This entry is in the series 20040422_Issue

நளாயினி தாமரைச்செல்வன்.


மூன்று வயதிலேயே
பள்ளி பேக அடம்பிடித்ததாய்
அப்பா அடிக்கடி கூறி
பெருமைப்பட்டுக்கொள்வார்.
சனி ஞாயிறு தினங்களிலும்
பள்ளி போக அழுது புரள்வது
எனது சிறுவயது குணம்.
போயா தினங்களிலும்
அழுது அடம்பிடிக்கும் என்னை
பள்ளி வாசல் வரை
கூட்டிச்சென்று
கூட்டி வருவார் அப்பா.
வீடும் தனிமையும்
ஆயாவின் பராமாிப்பும்
அன்று பிடிக்காததாலா .. ?
தொியவில்லை எனக்கு.
எனது ஆதே செயலை
மகன் இப்போ செய்கிற போது
தனித்து விடப்பட்ட உணர்வை
தான் உணர்கிறதாக
உரத்துச் சொல்லி அழுகிறான்.
—-
ஆக்கம்
நளாயினி தாமரைச்செல்வன்.
சுவிற்சலாந்து.
19-04-2004

Series Navigation