒளித்து விட்டாராம்., அப்புறம் தேவர்கள் எல்லாம் வந்து

அவர் காலில் விழுந்து வாங்கிப் போனார்களாம், அப்படி அவர் ஒளித்து வைத்த இடம்தான் திரு+கடம்+ஊர் என்று அழைக்கப் படுகிறதாம்.,

சிவனுக்கு அமிர்தகடேஸ்வரர் என்று பெயர், பாற்கடலில் கடைந்து பெறப்பட்ட அமுதக் கலமே இங்கு சிவலிங்கமாகி இருப்பதாய்ச்

சொல்கிறார்கள். சிவன் சன்னதியைச் சுற்றி சின்னச் சின்ன பல்லக்குகளில் ஸ்வாமி விக்கிரகங்கள் இருக்க, நிறைய அறுபதாம், எழுபதாம்

கல்யாணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

நம் ஊாில் பிள்ளைகள் பாீட்சையில் ‘இந்தியாவின் தலைநகரம் – பம்பாய் ‘ என்று தவறாய் எழுதிவிட்டு வீட்டுக்கு வந்து ‘கடவுளே, இந்தியாவோட

தலைநகரம் பம்பாயா இருக்கணுமே ‘ என்று பிரார்த்திப்பது போல, ராஜாவிடம் அமாவாசையைப் பெளர்ணமி என்று தவறாய்ச் சொல்லிவிட்டு,

அதைச் சாியாக்குவதற்கென்று அபிராமி அந்தாதி பாடி, அபிராமி அருளால் பெளர்ணமியைத் தோற்றுவித்த அபிராமி பட்டர் வாழ்ந்த தலம் இது., அபிராமி

சந்நதி அதிகம் கூட்டமில்லாமல் இருட்டாய் இருக்கிறது., உள்ளே நுழைகையில் அபிராமி பட்டரோ, அபிராமி அந்தாதியோ நினைவுக்கு வராமல்

கண்ணதாசனின் ‘சொல்லடி அபிராமி, வானில் சுடர் வருமா, எனக்கு இடர் வருமா ‘ என்னும் பாடலும், கமலஹாசனின் ‘அபிராமி, அபிராமி., ‘ அரற்றலும்

நினைவுக்கு வருகிறது என்றால் அதற்கு என்ன காரணமோ தொியவில்லை., நேர நெருக்கடி இல்லாமல் தாிசிக்க முடிந்தது என்றாலும்,

அர்ச்சகர்கள் சமஸ்கிருதத்திலேயே மந்திரங்கள் சொல்வது கொஞ்சம் உறுத்துகிறது., அபிராமி அந்தாதி வழிபாட்டிற்கு ஆகாதா

தொியவில்லை.,

கோயிலில் ஒரு யானை அழகாய் தழை ஒடித்துத் தின்று கொண்டிருக்கிறது, காசு கொடுத்தால், தழையைக் கீழே போடாமலே வாங்கிக்

கொண்டு ஆசிர்வாதம் செய்துவிட்டு ஆவலாய் கைநீட்டுகிற பாகனிடம் அதைத் தர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது., பிரசாதம் சாப்பிடலாம் என்று

தரையில் உட்கார்ந்தால் ஆடுகள் சுற்றி வந்து தொந்தரவு செய்து கையிலிருப்பதை பிடுங்கித் தின்கிறது (லட்டு சாப்பிடுகிற ஆட்டை அன்றுதான் பார்த்தேன்

;-)., பிரகாரம் சுற்றி வருகையில் சுவரோரமாய் பொிய பொிய தேர் வடக் கயிறுகள் இழுப்பாாின்றி எறியப் பட்டிருக்க, அவற்றினிடயே ஒரு

புத்தம்புது ஜெனரேட்டர் – புதுக் கவிதை போலிருந்தது.,

பூம்புகார் இன்னொரு நல்ல அனுபவம்., கடலும் பெப்ஸோடன்ட் விளம்பர வாசகம் போல ஓயாமல் சண்டையிடுகிற அலைகளும் ஒரு அழகு

என்றால், பூம்புகார் கலைக்கூடம் இன்னொரு அழகு. சிலப்பதிகாரத்தின் முக்கியக் காட்சிகளை 49 சிற்பங்களாக வடித்து

