அன்புள்ள திரு சிவகுமார்

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

கார்கில் ஜெய்


lயாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

அன்புள்ள திரு சிவகுமார்,

Ref: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80711017&format=html

உஙகள் கேள்விக்கு பதில் மற்றும் நடந்தது இதுவே : மதிப்பிற்குரிய வாசந்தி அவர்கள், சற்றே பிழறி எழுதிள்ளதாக குறிப்பிட்டு திரு. மலர்மன்னன் தன்னுடைய அனுபவத்தையும், வேறுகோணப் பார்வையயும் வெளியிட்டு உள்ளார். இதில் பெரும்பகுதி அனுபவமும் கருத்துமே; மிகச்சிறிதளவே சாடல். அதிலும் எழுத்தைதான் சாடினாரே தவிர எழுதியவரை அன்று. காய் இருப்ப கனி பகர்ந்துள்ளார்.

இதற்கு மாற்று கருத்தை வாசந்தி அவர்கள் தார்மீக பொருப்புள்ளதாக கருதி வெளியிடலாம். அல்லது அவகாசமின்மையால் விட்டு விடலாம். எப்படி செய்தாலும் திண்ணை விஞ்சிய அவர் புகழ் குறையாது.

இப்போது உஙகள் கடிதத்துக்கு வருவோம்: நீஙகள் திரு மலர்மன்னன் அவர்களை, திண்ணையை சாடியுள்ளீர். காய் கவர்ந்துள்ளீர். ‘ஒண்டிக்கு ஓண்டி’ கூப்பிடுவதை தவிர மற்றெல்லாம் செய்துள்ளீர்.

அனைவரின் நேரத்தையும் வீணாக்காமல், உங்கள் சிந்தனையை தூண்ட என் மனதில் எழும் சில கேள்விகளை முன் வைக்கிறேன். நீஙகள் கண்ணியமானவர் என்றே கருதுகிறேன். இவற்றுக்கு நீங்கள் பதில் அளி£க்க தவறினால், எதோ சற்று வருத்தத்தில் மனதில் பட்டதை எழுதினீர் எனக்கொள்வேன். வெகு சில கேள்விகள் (மட்டும்) :

1) தன்னுடைய கருத்தை பணிவுடன் சொல்லிய மலர்மன்னன் நாட்டாமை என்றால்,’ நா காக்காமல் எழுதியவர் கட்டை பஞ்சாயத்து நடத்தும் அடியாட்களின் தலைவரா?’ என்னும் கேள்வி எழுகிறது இல்லையா?

2) எப்பொழுது மலர்மன்னன் ‘யார், எவரைப் பற்றி எழுதக்கூடாது’ என்று சொன்னார்? ‘எழுதுவதை ஆராய்ந்து எழுத வேண்டும்’ என்றுதானே சொன்னார் ? ‘ஆராய்ந்து எழுத வேண்டும்’ என்று கூறிய அவரை ‘கூடாது’ என்கிறீர் நீர். இதில் பத்வா வேலை மலர்மன்னன் செய்வதா? அல்லது ‘வாசந்தி அவர்கள் கருத்துக்கு எதிராக மலர்மன்னன் எழுதக்க்கூடாது’ என்று சொல்வதா?

3)’மலர்மன்னன் காந்தியின் கார்யதரிசியா?’ என்று கேட்டீர். ‘திரு இந்திரா பார்த்தசாரதி ஏன் திண்ணையில் எழுதவில்லை? என்று தெரிந்து இருப்பவர் திரு இந்திரா பார்த்தசாரதியிடம் கார்யதரிசியாக இருந்ததாரா?’ அல்லது ‘பணம் கொடுத்தால் மலர்மன்னன் ஓடோடிப் போய் எழுத மாட்டாரா? என்று கேட்பவர் மலர்மன்னனிடம் கணக்கு பிள்ளையாக பணி செய்தாரா?’ என்றெல்லாம் நானும் பதிலுக்கு கேள்வி எழுப்பினால் அது நாகரீகமாகுமா?

4) கருத்து வேறுபட்டாலே பிறர் திண்ணையில் எழுதுவதை நிறுத்திடுவர் என எண்ணும் நீர், நேரடியாக சேற்றை வாரி இறைத்தால் மலர்மன்னனும் திண்ணையில் எழுதுவதை நிறுத்தி விடுவாரே என்று வருத்தமில்லையா ? உங்கள் கடிதம் படிக்கும் பல வாசகர்கள் திண்ணை மீது தப்பெண்ணம் கொள்ள மாட்டார்களா?

திரு சிவகுமார், உங்கள் எழுத்தை மட்டுமே வைத்து உங்களை மேலும் பல கேள்விகள் கேட்க இயலும். என் விருப்பம் அதுவன்று. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் எழுத்துக்கள் பலமுறை திண்ணையில் அரங்கேறியுள்ளன. அதே திண்ணையைத்தான் நீங்கள் பா.ஜ .க வின் ப்ரசார பீரங்கி என்கிறீர். ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் ‘ஹிந்து மதத்தினர் மனிதப் பலி கொடுக்கின்றனர்’ என்று எழுதினார். அதை ப்ரசுரித்த திண்ணை, அதை எதிர்த்து நான் எழுதிய தரமுள்ள கடிதத்தை நிராகரித்தது. அதே திண்ணையைத்தான் நான் நடுநிலை ஏடு என்கிறென். ஏன் தெரியுமா:

குணம்நாடி குற்றமும் நாடி அதில் மிகை
நாடி மிக்க கொளல்

தவற்றுக்கும் சிரமத்துக்கும் மன்னிக்கவும்.

கார்கில் ஜெய்


jaykumar.r@gmail.com
kargil jay

Series Navigation