அன்புள்ள சோனியாகாந்திக்கு

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

வரதன்


பட்டொளி வீசிப் பறக்க்கும் தாயின் மணிக்கொடி சற்றே மேனியில் பட்டால் ஒரு சிலிர்ப்பு எங்களுக்கு ஏற்ப்படும்… உங்களுக்கு அந்த அனுபவம் உண்டா… ?

எங்கள் தாயும் தந்தையும் பாட்டனும் மகிழ்ந்து வாழ்ந்த/ வாழும் நாடு எங்கள் பாரத நாடு.

நாகரீகத்தில் பல ஆயிரம் வருடங்கள் முன்பே வரலாறு கொண்ட நாங்கள், சற்றும் அடுத்த நாடு சென்று கொள்ளையடித்ததோ, இல்லை மதத்தைப் பரப்புகிறோம் என்று மக்களை விலை பேசியதோ இல்லை.

மதத்தின் பெயரால் மிகப் பெரிய அழிவை உலகின் எந்தப் பகுதியிலும் ஏற்படுத்தியதில்லை.

சாத்வீகமான, போருக்கு தயாரற்ற நிலையினலோ என்னவோ, பொருளுக்காகவும், மதமாற்றத்திற்காகவும் நாங்கள் வரம்பு மீறப்பட்டோம்.

இதோ, நாங்கள் சகிப்புத்தன்மையுள்ளவர்கள் என்பதன் உச்சம், எங்கள் நாட்டின் பிரதம மந்திரி. ஒரு சீக்கியர், ஜனாதிபதி ஒரு முஸ்லீம், ஆட்சியின் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் நீங்கள் ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவர் & வெளிநாட்டில் பிறந்தவர்.

பெரும்பான்மை இந்துவோ இன்று , தேசியக்கொடிக்காக முதல்மந்திரி பதவியைத் துறந்து கொண்டு….

அவர், பாகிஸ்தான் எல்லையிலோ இல்லை எல்லைதாண்டியோ கொடி ஏற்றச் செல்லவில்லை. இல்லை, ஒரு விநாயகர் விக்கிரகத்தை, முகலாய மன்னர்களால் மசுதியாக மாற்றப்பட்ட இடத்திற்குச் எடுத்துச் செல்லவில்லை. அவர்கள் சென்றது எங்களின் தேசியக் கொடியை ஏற்றச் சென்றார். அதுவும், நாட்டின் உட்பகுதியில். அதற்கு எதிர்ப்பு. கலவரம்.

அதற்கு உங்களின் மறைமுக ஆதரவோ இந்தக் கைது அறிவிப்பு… ?

ஏன், நீங்கள் அந்தப் பகுதியில் சென்று தேசியக் கொடியை ஏற்றக் கூடாது – அதாவது இந்திய தேசியக் கொடியை இந்தியாவிற்குள்…. ?

10 வருட விஷயத்திற்கு வேறு வடிவம் கொடுக்க முயற்சி செய்யும் நீங்கள், ஏன் சற்றே கொஞ்சம் பின்னோக்கிச் செல்லக் கூடாது… ?

இந்திரா காந்தி செய்த பொற்கோவில் அத்து மீறலுக்கு தனிப்பட்ட முறையில் சிலர் பழி தீர்க்கப்பட்ட போது , எத்தனை ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள், கற்பழிக்கப்பட்டார்கள்.

ஜாலியன்வாலா படுகொலையை சாதாரணம் என்று சொல்லச் செய்யும் அப்படுகொலைகளுக்கு ‘ஒரு ஆலமரம் வீழ்ந்தால், பாதிப்பு இருக்கத்தான் செய்யும் ‘ என்று உங்கள் கணவர் ராஜீவ் திமிராகச் சொன்னார்.

அந்த சம்பவத்தை கொஞ்சம் மீண்டும் விசாரிக்கச் சொல்லி தீர்பெழுதினால், உங்கள் கட்சிகாரர்களின் அந்த இரக்கமற்றச் செயலுக்கு நீங்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவரே… ? தெரியுமா… ?

இந்தியாவின் ஒவ்வொரு சதுர மில்லி மீட்டரும் நமது பாரதகொடி ஏற்றப்பட வேண்டிய இடம்…

கொஞ்சம் திருப்பூர் குமரன், பகத்சிங், நேதாஜி, வாஞ்சிநாதன் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

சுதந்திரம் காந்தியத்தால் மட்டும் வந்ததில்லை.

கொடியேற்றம் கேள்விக்குறியானால், ஒட்டு மொத்த இந்தியாவே கிளர்ந்தெழும்…. ஒவ்வொருவரும் வாஞ்சிநாதன் ஆவார்கள்

இவண்

வரதன்

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>