வைத்திருக்கிறார்கள், ஒவ்வொரு சிற்பத்தின் மேலும் அந்தக் காட்சி தற்காலத் தமிழில் விவாிக்கப் பட்டிருக்கிறது, அதன்கீழே, அந்த சம்பவத்தை

விவாிக்கும் சிலம்பின் வாிகள் – ஒரு முறை சுற்றி வந்து 49 வாிகளையும் வாசித்தபிறகு, ஒரு சின்ன சிறுகதை வாசித்தது போல் ஒரு உணர்வு,

சிலப்பதிகாரம் பற்றி அறியாத சிறு பிள்ளைகளுக்கு இதைத் தந்து வாசிக்கச் சொல்லலாம்., கையில் கேமெராவும் இல்லை, எல்லாம்

எழுதி வைத்துக் கொள்ளக் காகிதமும் இல்லை, அதுதான் பொிய வருத்தம்.,

சிற்பங்களிலும் சில ஆச்சாியங்கள் இருக்கிறது, ஒரே காட்சியில் விவாிக்க முடியாத சில சம்பவங்களை படிப் படியாய் விவாிக்கிறார்கள் – படிப்

படியாய் என்றால் நிஜ படிப் படி, சிற்பத்திலேயே படி போன்ற அமைப்புகள் செய்து, ஒவ்வொரு படியிலும் ஒரு காட்சி, நம் காமிக்ஸ் strips

போலிருக்கிறது. வழக்குரை காதையில் கண்ணகி உடைக்கிற சிலம்பிலிருந்து சிதறுகிற துளிகளை நிஜமாய்ப் பார்ப்பது போல

செய்திருக்கிறார்கள், மேலே தெறித்துவிடுமோ என்று சற்று தள்ளி நிற்கத் தோன்றுகிறது.,

பாவை மன்றம் என்று சிலம்பில் குறிப்பிடப் பட்டிருக்கிறதே, அதற்கும் ஒரு மண்டபம் இருக்கிறது., அரசனோ அறங்கூறு அவையமோ தவறான தீர்ப்பு

சொன்னால் கண்ணில் நீர் உகுத்து இந்தப் பாவைகள் அழும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்., இந்தக் காலத்தில் இதெல்லாம் வழக்கத்தில்

இருந்தால் நன்றாயிருக்கும், நம் ஊருக்குத் நீர்ப் பஞ்சமே வருவதற்கில்லை என்று நினைத்துக் கொண்டேன்.,

பாவை மண்டபத்திலும் ஒரு புதுமை செய்திருக்கிறார்கள், திருக்குறளின் இன்பத்துப் பாலிலிருந்து எட்டுக் குறள்களைத் தேர்ந்தெடுத்து – எட்டுப்

பாவைகளை எண் கோண வடிவிலான மண்டபத்தில் செதுக்கியிருக்கிறார்கள்., ஒவ்வொரு குறளிலும் வருகிற பெண்கள் வெவ்வேறு விதம்,

வெவ்வேறு முகபாவம் என்று கவனமாய்த் தேர்ந்தெடுத்துச் செதுக்கியிருக்கிறார்கள்., அற்புதமாய் இருக்கிறது., ஒரு குறளில் சின்ன எழுத்துப்

பிழை இருக்க (ஒரு துணைக்காலை விட்டு விட்டார்கள்)., அதை யாரோ கவனமாய்த் திருத்தி எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள்.,

அந்த எட்டுக் குறள்கள் –

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்காற்
தான்நோக்கி மெல்ல நகும்

(நான் பார்க்கும்போது நிலத்தைப் பார்க்கிறாள், நான் பார்க்காதபோது என்னைப் பார்த்து மெல்லச் சிாிக்கிறாள்)

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

(கண்ணோடு கண் சேரும்போது, வார்த்தைகளுக்கு அவசியமில்லை)

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

அனிச்சப்பூ, அன்னப் பறவையின் சிறகு – மென்மையான இவைகூட பெண்களின் காலடிக்கு நெருஞ்சியாய்த் தோன்றும்)

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு

(பசலையால் என் உடல் நிறம்மாறி வெளுப்பது எனக்குப் பெருமைதான், அவன் தந்ததுதானே இதெல்லாம் !)

துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவர் விரைந்து

(தூங்கும்போது தோள்மேல் சாய்ந்திருந்தவன், விழிக்கும்போது என் நெஞ்சில் புகுந்து கொண்டான்)

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்

(அவன் வருகின்ற வழியைப் பார்த்து என் கண்கள் ஏங்கின, வராதுபோன நாட்களை சுவாில் ஒற்றி ஒற்றி எண்ணிப் பார்த்ததில் விரல்களும் தேய்ந்தன)

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை

(நெருப்பைப் போல என்னைத் துன்புறுத்துகிற மாலையை, ஆயர்குலச் சிறுவனின் புல்லாங்குழல் இசை அறிவித்து, என்னைக் கொல்கிறது)

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து

(கண்ணில் மையெழுதும்போது அதை எழுதும் கோல் கண்ணுக்குத் தொிவதில்லை, அதுபோலதான், அவனைப் பார்க்கிறபோது அவன் குறைகள்

தொிவதில்லை)

ஒவ்வொரு குறளிலும் படிக்க முடிகிற ஸ்வாரஸ்யமான, காதல்வயப் பட்ட இந்தப் பெண்களை, அங்கே பார்க்க முடிகிறது. தத்ரூபமான சிலை

வடிவமைப்பு., சிற்பிகளின் பெயர் ஏதும் குறிப்பிட்டிருந்ததாய் நினைவில்லை.

ஊாில் இன்னொரு ஸ்வாரஸ்யம் சிலம்பு., கடைகள் முதல் இரும்புக் கதவுகள் வரையில் எங்கும் சிலம்பு, சில கடைகளின் பெயர்ப்

பலகைகளில் ஊர் பெயருக்குப் பதிலாய் ஒரு சின்ன சிலம்பின் படத்தைத்தான் வரைந்திருக்கிறார்கள் (வரைவதற்கு மிக எளிது !) பத்தினிக் கோட்டம்

என்னும் கண்ணகி கோயிலுக்குள் சின்னஞ்சிறுவர்கள் கிாிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்., அந்தக் கோயிலில் பெயரும்

சிலம்பு வடிவத்தில்தான் அமைத்திருக்கிறார்கள்., நான் சிலம்பைப் பார்க்காத ஒரே இடம் – ஒரு ஹோட்டலின் பெர்ர்ர்ர்ாிய பெயர்ப்

பலகை, அதில் தேவயானி நெல்கதிர்களால் பாதி முகத்தை மறைத்து வெட்கம் காட்டுவதாய் வரைந்திருந்தார்கள், அந்தப் பெண் சிலம்பு

அணிந்திருந்ததாய்த் தொியவில்லை.,

போகிற, வரும் வழியெல்லாம் அலங்கார வளைவுகள் – அரசியல் கூட்டங்கள் ஞாபகத்தில் சொல்லிவிட்டேன் மன்னியுங்கள் – வழியெல்லாம்

தோரண வாயில்கள்., ‘கண்ணகி ‘., ‘மாதவி ‘., ‘கோவலன் ‘, ‘இளங்கோ ‘ என்று அவற்றிற்குப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்., (மாதவி தோரண வாயில்தான்

முதல் முதலில் இருக்கிறது என்று நினைவு., ஏன் ? ? ? ?)

ஊருக்குள் நுழையும்போதும் சாி, வெளியேறும்போதும் சாி, சிலப்பதிகாரம் என்கிற அந்த காவியத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை,

ஊாின் ஒவ்வொரு அசைவும் ஏதேனும் ஒரு விதத்தில் கண்ணகியையோ, கோவலனையோ நினைவுபடுத்துகிறது, ஒரு காப்பியத்திற்கேற்ற அழகான

நினைவுச் சின்னம். அன்றைக்கு இதைச் செய்து முடித்த அந்நாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியை நன்றியோடு நினைவு கூர்கிற அதே

நேரத்தில், ஊாில் பல பகுதிகள் சிதிலமடைந்திருப்பதைக் கவனிக்குமாறு இன்னாள் முதல்வர், அதே கலைஞாிடம் வேண்டுகோளும் விடுக்க வேண்டும்.

கடலோரப் பகுதி என்பதால் நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப் படும், அவைகளைக் கவனித்துச் செய்தால், பூம்புகார் ஒரு உயிருள்ள

நினைவுச் சின்னமாய் நீண்டநாள் நிலைத்திருக்கும். **

Series Navigation

author

லாவண்யா

லாவண்யா

Similar Posts